Sunday, 29 May 2011

எதற்கு எந்த பொய்...


எப்போதும் உண்மையே பேசுங்கள்..
நீங்கள் பொய் பேசினால் அந்த
பொய்யை நீங்கள் காப்பாற்ற
வேண்டும்..

அதேநேரம் நீங்கள் உண்மை
பேசினால் அந்த உண்மை உங்களை
காப்பாற்றும்..

ஒரு பொய்யை மறைக்கப் பல பொய்கள்
சொல்ல வேண்டும்..

ஒரு உண்மையை சொல்ல அப்படி
எதுவும் செய்ய வேண்டியதில்லை..

“தர்மத்தின் வாழ்வுதனை சூது
கவ்வும் ஆனால் தர்மமே
வெல்லும்”

இது எல்லோருக்கும் பொருந்தும்.. 
தாமதமாகக் கிடைத்தாலும் தர்மத்திற்கு
என்றுமே மதிப்பு உண்டு..

உண்மை பேசுவதில் இருக்கும்
இன்னொரு சிறப்பு என்னவென்றால்,
நீங்கள் என்ன சொன்னீர்கள்
என்பதை நினைவில் வைத்திருக்க
வேண்டியதில்லை.. உண்மை என்றும்
மாறப்போவதில்லை..

பொய் சொல்பவர்களுக்குத் தான் 
நினைவாற்றல் அதிகமாக இருக்க வேண்டும்.
பொய் சொன்னால், யாரிடம்
என்ன சொன்னோம், எங்கே சொன்னோம்
என்றெல்லாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்..

எப்போதும் உண்மையையே பேசுங்கள். 
உங்கள் மனதிற்கு உண்மையாய் இருங்கள்.. 
பொய்யாக நடிக்காதீர்கள்.. 
மனதிற்கு பிடிக்காததை செய்ய வேண்டாம்..
அது அனைவருக்கும் வருத்தத்தையே தரும்..

வாழ்க்கை என்பது ஒரு முறைதான்..
அதை நன்றாக வாழ்ந்தோம் என்ற மனநிம்மதியை 
நீங்களே உங்களுக்குத் தாருங்கள்...

No comments:

Post a Comment