Showing posts with label சமூக அவலம்... Show all posts
Showing posts with label சமூக அவலம்... Show all posts

Tuesday, 26 June 2012

லிபியா-கதாஃபி : 'போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்'

லிபியா-கதாஃபி : 'போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்'

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல்... இராணுவப்புரட்சி மூலம் சண்டையின்றி இரத்தமின்றி ஆட்சியை கைப்பற்றிய...

கதாஃபி...
(லிபிய மக்களுக்கு)
மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..!
'தான் மட்டுமே என்றும் லிபியாவை ஆளவேண்டும்' என நினைக்காத வரை..!

கதாஃபி...
(லிபிய மக்களுக்கு)
மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..!
தந்நாட்டு மக்களை அநியாயமாக கொன்று குவித்து கொலைகாரன் ஆகாதவரை..!

இந்த லிபிய மக்கள் கடாஃபியின் கீழ் எப்படி வாழ்ந்தார்கள்..? ஆட்சியாளரான கடாஃபியின் ஆட்சி எப்படி இருந்தது..? அது பற்றி மேற்கத்திய சியோனிச ஊடகங்களால் மறைக்கப்பட்ட உண்மைகளை இனியும் நாம் அறியாதிருக்க கூடாது சகோ..!அவற்றில் சில உங்கள் ஆச்சர்ய பார்வைக்கு..!
  • 'ஒவ்வொரு லிபியரிடமும் ஒரு வீடு இருந்தாக வேண்டும்' என்று அறைகூவி, அப்படியே அரசின் மூலம் மக்களுக்கு வீடு கட்டிக்கொடுத்தும் வந்தார்..! எப்படி..? புதிதாக திருமணம் ஆன தம்பதியருக்கு அரசு மொய் வைக்கும்..! எவ்வளவு தெரியுமா..? 60,000 லிபிய தினார் (50,000 அமெரிக்க டாலர் = அதாகப்பட்டது... சுமார் 24 லட்ச ரூபாய்ங்க சகோ..!) எதுக்காம்..? அவர்களுக்கான ஒரு வீடு வாங்க..!
  • மதுவை தடை செய்த கடாஃபி, லிபியாவில் கல்வி முற்றிலும் இலவசம் என்றார். அவர், 1969-ல் ஆட்சியை கைப்பற்றியபோது 25 % இருந்த லிபிய நாட்டின் கல்வி கற்றோர் எண்ணிக்கை...இப்போது... 83 %..! நாட்டின் மக்கள் தொகையில் 25%லிபியர்கள் பல்கலைக்கழக பட்டம் பயின்றவர்கள்..!
  • லிபியருக்கு தேவைப்படும் கல்வியோ மருத்துவமோ லிபியாவால் தர இயலவில்லை எனில், லிபிய அரசு செலவில் இலவசமாக வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்து அவை தரப்படும்..! அதுமட்டுமா..? அகாலத்தில்... மாசத்துக்கு 2,300 அமெரிக்க டாலர் (சுமார் 1,12,000 ரூபாய்) பயணப்படியாகவும் அவர்களுக்கு அளிக்கப்படும்..!
  • லிபியாவில் படித்து பட்டம் பெற்ற ஒரு லிபிய பட்டதாரிக்கு'வேலை இல்லை' எனில், அந்த பட்டப்படிப்புக்கு தக்க வேலை கிடைத்தால் என்ன சம்பளம் அவருக்கு கிடைக்குமோ, அது அப்படியே அரசின் கஜானாவிலிருந்து அந்த வேலை இல்லா பட்டதாரிக்கு 'படி'-யாக வந்து சேர்ந்துவிடும்..!
  • EB பில் என்றால் என்னவென்றே லிபியர்களுக்கு தெரியாதாம்..! லிபியாவில் தடை இல்லாத மின்சாரம் உண்டு... முற்றிலும் இலவசமாக..!
  • மாதம் தோறும் அரசு ரேஷன் கடையில் பொருட்கள் மிகக்குறைந்த விலைக்கு வாங்கிக்கொள்ளலாம். இந்த சலுகை குடிமகன்களுக்கு மட்டுமல்ல..! வெளிநாட்டிலிருந்து அங்கே சென்று வேலை பார்ப்பவர்களுக்கும்..! (இத்தகவல்- லிபியாவில் வேலை செய்துவிட்டு பின்னர் என் நிறுவனத்தில் வேலை செய்த பொறியாளர் திரு.D.S.V.பிரசாத் சொன்னது)
  • லிபியாவின் எந்த வங்கியிலும் கடன் பெற்ற லிபியரிடம் அந்தகடனுக்கான வட்டியே வசூலிப்பது கிடையாது..! அசலை மட்டும் அவர் திருப்பித்தந்தால் போதும்..!
  • ஒரு லிபியர் விவசாயம் செய்ய நாடினால்... 'வாங்க வாங்க' என்று அரசே வரவேற்று அவருக்கு தேவையான நிலம் தந்து, பண்ணை வீடு தந்து, விதை தந்து, உரம் தந்து, பாசன வசதி தந்து... ம்ம்ம்... எல்லாமே இலவசம்ங்க சகோ..!
  • ஒரு லிபியர் கார் வாங்க எண்ணினால்... என்ன வகை காராக இருந்தாலும் சரி... உடனே அரசு 50% பில்லை கட்டிவிடும்..!
  • அப்போ...பெட்ரோல் விலை..? ஹி... ஹி... லிட்டர்ஆறேமுக்கால் ரூபாய்ங்க சகோ..! (அட..! சவூதியை விட முப்பது பைசா விலை குறைவா இருக்கே..!)
  • லிபியாவுக்கு பிறநாட்டிலோ... IMF-இலோ எங்குமே கடனே இல்லையாம்..! ஆனால், 150 பில்லியன் அமெரிக்க டாலருக்கு லிபியாவுக்கு வரவேண்டிய பணம்தான் வெளியே நிற்கிறதாம்..!
  • ஆட்சியை கைப்பற்றியவுடனேயே, லிபியாவில் இருந்த அமெரிக்காவின் மிகப்பெரிய விமானதளத்தை மூடச்செய்து, எண்ணெய் கம்பெனிகளை பன்னாட்டு ஏகாதிபத்திய கம்பெனிகளின் கரங்களிலிருந்து பறித்து அரசின் பங்குகளை உயர்த்தி அவற்றை லிபிய அரசு வசமாக்கினார்., கடாஃபி. அதிலிருந்து உலகிற்கு விற்கின்ற எண்ணெயில் ஒவ்வொரு லிபியருக்கும் கூட அவருக்கு உரிய பங்கு உண்டு என்றார். அது மக்களின் தனி வங்கிக்கணக்கில் சேர்ந்து விடும்.
  • ஒரு தாய் ஒரு குழந்தையை ஈன்றேடுத்தால் அவருக்கான லிபிய அரசின் சன்மானம் சுமார் 2.5 லட்சம் ரூபாய்..!
  • 40 ஸ்லைஸ் வெட்டுத்துண்டுகள் போடப்பட்ட ஒரு மிகப்பெரிய பிரட் பாக்கெட் விலை ஏழு ரூபாய் முப்பது காசுதான் லிபியாவில் விற்கிறது..!
  • நீரற்ற வறண்ட நாடான லிபியாவின் முழுப்பாலைவன மக்களும் தண்ணீர் பெற வேண்டி... உலகிலேயே மிகப்பெரிய நீர்ப்பாசன திட்டம் (Great Man-Made River project)நிறைவேற்றியவர் கடாஃபி மட்டுமே..!
கடாஃபி..! ஒருகாலத்தில் லிபிய மக்களின் புரட்சித்தலைவர்..!
இப்பேர்பட்ட சிறந்த ஆட்சியாளர்தான்... சிறந்த ஆட்சியாளராக இருந்தவர்தான் கடாஃபி..! எகிப்தின் ஹோஸ்னி முபாரக் போலவோ, டுனிசியாவின் பென் அலி போலவோ நிர்வாகத்திறமை அற்றவரோ... ஊழல்வாதியோ அல்லர்..! இவர்களுக்கு இடையே உள்ள ஒரே பெரிய வித்தியாசம்... அமெரிக்க-பிரிட்டிஷ்-ஐரோப்பிய நாடுகளின் ஏகாதிபத்தியத்துக்கு முழுமையாக எவ்வித நிபந்தனையும் விதிக்காமல் அடிபணியாதது மட்டுமே..!

இவரைப்போயா... இவ்வளவு சிறந்த சர்வாதிகாரியையா(!?) லிபிய மக்கள் எதிர்த்தனர்..? அல்லது எதிர்த்த புரட்சியாளர்களை கொல்லவும் அனுமதித்தனர்..? ஆமாம்..! ஏன்..?

லிபிய புரட்சியாளர்கள்...
அவர்களும் மிகவும் நல்லவர்கள் தான்..!
ஒரு கொலைகார சர்வாதிகாரியை கொல்ல இன்னொரு கொலைபாதக நேட்டோ பயங்கரவாதிகளின் உதவியை ஒப்புக்கொள்ளும் வரை..!

கதாஃபி...
(அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்திய பயங்கரவாதிகளுக்கு)
மோசமான ஆட்சியாளர் ஆனார்..! எப்போது..?

"லிபிய மற்றும் அரபுலக எண்ணெய்க்கான வர்த்தகம் இனி அமெரிக்க டாலரில் அல்ல... தங்கத்தில் தான் இருக்க வேண்டும்"என்று சொல்லும் வரை..!

முன்னர் நடந்த இதையும் கூட... மறந்திருக்க மாட்டீர்கள் சகோ..!

அன்று... அமெரிக்காவின் நண்பனாக இருந்து அவர்களின் ஆயுதங்கள் மூலம் ரஷ்ய ஆயுதங்கள் வைத்திருந்த ஈரானுடன் போர் புரிந்த இராக்கின் அதிபர் சதாம் ஹுசேன், தன் எண்ணெய் வெறியால் பின்னர் குவைத்தை ஆக்கிரமித்ததால் அமெரிக்காவின் எதிரியானார்..!

விளைவு..?

அமெரிக்க "நவீன ஆயுதங்களுக்கும்", அமெரிக்க "அதிநவீன ஆயுதங்களுக்கும்" இடையே வளைகுடா போர் மூண்டது..! அதன் முடிவில், குவைத் விடுதலை அடைந்தவுடன், அந்த ஆத்திரம்..."இனி இராக்கிய எண்ணெய் பரிவர்த்தனை புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் 'ஈரோ' நாணயத்தில்தான் நடைபெறும்" என்று சதாம் ஹுசேன் அறிவித்த பின்னர், "WMD (Weapons of Mass Destruction) வைத்திருக்கிறார் சதாம் ஹுசேன்" என்று பொய்கூறி இராக்கில் நுழைந்ததே அமெரிக்க பிரிட்டிஷ் படைகள்..! (ராஜீவ் சந்திரசேகரனின் Green Zone என்ற ஹாலிவுட் படம் பாருங்கள் சகோ..!)

'ஈரோ'விற்கே அந்த கதி என்றால்... கடாஃபி, தங்கம் கேட்டால்..? இதோ... ஆப்ரிக்காவில் ஒரு இராக்/ஆப்கானிஸ்தான்... உருவாக்கப்படுறது..! முன்னர் தாலிபானிடம் ரஷ்ய ஆதரவு ஆப்கானிய நஜிபுல்லா அரசை எதிர்த்து போரிடச்சொல்லி டன் டன்னாக வெடி பொருட்களையும் நவீன ஆயுதங்களையும் ஒசாமா மூலம் கொண்டு போய் ஆப்கானில் கொட்டி... நடுத்தெருவில் நஜிபுல்லாவை தூக்கில் போடவைத்தது போலவே... இப்போதும் ஆயுதங்களை கொட்டியுள்ளார்கள் லிபியாவில்..! அதேபோல நடுத்தெருவில் அடிபட்டு, உதைபட்டு, இழுபட்டு, சுடப்பட்டு கொல்லப்பட்டார் கடாஃபி..!

ஆட்சியாளர்களுக்கு ஒரு படிப்பினையாக...!
சில மாதங்களுக்கு முன்னர் நிராயுதபாணியாக தெருவில் இறங்கி புரட்சி செய்த குடுகுடு கிழவன் முதல், நடக்கத்தெரிந்த சிறுவன் கைகளில் எல்லாம் இன்று புதுப்புது நவீனரக ஆயுதங்கள், வெடிகுண்டுகள் எல்லாம் எப்படி முளைத்தன..? இங்கே photo gallery பாருங்கள்.

மகிழ்ச்சியில் குதித்து குதித்து வானத்தை நோக்கி "டம்... டம்" என்று சுடுகிறார்கள்..! அதில் ஒரு அதிபயங்கர துப்பாக்கி குண்டு வானில் சென்று வெடிக்கிறது..!!! என்னவொரு பயங்கர ஆயுதம்..!!! இந்த குண்டை உடலில் ஒருவன் வாங்கினால் பிழைக்க வழியே இல்லையே சகோ..? யு-ட்யூபில் அணிவகுக்கும் ஆதாரங்கள் இவை..!

Libya Rebels had NATO Weapons from Day 1 - Brand New
இவைகளை எல்லாம் தயாரித்து அன்போடும் பாசத்தோடும் நிராயுதபாணியாக நின்ற லிபியர்கள் கைகளில் அளித்த அந்த அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் இப்போது அவற்றை திரும்பியா வாங்கிக் கொள்வார்கள்..? பதிலுக்கு அந்த பயங்கரவாதிகள் இந்த கொலைகார புரட்சியாளர்களிடம் பிரதியுபகாரமாக கச்சா எண்ணெய் அல்லவா கேட்பார்கள்..? இதோ... இப்போதே ஆரம்பித்தும் விட்டார்களே..!

Stolen National Libyan Oil Exported By CIA Run Al-Qaeda Rebel Forces For Illegal Arms

இதனை லிபியர்கள் எதிர்த்தால்..? அப்போது, தங்கள் கைகளில் இருக்கும் அந்த ஆயுதங்களை லிபியர்கள் இனி என்னதான் செய்வார்கள்..? அடப்பாவமே..! இதோ... ஆப்ரிக்காவில் இன்னொரு ஆப்கன்/இராக் உருவாக்கப்பட்டு விட்டதா..!? இனி அமைதி காக்கும் நேட்டோ கூட்டுப்படைகள் லிபியாவில் நிரந்தரமாக தங்கிவிடுமா..?

லிபியர்கள் தங்கள் தலையில் அள்ளிப்போட்டுக்கொண்டது அமெரிக்க மண் அல்ல... அவர்களின் மலம்..! எத்தனை முறை குளித்தாலும் பல வருடங்கள் ஆகுமே... பயங்கரவாதம் எனும் அந்த துர்நாற்றம் நீங்கி... அமைதி எனும் அந்த வாசனை மீண்டும் வீச..!

எகிப்திலும் துனிசியாவிலும் அமெரிக்க நேட்டோ பயங்கவாதிகள் நுழையாததற்கு அங்கே லிபியா மாதிரி எண்ணெய் வளம் இல்லாமை மட்டுமே காரணம் அல்ல சகோ..! அந்தந்த நாட்டு அறிவுடைய ராணுவங்களும் மக்களும்தான் காரணம்..!

அரசுக்கு எதிரான புரட்சியாளர்கள் மீது ஏவப்பட்ட பென் அலியின் கொலைபாதக அடக்குமுறை கட்டளையை துனிசியாவின் ராணுவம் ஏற்கவில்லை.

அரசுக்கு எதிரான புரட்சியாளர்கள் மீது ஏவப்பட்ட ஹோஸ்னி முபாரக்கின் கொலைபாதக அடக்குமுறை கட்டளையை எகிப்தின் ராணுவமும் ஏற்கவில்லை.

அதனால்... அங்கே மக்கள் புரட்சியும் வெற்றிபெற்றது..! சர்வாதிகார ஆட்சியாளர்களும் உயிரோடு நாட்டைவிட்டு தப்பித்தார்கள்..!

ஆனால், லிபியாவின் ராணுவம் கடாஃபியின் கொலைபாதக அடக்குமுறை கட்டளையை ஏற்றது..! நிராயுதபாணியாக நின்ற புரட்சியாளர்களையும் பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி அநியாயமாக சுட்டுக்கொன்றது..! இதன் விளைவுதான் பழிதீர்க்க பொதுமக்களுக்கும் புரட்சியாளர்களுக்கும் ஆயுதங்கள் தேவைப்பட்டது.

திடுமென அவை அவர்களின் கைகளில் விதம் விதமாக தரப்பட்டன..! வெடித்தன..! பழிவாங்கும் உணர்ச்சிக்கு முன்னால்... கற்ற கல்வியோ... அனுபவித்த வாழ்க்கையோ... எதுவுமே அவர்களை சிந்திக்க வைக்கவில்லை..! லிபியர்களின் அறிவு அப்போது ஏனோ வேலை செய்யவில்லை..!

அதனால்... கடாஃபி,
அமெரிக்க நேட்டோ பயங்கரவாதிகளால் 'கொல்லவைக்கப்பட்டார்'...!
அல்லது...
புரட்சியாளர்களால் நேரடியாக கொல்லப்பட்டார்..!
அல்லது...
அமெரிக்க நேட்டோ பயங்கரவாதிகளால் மறைமுகமாக கொல்லப்பட்டார்..!

பின்வருவன எல்லாமே இனி... மற்ற சர்வாதிகாரிகளுக்கு சிறந்த படிப்பினைகள்..!
  • தான்மட்டுமே நாட்டை ஆளவேண்டும் என்று எண்ணாதீர்கள்..!
  • என்னதான் சிறப்பாக ஆட்சி செய்தாலும், தம்மைவிட வேறொருவர் இன்னும் சிறப்பாக ஆட்சி செய்வார் என்று நம்புங்கள்..!
  • மக்களில் ஒரு சாரார் தம்மை- தம் ஆட்சியை எதிர்த்தால்... பேசாமல் அதையே ஒரு வழக்காக நீதி மன்றத்தில் வைத்து, ஆட்சியாளர் குற்றவாளிக்கூண்டில் ஏறி தம் தரப்பு வாதங்களை வைத்து இருவருக்கும் பொதுவான நம்பகமான நீதிபதி கொண்டு அமைதியான முறையில் தீர்வு காணுங்கள்..! அதை நேரடி ஒளிபரப்பில் நாட்டு மக்களுக்கு காண-கேட்க அளியுங்கள்..!
  • எக்காரணம் கொண்டும் எதிர்க்கும் பொதுமக்கள் மீது கொலைபாதக அடக்குமுறை செலுத்தி கொன்று குவிக்காதீர்கள்..!
  • தன்னை சுற்றி எப்போதும் பெண்களை (பாதுகாவலர்கள் எனும் பெயரில்) வைத்துக்கொண்டு ஆடம்பரமாகவும் அசிங்கமாகவும் மக்களுக்கிடையே அநீதி இழைத்துக்கொண்டு வாழ்ந்தால்... மக்கள் உங்களை அடியோடு வெறுத்து விடுவார்கள்... நீங்கள் எவ்வளவுதான் சிறந்த ஆட்சியாளர் என்றாலும் கூட..!
அடுத்து...

இன்னொரு கேடுகெட்ட மோசமான படிப்பினை ஒன்றும் உள்ளது..! 

  • எண்ணெய் வளம் கொண்ட ஆட்சியாளர்களின் மண்டை மயிர்கூட இனி அமெரிக்க - பிரிட்டிஷ் - ஐரோப்பிய ஏகாதிபத்திய நலனுக்கு எதிராக அவர்களின் விருப்பத்துக்கு எதிராக ஆடிவிடக்கூடாது..! அப்படி மீறி ஆடினால்... அந்த தலையே கொய்யப்படும்..! அல்லது... கொய்யவைக்கப்படும்..!
மக்களே..! உலகின் பயங்கரவாதங்களுக்கு எல்லாம் மூலகர்த்தாவான... ஆயுதவியாபாரம் செய்யும் அமெரிக்க -ஐரோப்பிய- சியோனிஸ நேட்டோ பயங்கரவாதிகளை நாம் எப்போது இனங்கண்டு கொள்வது..? அமெரிக்கர்களே இவ்வுண்மையை புரிந்து கொண்டு "WALL STREET ஆக்கிரமிப்பு போராட்டம்" என்று ஆரம்பித்து விட்டார்களே..!

கடாஃபியின் இறப்புக்கு பின்னர், அவரின் ஆட்சி பற்றியும் நிகழ்கால லிபியா பற்றியுமான ஒரு 'அலசல்' அல்லது அதுபற்றியான ஒரு 'போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்', முற்றும்..!

வாழ்க்கை நேரத்தால் ஆனது..

கண்கள் தூக்கத்திற்கு சொந்தமானவை
கனவுகள் நம் வாழ்க்கைக்கு சொர்க்கமானவை...
“ஒரு பவுண்ட் தேனை சேகரிக்க, தேனீ இருபது லட்சம் மலர்களைத் தேடிச்செல்கிறது”. அது போல காலத்தால் அழிக்க முடியாத கனவு சுவடுகளைப் பதிக்க நினைக்கின்ற
வாழ்க்கையை நேசிப்பவர்கள், நேரத்தை நிச்சயமாக நேசிப்பார்கள். ஏனெனில் வாழ்க்கை நேரத்தால் ஆனது. நேரத்தின் மதிப்பு தெரியுமா? அப்படியானால் வாழ்க்கையின் மதிப்பும் தெரியும். இதோ! நேரத்தின் மதிப்பு என்னவென்று தெரிய ஒன்பது வழிகள்...
ஒரு மில்லி செகண்டின் மதிப்பு என்னவென்று
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவரைக் கேளுங்கள்.
ஒரு வினாடியின் மதிப்பு என்னவென்று
விபத்தில் உயிர் தப்பியவரைக் கேளுங்கள்.
ஒரு நிமிடத்தின் மதிப்பு என்னவென்று
தூக்கிலிடப்படும் கைதியிடம் கேளுங்கள்.
ஒரு மணி நேரத்தின் மதிப்பு என்னவென்று
உயிர் காக்க போராடும் மருத்துவரிடம் கேளுங்கள்.
ஒரு நாளின் மதிப்பு என்னவென்று - அன்று வேலை
கிடைக்காமல் போன தின கூலி தொழிலாளரைக் கேளுங்கள்.
ஒரு வாரத்தின் மதிப்பை அறிய ஒரு வார
பத்திரிக்கையின் ஆசிரியரைக் கேளுங்கள்.
ஒரு மாதத்தின் மதிப்பு என்னவென்று
குறை பிரசவமான ஒரு தாயைக் கேளுங்கள்.
ஒரு வருடத்தின் மதிப்பு என்னவென்று
தேர்வில் தோல்வியடைந்த மாணவனைக் கேளுங்கள்.
ஒரு வாழ்வின் மதிப்பு என்னவென்று
உலக சாதனையாளரிடம் கேளுங்கள்.

Tuesday, 4 October 2011

குழந்தைகளின் பாலியல் வன்முறைகளை தடுப்பது எப்படி?


குழந்தைகளுக்கு அவர்கள் நான்கு வயதாக இருக்கும் போதே பாலியல் வன்முறைகளின் சில கூறுகளை அவர்களுக்கு விளக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

மிக முக்கியமாக எது “நல்ல தொடுதல்”, எது “மோசமான தொடுதல்” எது “பாலியல் தொடுதல்” என்பதை குழந்தைகளுக்கு புரிய வைப்பது அன்னையின் கடமையாகும்.

நல்ல தொடுதல் அன்னையின் அரவணைப்பைப் போல ஆனந்தமாய், பாதுகாப்பாய், உற்காசமூட்டுவதாய் இருக்கும். இவை இன்னும் மிச்சமிருக்கும் மனித நேயத்தின் வெளிப்பாடுகள்.

மோசமான தொடுதல் என்பதை அடித்தல், உதைத்தல், காயப்படுத்துதல் போன்ற வலி ஏற்படுத்தும் நிகழ்வுகளாகச் சொல்லிக் கொடுங்கள்.

மூன்றாவதாக மிக முக்கியமான “பாலியல் தொந்தரவுத்” தொடுதல் பற்றி விளக்குங்கள். இந்தியாவில் 72.1 % குழந்தைகள் தங்களுக்கு நேரும் பாலியல் தொந்தரவுகளைப் பற்றி வெளியே யாரிடமும் சொல்வதில்லை என்கிறது அரசு ஆய்வு. எனவே பாலியல் தொடுதல் பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளிடம் தெளிவாக விளக்கி விடுதல் மிகவும் அவசியமாகிறது.

தினமும் குழந்தைகளிடம் அன்றைய தினம் நடந்த செயல்கள், சந்தித்த மனிதர்கள் போன்ற அனைத்தையும் விரிவாக கேட்டு அறியுங்கள். ஏதேனும் பிழை நடந்திருப்பதாக உணர்ந்தால் பதட்டப்படாதீர்கள். முழுமையாய் கேளுங்கள்.

குழந்தை எதைச் சொன்னாலும் முழுமையாய் நம்புங்கள். பாலியல் தொந்தரவுகளை குழந்தைகள் ஒரு போதும் உருவாக்கிச் சொல்வதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஏதேனும் “விளையாட்டு” எனும் பெயரில் குழந்தைகள் பெரும்பாலும் ஏமாற்றப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதுண்டு என்பதை அன்னையர் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம்.

தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான வெளிப்படையான, நட்புறவும் நம்பிக்கையும் கூடிய உரையாடல் மிக மிக முக்கியம். இல்லையேல் குழந்தைகள் தங்கள் பிரச்சனைகளை வெளிப்படுத்தாமலேயே போய்விடும் அபாயம் உண்டு.

சில சூழல் அல்லது சில நபர்களுடைய அருகாமை சந்தேகத்தைத் தருவதாக இருந்தால் அந்த சூழலைத் தவிருங்கள். குறிப்பாக குழந்தை யாருடனாவது நெருங்குவதை விரும்பவில்லையெனில் சுதாரித்துக் கொள்ளுங்கள். அங்கே ஏதேனும் பிழை இருக்கலாம் !

உங்கள் குழந்தைகளை மூன்றாவது நபரிடம், நீங்கள் கூடவே இல்லாதபோது, ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கும் அதிகமாக செலவிட அனுமதிக்காதீர்கள்.

உங்கள் குழந்தையின் உடல் குழந்தைக்கு மட்டுமே சொந்தமானது. அதை வேறு யாரும் தொடும் உரிமை இல்லை என்பதை வெகு தெளிவாக, அழுத்தமாகவே குழந்தைகளிடம் சொல்லுங்கள். அதை மீறி யாரேனும் தொந்தரவு கொடுத்தால் கண்டிப்பான “நோ” சொல்ல குழந்தைகளைப் பழக்குங்கள்.

குழந்தைகளுடைய நடவடிக்கையில் பதட்டம், கோபம், மன அழுத்தம், சோகம் போன்ற உணர்வுகள் மேலோங்கியிருப்பதைக் கண்டாலோ, உடலில் ஏதேனும் அடையாளங்களைக் கண்டாலோ உஷாராகிவிடுங்கள்.

குழந்தைகளிடம் ஏதேனும் விரும்பத் தகாத நிகழ்வு நடந்தால் யாரைச் சந்திக்க வேண்டும், யாரிடம் பேசவேண்டும் என்பதைச் சொல்லி வையுங்கள்.

குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளருங்கள். வீட்டில் பெற்றோர் முன்மாதிரிகையாக இருப்பதும், குழந்தைகளிடம் நேரத்தைச் செலவிட்டு அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை வழங்குவதும் மிக மிக முக்கியம்.

குழந்தைகள் தவறு செய்தால் பக்குவமாய் திருத்துங்கள். பிழை செய்வது மனித இயல்பு, அதைத் திருத்துவதில் தான் மனித மாண்பு இருக்கிறது என்பதை உணர்த்துங்கள். இல்லையேல் பிழைகளை உங்களிடமிருந்து மறைக்கும் வழியையே குழந்தைகள் யோசிக்கும்.

திரையரங்கு, பேருந்து, பள்ளிக்கூடம், விளையாட்டுப் பூங்கா போன்ற இடங்களில் கவனமாக இருக்கவேண்டிய வழிமுறைகளை விளக்குங்கள். எதையும் பயமுறுத்தும் விதமாகச் சொல்லாமல் இருப்பது மிகவும் முக்கியம்.

“அம்மா, அப்பாவிடம் சொல்லாதே” என யாராவது ஏதாவது சொன்னார்களா, செய்தார்களா என்பதை குழந்தைகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். பாலியல் விஷயத்தில் வாக்குறுதிகளை உடைப்பதில் எந்தத் தவறும் இல்லை என்பதை குழந்தைகளுக்கு புரியவையுங்கள்.

அம்மாவிடம் சொல்லுவேன், அப்பாவிடம் சொல்லுவேன் “என பயமுறுத்தி யாராவது தொந்தரவு செய்தார்களா என்பதையும் கேட்டறியுங்கள். இத்தகைய “பிளாக் மெயில்” கள் பெரும்பாலும் தொடர்ச்சியான பாலியல் தொந்தரவுக்குள் குழந்தைகளை இட்டுச் செல்லும்.

யாராவது ஏதாவது அன்பளிப்புகள், இனிப்புகள் தந்தார்களா ? அல்லது தருவதாக வாக்களித்திருக்கிறார்களா என்பதை கேளுங்கள். அப்படியெனில் யார் எதற்காக போன்ற செய்திகளையும் கவனமாய் கேட்டறியுங்கள். அவை பாலியல் தொந்தரவுக்கான முன்னுரையாய் இருக்கலாம்.

படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர் என எந்த விதத்திலும் இருக்கலாம் குழந்தைகளைத் தொந்தரவு செய்யும் நபர். எனவே ஒரு பொதுவான எச்சரிக்கை உணர்வை குழந்தைகளுக்கு ஊட்டுதல் அவசியம்.

குழந்தைகளிடம் திடீர் பாசம் பொழியும் உறவினர்கள் யாராவது இருந்தால் அவர்கள் மீது ஒரு கண் வைப்பது அவசியம். குழந்தைகளை கடைக்கு அழைத்துப் போகிறேன், திரையரங்கு அழைத்துச் செல்கிறேன் என முன்வந்தால் நாகரீகமாக தவிர்த்து விடுங்கள்.

ஆபாசப் புத்தகங்கள், படங்கள் போன்றவற்றை குழந்தைகளுக்கு காண்பித்து அவர்களை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்குவதும், பின்பு அதை வைத்தே அவர்களை மிரட்டி, பயமுறுத்தி தொடர் தொந்தரவுகளை கொடுப்பதும் பரவலாக நிகழும் செயல் என்பதால் எச்சரிக்கையுடன் கவனித்தல் அவசியம்.

நம்பிக்கைக்குரியவர் அல்லாத நபர், புகைப்படம் வீடியோ போன்றவற்றை எடுத்தால் “வேண்டாம்” என கண்டிப்புடன் மறுக்க குழந்தைகளைப் பழக்குங்கள். தனியே குழந்தைகளை வைத்து தகாத படங்கள் எடுக்கும் நிலையிலிருந்து தப்பிக்கலாம்.

90 விழுக்காடு பாலியல் தொந்தரவுகளும் குழந்தைகளுக்கு நன்கு தெரிந்த நபர்களாலேயே வருகின்றன. எனவே குழந்தைகள் உண்மையை விரைவில் பெற்றோரிடம் தெரிவிப்பது மிகவும் அவசியம். தாயும், மகளுமான மிகவும் தனிமையான சூழலில் நிகழும் உரையாடலே உண்மையை முழுமையாய் வெளிக்கொணரும்.

தன் சிறகின் கீழ் குஞ்சுகளைப் பாதுகாப்பது போல தனது குழந்தைகளைப் பாதுகாக்கும் கடமை அன்னையர்க்கு உண்டு. அதை சரிவரச் செயல்படுத்த குடும்பம் எனும் கட்டமைப்பிற்கு உள்ளேயும் வெளியேயும் அன்னையர் வழிகாட்டிகளாய் இருக்கவேண்டியது அவசியம்.

நல்ல தொடுதல் – தீய தொடுதல் விளக்க  ஒளிப்படம் கீழே இருக்கிறது.

Monday, 26 September 2011

குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்.

கொஞ்சும் குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்.
இதை அவசியம் கேட்டு பய‌னடையுங்கள்.

வினாக்களும் பதிலும்.

குழந்தை வளர்ப்பு ப‌ற்றி ம‌னோத‌த்துவ‌ ரீதியான‌ விளக்க‌ விடியோ.-- டாக்டர் அப்துல்லா (பெரியதாசன்)

1.குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்.


2.குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்.


3.குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்.


********

Sunday, 18 September 2011

எல்லாமே இலவசம்!!! எங்கே?

எப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் மனதை மயக்கும் இலவசத் திட்டங்கள் பெருகிவிட்டன. பட்டனைத் தட்டிவிட்டால் தட்டில் இட்லி என  கலைவாணர் பாடியதுபோல இன்று உழைக்காமலேயே கையில் உணவு கிடைக்க ஆரம்பித்து விட்டது. காரணம் இன்று தமிழகத்தில் வழங்கப்படும் பல்வேறு இலவச நலத்திட்டங்கள்தான். இதை தவறென்று யாரும் கூறவில்லை. 


        மக்களை அரசு சுபிட்சமாக வாழவைக்கிறதுஎன்பது பெருமைப்படவேண்டிய விஷயம்தான். ஆனால், எதற்கும் ஓர் எல்லை உண்டல்லவா? நீருயர வரப்புயரும், வரப்புயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோன் உயரும் என்ற மொழி இன்று மாறிவிட்டது.  இன்றைக்கு  இலவச மின்சாரம், டிவி, எரிவாயு அடுப்பு, வீடு என இலவசங்களாக குவிகிறது. மேலும், சலுகை விலையில் அரிசி, முதியோர் உதவித் தொகை, பேருந்தில் இலவச பயணம், கர்ப்பிணிகளுக்கு உதவி, இலவச கல்வி, சத்துணவு, காப்பீட்டுத் திட்டம், வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை, மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் என பட்டியல் நீளுகிறது. 


        இத்தனையும் அரசின் நிதியிலிருந்து வழங்கப்படுகிறது.  உண்மையிலேயே இத்தனை வசதிகளும் கிடைக்கும்போது அதை வாழ்த்தாமல் வசைபாடுவது ஏன் என்பது ஆட்சியாளர்களின் கேள்வி. அவர்களின் வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஆனால், எதற்கும் கவலையில்லை. ஏன் உழைக்க வேண்டும் என்ற கேள்வி இன்று பலரிடமும் எழுகிறது. உழைப்பது எதற்காக என்பதை யாரும் நினைத்துப்பார்ப்பதில்லை. உழைத்தால்தான் உடலும்,உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.  வேளாவேளைக்கு உண்டுவிட்டு, மூலையில் முடங்கிகிடப்பதால் மனிதனின் ரத்தஓட்டம் பாதிக்கப்படுகிறது. நடைபயிற்சி மறந்துபோய் தளர்ந்துவிடுகிறான். வெயில், மழை என மாறி மாறி உடல் உழைப்பு மேற்கொள்வதால் நோய் நொடிக்கு வாய்ப்பில்லை. வயலிலும், ஆலைகளிலும் உழைப்பவர்கள் ஒய்யாரமாகப் படுத்தால் விளைவு என்னவாகும். விரைவிலேயே நடைதளர்ந்து, மனம் புழுங்கி, வாழ்க்கையே வெறுத்துப்போகும் நிலை வந்துவிடுகிறது. ஆயுள்காலமும் குறுகிவிடுகிறது. அன்று காடு, கரை என்ற சென்றவர்கள் இன்று கிராமப்புறங்களின் டீக்கடை பெஞ்சுகளிலும், ஆலமரத்தடியிலும், ஆற்றங்கரையிலும் பொழுதைக் கழிக்கின்றனர். 


           எங்கிருந்தோ அரிசி கிடைக்கிறது! நமக்கென்ன என்ற அலட்சியம். போதாக்குறைக்கு நூறுநாள் வேலை என்ற பெயரில் அன்றன்று கையில் கிடைக்கும் ஊதியம். இது உழைக்காமல் கிடைக்கும் வருமானம். இப்படி கிடைக்கும் பணத்தை மதுக்கடைகளில் சென்று செலவழிப்பது வாடிக்கையாகிவிட்டது. விளைவு மதுக்கடை வருமானம் பல மடங்கு அதிகரிக்கிறது.இதனால் கிடைக்கும் அபரிமிதமான வருவாயால் மேலும் பல இலவசத் திட்டங்களை அரசு வழங்கிவருகிறது.

             இப்படி உழைப்பவர்களை சோம்பேறிகளாக்குவதன் மூலம் சம்பாதிக்கத் தேவையில்லை என்ற மனோபாவம் ஏற்படுகிறது. வாழ்க்கையின் அர்த்தமே மாறிவிடுகிறது. எதற்காக குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும்? அவர்கள் காலத்துக்கும் இதே இலவசத் திட்டங்கள்தான் தொடருமே என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கியுள்ளது. கிராமப்புறங்களில் இன்று விவசாயம் செய்வதை பார்க்க முடியுமா என்ற பதைபதைப்பு எழுகிறது. 


            வெளிமாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் அரிசி பெரும் அளவில் இறக்குமதியாகிறதே இனி நாம் ஏன் சாகுபடி செய்ய வேண்டும் என்ற அளவுக்கு விவசாயிகள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை இப்படியே வளரவிட்டால் நெல் என்ற தானியம், காய்கறிகள் போன்றவற்றை வெறும் புகைப்படங்களில் மட்டும்தான் பார்க்க வேண்டிவரும் என வேளாண்மை வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். ரெடிமேட் மிக்ஸ் போன்றே இனி அரிசிக்குப் பதில் உணவும் வந்துவிடும் என்ற நிலை வந்துவிட்டது. 

               தமிழர்களின் வீர விளையாட்டுகளை விளையாட வருங்காலச் சந்ததியினருக்கு போதிய உடல் வலு கிடைக்குமா என்பது தெரியவில்லை. விஞ்ஞானம்தான் வளர்ந்துவிட்டதே, இனி நாம் எதற்கு உழைக்க வேண்டும் என்ற கேள்வி இளையதலைமுறையினர் மத்தியில் நிலவுகிறது.  அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதை மனதில் நிறுத்தி இலவசத்தால் மக்களை வசப்படுத்தவதை நிறுத்த வேண்டும். இதற்குப் பதிலாக கிஸôன் விகாஸ், இந்திரவிகாஸ் போன்ற பத்திரங்களைத் தரலாம்.


         மேலும், காப்பீட்டுத் தொகையும் வழங்கலாம். அப்படித் தந்தால் அது வாழ்நாள் முழுக்க மக்களுக்குப் பயனளிக்கும் திட்டமாகத் திகழும். அதை விடுத்து இலவசங்கள் தொடர்ந்தால் மக்களின் மனதை மழுங்கடிக்கச் செய்யும். யானைகட்டிப் போரடித்த காலம் மறந்துபோனதைப்போல விளைநிலங்கள் காட்சிப்பொருளாக மாறும் என்பதே உண்மை.

மனிதனா? இல்லை பணமா? (MAN vs MONEY)


            ஒரு மனிதன் பணம் இருக்கும் போது எப்படி இருக்கிறான், பணம் இல்லாத போது எப்படி இருக்கிறான் என்பதை ஒரு ஆங்கில தொகுப்பிலிருந்து மொழிபெயர்த்துள்ளேன். வாசித்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்.


மனிதனுக்கு பணம் இல்லாமல் இருக்கும் போது, அவர் வீட்டில் காய்கறிகளை சாப்பிடுகிறார்.
அதே மனிதனுக்கு பணம் இருக்கும் போது, அவரே ஒரு நல்ல ஹோட்டலில் காய்கறிகளை சாப்பிடுகிறார்.

மனிதனுக்கு பணம் இல்லாமல் இருக்கும் போது, அவர் வேலைக்கு சைக்கிளில் போகிறார்.
அதே மனிதனுக்கு பணம் இருக்கும் போது, அவர் சைக்கிளை உடற்பயிற்சி செய்ய உபயோகப்படுத்துகிறார்.

மனிதனுக்கு பணம் இல்லாமல் இருக்கும் போது, உணவை அவர் சாப்பிடுகிறார்.
அதே மனிதனுக்கு பணம் இருக்கும் போது, உணவு அவரை சாப்பிடுகிறது.

மனிதனுக்கு பணம் இல்லாமல் இருக்கும் போது, அவர் திருமணம் செய்ய விரும்புகிறார்.
அதே மனிதனுக்கு பணம் இருக்கும் போது, அவர் விவாகரத்து பெற விரும்புகிறார்.

மனிதனுக்கு பணம் இல்லாமல் இருக்கும் போது, அவரது மனைவி செயலாளராக வேலைக்கு செல்கிறார்.
அதே மனிதனுக்கு பணம் இருக்கும் போது, அவர் செயலாளரை மனைவியாக ஆக்கிக் கொள்கிறார்.

மனிதனுக்கு பணம் இல்லாமல் இருக்கும் போது, ஒரு பணக்காரனை போல செயல்படுகிறார்.
அதே மனிதனுக்கு பணம் இருக்கும் போது, அவர் ஒரு பிச்சைக்காரன் போல செயல்படுகிறார்.

மனிதன் பங்கு சந்தை மிக மோசமாக உள்ளது என்பான். ஆனால் அதில் சாமார்த்தியசாலியாக இருப்பார்.
மனிதன் பணத்தை சாத்தான் என்பான். ஆனால் பணத்தாசை அடங்காமல் பணத்தின் மேல் ஏக்கம் கொள்வான்.

மனிதன் உயர் பதவிகளை பெற்றுக்கொண்டே இருப்பான். ஆனால் அதை போராடி பெற்றதாக தம்பட்டம் கொள்வான்.
மனிதன் சூதாட்டம் தப்பு, மது சாப்பிடுவது தப்பு என சொல்வான். ஆனால் அதற்கு முன்னாலேயே உட்கார்ந்துக்கொண்டு வியாக்கியானம் பேசுவான்.

கல்வி முறையில் மாற்றம் தேவை

பகு‌த்த‌றிவு‌ப் பகலவ‌ன் த‌ந்தை‌ப் பெ‌ரியா‌ர் விடுதலை (12.11.1954) நாளிதழில் வெளியிட்ட கட்டுரை:


நம் நாட்டு மாணவர்கள் கல்விப் படிப்பினால் எந்தவிதமான பகுத்தறிவையும் எதையும் ஆராய்ந்து அறியும்படியான தன்மையையும் அடைய முடிவதில்லை. அவர்கள் படிக்கின்ற படிப்பினால் பிற்கால வாழ்க்கையைத் தரித்திரமின்றி நடத்த வேண்டும். அதற்காக, ஏதாவது உத்தியோகத் துறையிலோ, வேறு பணம் சம்பாதிக்கின்ற வழியிலோ பயன்பட வேண்டும் என்பதற்காகவே படிக்கிறார்கள். பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைக்கு அறிவு வளர வேண்டும் என்ற காரணத்திற்காகப் பள்ளிக்கு அனுப்புவதில்லை; படித்துப் பட்டம் பெற்று வந்ததும் ஜீவனத்துக்கு வேண்டிய முறையில் எங்காவது உத்தியோகம் கிடைக்குமா என்ற நோக்கத்தோடேயே பெற்றோர்கள் முயற்சிக்கிறார்கள்.

ஆகையால், அவர்கள் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் கூறுகின்ற ஒவ்வொன்றையும் அப்படியே மனப்பாடம் செய்து, அதையே பிறகு அவர்கள் கேட்கும்பொழுது சொல்லுவதாலும், எழுதுவதாலும் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். இந்த முறையில் ஒரு மாணவன் எவ்வித உயர்ந்த பட்டத்தை அடைந்த படிப்பாளி என்று கூறப்பட்டாலும், அவனுக்குப் போதிய பொது அறிவும், உலகியலில் தகுந்த ஞானமும் அடைந்தவனாகக் கருதப்பட மாட்டான். ஆசிரியர் சொல்லுவதைத்தான் கேட்க வேண்டும்; புத்தகத்திலுள்ளதைத்தான் மனப்பாடம் செய்து திரும்பவும் ஒப்புவிக்க வேண்டும் என்பது, நம் நாட்டுக் கல்வி முறை. இக்கல்வி முறையினால் மாணவர்களுக்கு அறிவு புகட்டப்படுவதால் அவர்கள் பிற்காலப் பழக்க வழக்கங்களுக்கும், நல்லொழுக்கத்திற்கும் தகுதியுடையவர்களம்க ஆகமாட்டார்கள்.

ஆனால், பலர் பலவிதமாக அறிவு, ஞானம் என்பதைக் கருதுகிறார்கள். பெரும்பாலோர் ஞானம் என்பதும், அறிவு என்பதும் கடவுளைக் காண்கிறதும், மோட்சத்தை அடைவதும்தான் என்று நினைக்கிறார்கள். இந்த எண்ணம் குழந்தையிலிருந்தே நம் பிள்ளைகளுக்கு ஊட்டப்பட்டு வருவதால், மேன்மேலும் ஒரு மாணவன் தெளிவற்றவனாகவே ஆக்கப்படுகிறான். பொதுவாகவே மாணவன் அதற்கு இடம் கொடுக்காமல் தன்னை இன்னான் என்றுணர்ந்து "நம் பருவம் எதையும் அறிந்து கொள்ளுகின்றதும், தெரியாதவைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுகிறதுமான மாணவப் பருவம்' என்பதை உணர வேண்டும். இவ்வித எண்ணமுள்ள மாணவன்தான் பிற்காலத்தில் எதையும் அறிந்த அறிவாளியாக விளங்க முடியும்.

மேல்நாட்டு மாணவர்கள் எல்லோரும் இவ்வித எண்ணம் கொண்டவர்களாக இருப்பதாலும், அவர்களுக்கு இந்தப்படியே பயிற்சி அளிப்பதாலும்தான் அவர்கள் எதையும் ஆராயும் தன்மையுள்ளவர்களாகவும், மென்மேலும் ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டு இது ஏன்? எப்படி? எதற்காக? இதனால் என்ன செய்ய முடியும்? என்று இப்படிப் பலவிதமான கேள்விகளுக்குப் பதில் தெரிந்து கொண்டே பார்த்ததால் இன்றைக்கு அவர்கள் அறிவாளிகளாகவும், விஞ்ஞானிகளாகவும் விளங்குகிறார்கள். மற்றும் பல பொது விஷயங்களிலும் நம் நாட்டு மக்களைப் போல் இல்லாது, எவ்விடத்திலும் பிறருடன் நன்முறையில் பழகுகிறார்கள்.

ஆனால், நம் நாட்டு மாணவர்களுக்குப் பொது அறிவைப் புகட்டுவதற்கு வேண்டிய சாதனங்கள் ஒன்றும் இல்லாததாலும், நம் நாட்டுக் கல்வி முறையில் இவை கற்பிக்கப்படாததாலும் அவர்கள் வயதுவந்தவர்களானதும் பொது இடங்களிலும், உலகத்தோடும் நன்முறையில் பழகுவது கிடையாது. புகைவண்டி நிலையம் சென்றால், எவன் ஒருவன் முதலில் டிக்கட் வாங்குகிறானோ, அவன்தான் சமர்த்தன் என்று புகழப்படுகிறான். புதிய சினிமா இன்றுதான் முதலில் வெளியிடப்படுகிறது என்றால் அன்றைக்கு படத்திற்கு முதல் டிக்கட் வாங்குகிறவன் அதிபராக்கிரம புத்திசாலி என்று போற்றப்படுகிறான். ஏதாவது ஒரு உண்மையை மறைக்க ஆயிரம் பொய்களைக் கூறித் தப்பித்துக் கொண்டால் அவன் அறிவிற் சிறந்தவன்; அவன் கூறியது பொய்யானாலும் தன் புத்தியின் யூகத்தால், வெகு சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொண்டான் என்றுதான் கூறுவர்.

நன்னடத்தை என்பது என்னவென்று பார்த்தால் ஒரு மனிதனிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களோ, நீங்கள் மகிழ்ச்சியடையவும், திருப்தியடையவும் அவன் என்ன செய்யவேண்டுமோ, அதே முறையில் நீங்களும் பிறரிடம் பழகும்போது அவர்களுக்கு மகிழ்ச்சியையும், திருப்தியையும் உண்டாக்கும்படியான வழியில் நடந்து கொள்வதாகும். உங்களிடம் ஒருவர் நடந்து கொள்வதிலிருந்து உங்களுக்குக் கஷ்டத்தையும், மனக்கலக்கத்தையும் அதிருப்தியையும் உண்டாக்குகிற முறைகள் எவை எவையென்று தோன்றுகிறதோ, அவையவைகளை விட்டுவிட வேண்டும். இது ஒரு சுலபமான கருத்து. இதை யாவரும் கைக்கொள்ளுவதால் நல்லறிவும், பொது அறிவும் அடைந்தவர்களாகலாம். 

Wednesday, 14 September 2011

இஸ்லாமிய விரோத வலைத்தளங்களை தாக்கும் சவுதி பெண்மணி


அமெரிக்காவில் கல்வி கற்கும் சவுதி அரேபிய யுவதி ஒருவர் டென்மார்க் நாட்டில் இருந்து இயங்கும் 23 வலைத்தளங்களை தனது திறமையின் மூலம் தாக்கியுள்ளார், இவ்வளைத்தலங்கள் அனைத்தும் இஸ்லாத்துக்கு எதிராக இயங்குவதை தமது கொள்கையாக கொண்டுள்ளதுடன் இவைகள் அனைத்தும் நபி பெருமானார் (ஸல்) அவர்களை தூற்றுவதை வாடிக்கையாக கொண்ட இணையத் தளங்களாகும் என அல் மதீனா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


குறித்த பத்திரிகைக்கு பேட்டியளித்த நூப் ராஷித் என்ற குறித்த பெண்மணி நபிகளாரை பற்றி இட்டுக்கட்டப்பட்ட விடயங்களையும் மற்றும் கார்டூன்களையும் வெளியிடும் தளங்களையே ஹாக்கிங் செயற்பாடு மூலம் செயலிழக்க செய்ததாக குறிப்பிட்ட அவர் தனது பார்வையில் இத்தளங்களின் செயற்பாடுகள் தவறானவை என்று தெரிவித்துள்ளார்.


இதற்கு மேலதிகமாக பல ஆபாச வலைத்தளங்களும் நூப் ராஷித் இனால் செயலிழக்க செய்யப்பட்டதோடு ஆபாச படங்களை எடுத்து அதை பயன்படுத்தி இளம் பெண்களை பயமுறுத்திய ஒரு நபரின் கணனியின் செயற்பாட்டை கட்டுப்படுத்தி குறித்த ஆபாச படங்களை அழித்து பயமுறுத்தல்களுக்கு உள்ளான இளம்பெண்களையும் காப்பாற்றியுள்ளார். கணணியை கற்பதற்கான ஆர்வமே தான் இந்த துறையில் நிபுணத்துவம் அடைய காரணமாகும் என்று நூப் தெரிவித்துள்ளார்.


ஒரு இளைஞன் ஒரு யுவதியை அவளது அந்தரங்க புகைப்படங்களை கொண்டு மிரட்டி அவளை திருமணம் செய்ய முற்பட்ட சம்பவம் தான் ஹாக்கிங் துறையில் திறமைகளை வளர்க்க தூண்டுகோலாக அமைந்ததாக குறிப்பிட்ட நூப், இச்சம்பவத்தின் பின்னர் தன்னுடைய நண்பர்கள் மூலமே ஹாக்கிங் கலையை கற்றதாக கூறியுள்ளார். இதன் மூலம் அல்லாஹ்வின் கிருபையால் மேலும் பல பெண்களை இவ்வாறான சூழ்நிலைகளில் இருந்து நூப் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


குறித்த டென்மார்க் தளங்களை தாக்கிய நூப் அவ்வலைத்தளங்கள் நடாத்துவோருக்கு பெருமானார பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் பொருத்தமான தகவல்களை அனுப்பியுள்ளார்.


இணையத்தை பாவிக்கும் இளம்பெண்கள் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நூப் வலியுறுத்தியுள்ளார். கணணி பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகளுக்கு அதற்கான கடைகள் மற்றும் கொம்பனிகளில் கணணிகளை கொடுக்கும் போது இளம் பெண்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இவ்வாறான கடைகள் மற்றும் கொம்பனிகளில் கடமை புரியும் சில நபர்கள் இளம் பெண்களின் கணனிகளில் உளவு மென்பொருள்களை (Spyware) உட்புகுத்தும் சாத்தியங்கள் உண்டு எனவும் தெரிவித்தார்.


மேற்குலக ஊடகங்களின் தகவல்களின் படி அண்மையில் 900 க்கு மேற்பட்ட டென்மார்க் வலைத்தளங்கள் ஹாக்கிங் தாக்குதலுக்கு உள்ளாயின.


ஒரு சர்வதேச இணைய கண்காணிப்பாளர் தகவல் தருகையில் ஒரு சிறிய காலப்பகுதிக்குள் இவ்வாறு பெறும் எண்ணிக்கையான வலைத்தளங்கள் தாக்கப்பட்டது இதுவே முதன் முறையாகும் என்று தெரிவித்துள்ளார். அநேகமான ஹாக்கிங் தாக்குதல்களின் போது குறித்த தளங்கள் செயலிளப்புக்கு மாத்திரமே உள்ளாகும் அதேவளை சில சந்தர்ப்பங்களில் டென்மார்க் அரசையும் மக்களையும் எச்சரிக்கும் வாசகங்கள் பதிவேற்றப்படுகின்றன எனவும் தெரிவித்தார். தாக்கப்படும் தளங்கள் பின்னர் மீண்டும் இயங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.


அமெரிக்காவைப்போல் சவுதியிலும் ஹாக்கிங் குற்றத்துக்காக கடுமையான தண்டனைகள் அமுலில் உள்ளமை குறிப்பிட தக்கது.

தகவல் உரிமை சட்டம்

இச்சட்டத்தை அரசு கொண்டு வருவதற்கு மக்கள் இயக்கம்தான் காரணம். ராஜஸ்தானில் 1990-ம் ஆண்டு ஓர் அரசுத் திட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளிகளுக்கு தினக் கூலி ரூ.22 என நிர்ணயிக்கப்பட்டது. குறிப்பிட்ட ஒரு தொழிலில் அவர்களுக்குத் தினமும் ரூ.11 மட்டுமே தரப்பட்டது. ஆனால்,உண்மையில் சம்பளப் பதிவேட்டில் ரூ.22 தினக் கூலி எனப் பதிவு செய்யப்பட்டு வந்தது. தங்களுக்கு ஊதியம் குறைவாகத் தரப்பட்டது குறித்து தொழிலாளிகள் நிர்வாகத்திடம் கேட்டதற்கு, அத்தொழிலாளர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றும் அதனால்தான் ஊதியம் குறைத்துத் தரப்பட்டது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதில் திருப்தி அடையாத தொழிலாளர்கள் வெகுண்டெழுந்து ஊதியங்களைப் பதிவு செய்யும் பதிவேட்டைக் கேட்டனர்.அதை மறுத்த நிர்வாகம் அத்தகைய ஆவணங்கள் அரசு ரகசியம் என்று கூறினர்.அங்கேதான் தொழிலாளர்களுக்குக் கை கொடுக்க வந்தார் அருணா ராய். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து மக்கள் சேவைக்காக பதவியைத் துறந்து “விவசாய தொழிலாளர்கள் சங்கம்’ என்ற அமைப்பை நிறுவினார். அவரது அமைப்புடன் மக்கள் இணைந்து தொடர்ந்து போராடியதை அடுத்து, 2005 ஆம் ஆண்டு அக்டோபரில் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது.

தகவல் அறியும் உரிமை சட்டம் 68 நாடுகளில் நடைமுறையில் உள்ளது. எனினும், இந்திய சட்டத்தில் உள்ள பிரிவுகள் மிகச் சிறந்தவை. அதன்படி, யார் வேண்டுமானாலும் அரசிடம் எந்தத் தகவலையும் கேட்டுப் பெறலாம். எந்த ஆவணத்தையும் ஆய்வு செய்யலாம். அதன் நகலைப் பெற்றுக் கொள்ளலாம். எந்தப் பணியையும் நேரடியாகப் பார்வையிடலாம். எந்தப் பணி நடைபெற்றாலும், அதில் பயன்படுத்தப்படும் பொருளின் தரம், விலை ஆகியவை குறித்த விவரங்களைக் கேட்டுப் பெறலாம்.

மக்களுக்கு இந்தத் தகவலை,சம்பந்தப்பட்ட அதிகாரி 30 நாளில் அளிக்கவேண்டும். தவறினால், கெடு தேதியைக் கடந்த ஒவ்வொரு நாளுக்கும் ரூ.250 என அபராதம் செலுத்த வேண்டும். அது மட்டுமல்ல. பெற்ற தகவலில் திருப்தி இல்லை என்றால், மேல் முறையீடு செய்யலாம். இதற்காகத் தகவல் உரிமை ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்பட வேண்டும்.


மாதிரிக் கேள்விகள்
உங்களது விருப்பத்திற்கேற்றாற்போல, தேவைப்படும் மாற்றங்கள் செய்துகொள்ளலாம்)

1. எனது விண்ணப்பம்/கணக்குத் தகவல் அறிக்கை/மனு/புகாரின் மேல் எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைத் தேதிவாரியாகக் குறிப்பிடும்படி வேண்டுகிறேன். உதாரணமாக, எனது விண்ணப்பம்/கணக்குத் தகவல் அறிக்கை/மனு/புகார் எப்போது, எந்த அதிகாரியிடம் போய்ச் சேர்ந்தது? அந்த அதிகாரியிடம் எவ்வளவு காலம் இருந்தது? இந்த காலகட்டத்தில் அவர் அதன் மேல் என்ன நடவடிக்கை எடுத்தார்?.

2. எனது விண்ணப்பம்/கணக்குத்தகவல் அறிக்கை/மனு/புகாரின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளின் பெயர் என்ன? அவர்களது பதவிகளின் பெயர்கள் என்ன? ஏதாவதொரு அதிகாரி நடிவடிக்கை ஏதும் எடுக்காமல் இருக்கிறாரா?

3. தங்களது பணியைச் செய்யாமல் பொதுமக்களைத் தொந்திரவுற்கு உள்ளாக்கும் இந்த அதிகாரிகளுக்கு எதிராக என்ன நடிவடிக்கை எடுக்க முடியும்? இந்த நடவடிக்கை எடுக்க எவ்வளவு காலமாகும்?

4. இப்போதைய நிலையில் எனது வேலை எப்போது முடியும்?

5. என்னுடைய விண்ணப்பம்/கணக்குத் தகவல் அறிக்கை/மனு/புகார் உங்களால் பெற்றுக் கொண்ட பின்னர், உங்களிடம் விண்ணப்பம்/கணக்குத்தகவல் அறிக்கை/மனு புகார்/ ஆகியவற்றைக் கொடுத்த அனைத்து நபர்களின் பட்டியலையும் தயவு செய்து தெரியப்படுத்துங்கள். இந்தப் பட்டியலில் கீழ்க்கண்ட தகவல்கள் இருக்கவேண்டும்.

*விண்ணப்பதாரரின்/வரிசெலுத்துபவரின்/மனுதாரரின்/பாதிக்கப்பட்டவரின் பெயர் மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட ரசீதின் எண்.

* விண்ணப்பம்/கணக்கு தகவல்அறிக்கை/மனு/புகார்-ன் தேதி.

* அவருக்கான பிரச்சினை தீர்க்கப்பட்ட தேதி.

6. மேற்படி விண்ணப்பங்கள்/கணக்குத்தகவல் அறிக்கைகள்/மனுக்கள்/புகார்கள் ஆகியவற்றில் அவற்றுக்கான வழங்கப்பட்ட ரசீதின் (பெறுகை ஒப்புதல் சீட்டு) எண் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள் அடங்கிய ஆவணங்களின் நகல்கள் அல்லது அச்சுப் பிரதிகளை தயவு செய்து வழங்கவும்.

7. எனது மனுவை நீங்கள் பெற்றுக் கொண்ட பின்னர், பெறப்பட்ட விண்ணப்பங்கள்/கணக்குத் தகவல் அறிக்கைகள்/ மனுக்கள்/புகார்கள் ஆகியவற்றில் எதிலேனும் வரிசைக்கு முன்னதாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அதையும், அதற்கான காரணங்களையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

8. இவ்வாறு நடந்திருந்தால் இது குறித்து எடுக்க வேண்டிய ஒழுங்கு நடவடிக்கைக்கான விசாரனை எப்போது நடைபெறத் தொடங்கும்?

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும், பதில்களும்

எங்கே, எவ்வாறு முறையிடுவது?
* மத்திய அரசு அதிகாரிகள் சம்மந்தமான தகவல் பெற கீழ்கண்ட முகவரியில் உள்ளோரை தொடர்பு கொள்ளலாம்

மத்திய தகவல் ஆணையம்,
ஆகஸ்டு கிராந்தி பவன்,
பிகாஜி காமா வளாகம்,
புதுடெல்லி 110066
வலைதளம் : www.cic.gov.in

* மாநில அரசு அதிகாரிகள் சம்பந்தமான தகவல் பெற, அந்தந்த மாநில தகவல் ஆணையத்தை அணுகி, விண்ணப்பங்களை கொடுக்கலாம்
* மாநில தலைநகரத்தில் இருக்கும் தலைமை அதிகாரிகள் (தலைமைச் செயலாளர், துறையின் செயலாளர்) தலையீடுமாரு, அவர்களிடமும் விண்ணப்பிகலாம். இவ்வாரு செய்வதன் மூலம், தகவல் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
* முறையீடு அனுப்பியவுடன், அது பதிவு செய்யப்பட்டுள்ளதா, இல்லையா, பதிவு எண், நாள், அதன்மீது அப்போதைய நடவடிக்கை நிலவரம் போன்றவற்றை இது தொடர்பான வலைதளத்தில் பார்க்கவும்.
* பொது தகவல் அலுவலர், மேல் முறையீட்டு முதன்மை அலுவலர்களுக்கும் கூடவே மத்திய தகவல் ஆணையம் மற்றும் மாநில தகவல் ஆணையம் ஆகியவற்றிற்கும் மனுவின் பிரிதியை அனுப்பலாம்.
* மனுதாரருக்கு, இரண்டாம் மற்றும் இறுதியான முறையீட்டு கோரிக்கையாடு சேர்த்து மனுவையும் கொடுக்கும் வசதி உண்டு.

முறையீடுகளுக்கு ஏதேனும் வரையறுக்கப்பட்ட விண்ணப்பங்கள் உள்ளனவா? முறையீட்டில் என்ன மாதிரியான கோரிக்கைகள், குறைகள் தெரிவிக்கப்படலாம்?


* மத்திய தகவல் ஆணையம் மற்றும் சில மாநில தகவல் ஆணையங்கள் குறிப்பிட்ட சில தகவல்களை மனுவுடன் அளிக்க வேண்டும் என வரையறுத்துள்ளது.
* சில மாநில தகவல் ஆணையங்களிடம் வரையறுக்கப்பட்ட விண்ணப்பபடிவங்கள் உள்ளன
* தகவல்கள் குறிப்பிட்ட காலவறையறைக்குள் கிடைக்கப் பெறாவிட்டால், பொதுமக்கள், தகவல் அலுவலர், முதன்மை மேல் முறையீட்டு அலுவலர், ஆகியோருக்கு, தண்டனை அல்லது குறித்த நேரத்தில் தகவல் பெற முடியாமைக்கு ஈட்டுத் தொகை ஆகியன வேண்டியும் விண்ணப்பம் செய்யலாம்.
* வாழ்க்கை மற்றும் விடுதலை சம்பமந்தமான முறையீடுகளை “தெளிவாக” வாழ்க்கை மற்றும் விடுதலை-அவசரம் என அடிக்கோடிட்டு முறையீட்டை விண்ணப்பிக்கலாம். இது முன்னுரிமை அடிப்படையில் (கால தாமதம் இன்றி) உடனடியாக பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். மாநில தகவல் ஆணையத்துடன் மின் அஞ்சல் வழி, அடிக்கடி தொடர்பு மிகவும் பயனுள்ளது.

முறையீடு செய்வதற்கு ஏதேனும் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா?

* மத்திய தகவல் ஆணையம் முறையீடு செய்வதற்கு கட்டணம் வசூலிப்பதில்லை. ஆனால் சில மாநில தகவல் ஆணையங்கள் இதற்கு கட்டணம் வசூலிப்பதுண்டு


முறையீட்டு விண்ணப்பத்திற்காண பதில்களை எவ்வாறு பெறலாம்?
* சில நேரங்களில் மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி அல்லது முதன்மை மேல் முறையீட்டு அலுவலர் மாநில தகவல் ஆணையம் மற்றும் மத்திய தகவல் ஆணையம் விசாரிக்கும் முன்னரே கோரிக்கைகளை தீர்வு செய்வார்.
* தகவல் ஆணையங்கள் பொது நிதிமன்றங்களுக்கு உண்டான அதிகாரங்களை பெற்றுள்ளனர். உதாரணமாக தாக்கீது அனுப்புதல், நேரடியாக விசாரணைக்கு உட்படுத்துதல், வாய்மொழி மற்றும் பதிவு பூர்வ ஆதாரங்களை சமர்ப்பித்தல் போன்றவை.
* பொது தகவல் அலுவலர்/முதன்மை மேல் முறையீட்டு அலுவலர் ஏராளமான முறையீடு மற்றும் மேல் முறையீடுகளை கவனிக்க வேண்டியுள்ளது. எனவே முறையீடு வந்தவுடன் அதிகபட்சம் ஒரு வருடத்தில் இருந்து 3 வருடம் வரை தீர்வு காண நேரிடலாம்.

விண்ணப்பம் எழுதுவது எப்படி?
தகவல் பெறும் உரிமை சட்டத்தில் விண்ணப்பம் செய்யும்போது, கேள்விகள் தொகுக்கப்படுவது மிகவும் முக்கியமானது. சிறு பிழை/தவறான அர்த்தம் கொள்ளக் கூடிய கேள்வி அல்லது தெளிவற்ற கேள்விகள், தகவல் உரிமை அலுவலருக்கு, தங்களது விண்ணப்பதை தள்ளுபடி செய்ய ஏதுவான காரணங்களாக அமையலாம்.

விண்ணப்பம் எழுத சில வழிகாட்டுதல்கள்

* விண்ணப்பிப்பதற்கு ஒரு வெள்ளைத்தாள் போதும். எழுதும் நோட்டு பேப்பரிலேயே, விண்ணப்பிக்கலாம். நீதிமன்ற முத்திரைத்தாள் தேவையில்லை.
* விண்ணப்பம் தட்டச்சில் இருக்க வேண்டிய அவசியமில்லை. கையால் எழுதிக் கொடுக்கலாம்.
* விண்ணப்பம் தெளிவான எழுத்துக்களில், படித்து புரிந்து கொள்ளக்கூடிய அளவில் இருக்க வேண்டும்.
* தகவல் வேண்டுவன எத்தனை பக்கங்களாகவும் இருக்கலாம்.
* ஒரு விண்ணப்பத்தில் எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கப்படலாம். இருப்பினும் குறிப்பிட்ட அளவிலும், மற்றும் தொடர்புடைய கேள்விகளாகவும் இருத்தல் நல்லது.
* வேண்டிய தகவலை சிறு கேள்விகள் மூலம் கேட்கலாம். நெடிய தகவல்கள் வேண்டி ஒரே விண்ணப்பத்தில் கேட்பதை தவிர்க்கவும். விண்ணப்பத்தில் உங்கள் பெயர், கையொப்பம் போதுமானது. பதவி மற்றும் இதர பொறுப்புகள் தேவையில்லை. ஏனெனில் தகவல் பெறுவது ஒவ்வொரு குடிமகனின் உரிமை.
* நேரடியாக ஏன் என்று ஆரம்பமாகும் விண்ணப்பங்கள், தகவல் உரிமைச் சட்டத்தின்படி நிராகரிக்கப்பட ஏதுவாகும். உதாரணமாக, ஏன் அந்தப் பில் அனுமதிக்கப்படவில்லை? என்று எழுதுவது.
* தாங்கள் பாதிக்கபட்டவராக இருப்பின், பகுதி 4(1)(d)-ன்படி நிர்வாக மற்றும் அரசு நீதித்துறையின் முடிவுக்குப் பின்னால் உள்ள காரணங்களை கேட்கலாம்.
* கேள்விகள் அதிக பக்கங்கள் இருப்பின் ஒலித்தட்டு(CD) வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
* தங்களுக்கு எதற்காக தகவல்கள் தேவைப்படுகின்றன என்பதை தெரிவிக்க அவசியமில்லை.
* கட்டணம் செலுத்திய காசோலை, கோட்புகாசோலை, அஞ்சலக தபால் ஆணை ஆகியவை பற்றிய குறிப்புகளை, விண்ணப்பத்தின் இறுதியில் தவறாமல் குறிப்பிடவும்.

விண்ணப்பம் யாருக்கு அனுப்பப்பட வேண்டும்?
* எந்த பொது தகவல் அலுவலருக்கு விண்ணப்பிக்கிறீர்களோ, அவர் முகவரிக்கு விண்ணப்பம் எழுதலாம்.
* ஒரு வேளை அருகில் உள்ள பொது தகவல் அலுவலரின் தகவல்கள் அறிய முடியவில்லை எனில், பொது தகவல் அலுவலர், C/o தலைமை அலுவலர் என்று எழுதி, மாவட்ட உயர் அலுவலருக்கு உரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம்.
* அந்த துறை தலைமை அலுவலர் அதனை அதற்குண்டான தகவல் அலுவலருக்கு அனுப்புவார்.
* தகவல் உரிமை அலுவலரின் பெயரிடாமல் விண்ணப்பம் சமர்ப்பித்தல் நலம், ஏனெனில் அலுவலர்கள் பணி இடமாற்றத்திற்கு உட்பட்டவர்கள்.

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் முறையீடு செய்யும் முறை மாநிலத்திற்கு மாநிலம் வித்யாசப்பட்டதா?





* மாநில, மத்திய, நீதிமன்றங்கள் போன்றவை தனிதனியே தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்க விதிமுறைகளை வகுத்துள்ளனர்
* கட்டணம் மற்றும் அதை செலுத்தும் முறை மாநிலத்திற்கு மாநிலம் வித்யாசப்பட்டவை. எனவே உங்களுக்கு பொருந்தக்கூடிய விதிமுறைகளை அறிந்து, அதை பின்பற்றுதல் அவசியம். உரிய கட்டணத்தை, டிமாண்ட் டிராப்ட், பாங்கர்ஸ் செக், அஞ்சலக தபால் ஆணை (சில மாநிலங்களில்), கோர்ட் ஸ்டாம்புகள் (சில மாநிலங்களில்), வரையறுக்கப்பட்ட வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்துதல் போன்றவை சில வழிமுறைகளாகும்.
* மத்திய அரசின் கீழ் வரும் துறைகளுக்கு, மத்திய அஞ்சலகத்துறை, "Accounts officer" என்ற பெயருக்கு டிமாண்ட் டிராப்ட், கோட்புகாசோலை, அஞ்சலக தபால் ஆணை எடுத்து அனுப்பலாம்.

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் முதல் முறையீடு எவ்வாறு எழுதுவது?
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 ன்படி, முதல் மேல் முறையீடுக்கு கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்.

* முதல் மேல் முறையீட்டு மனு, மத்திய தகவல் அலுவலரிடம் இருந்து முடிவு பெறப்பட்ட 30 நாட்களுக்குள் முதன்மை மேல் முறையீட்டு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.
* முப்பது நாட்களுக்குள் அதற்குண்டான பதில் கிடைக்கப் பெறவில்லை எனில் (இணை தகவல் உரிமை அலுவலரிடம் விண்ணப்பித்திருந்தால் 35 நாட்கள்), மத்திய தகவல் அலுவலரிடமிருந்து பதில் கிடைக்க வேண்டிய தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்ய வேண்டும்
* முதல் மேல் முறையீடு மனுவை அனுப்ப வேண்டிய அதிகாரி, அவருடைய முகவரி போன்றவற்றை மத்திய தகவல் அலுவலரிடமிருந்து வந்த பதில் கடித்தத்திலிருந்து கண்டறியலாம். குறிப்பிட்ட துறையின் வலைதளத்திலிருந்தும் இந்த தகவலை பெறலாம்.
* மேற்கண்ட எந்த முயற்சியிலும் தங்களுக்கு முதல் மேல்முறையீட்டு அலுவலரின் விபரம் தெரியவில்லை எனில், முதன்மை மேல் முறையீட்டு அலுவலர்.

C/o.தலைமை அலுவலர்,
......துறை க்கு நேரடியாக விண்ணப்பிக்கவும்.
(மேலும் அந்தந்த துறை தலைமை தகவல் அலுவலருக்கும் அனுப்பலாம்).

* நீங்கள் முதல் மேல்முறையீட்டு விசாரணையின் போது இருக்க விருப்பப்பட்டால், முறையீட்டு மனுவின் கீழ் அதனை தெளிவாக குறிப்பிடவும்.
* முதல் மேல் முறையீட்டிற்கு மத்திய தகவல் துறையின் கீழ்வருபவைக்கு கட்டணம் ஏதுமில்லை.
* சில மாநிலங்கள் முதல் மேல் முறையீட்டுகளுக்கு கட்டணங்கள் மற்றும் படிவங்களை வடிவமைத்து உள்ளன.
* அனைத்து இணைக்கப்பட்ட சான்றிதழ்களும் சுயமாக உண்மை நகல் சான்று ஒப்பமிடப்படவேண்டும். Attested என்று எழுதி, அதன் கீழ் கையொப்பமிட்டு பெயர் எழுதப்படவேண்டும்.
* விண்ணப்பத்தின் முழுமையான பிரதியினையும், அனுப்பியதற்கு உண்டான அஞ்சல் ரசீது மற்றும் ஒப்புகையை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
* நேரடி விண்ணப்பம் சரியானது, எனினும் பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல்/ அஞ்சலக சான்று அஞ்சல் மூலமாக அனுப்புதல் நல்லது. தனியார் அஞ்சல் சேவை மூலம் அனுப்பக் கூடாது.
* முதல் மேல் முறையீட்டு அலுவலர் 30 நாட்களுக்குள் தனது பதிலை / முடிவினை விவரிப்பார். தாமதத்திற்கு தகுந்த காரணங்களை எழுத்து மூலம் தெரிவித்து விட்டு, அவர் மேலும் 15 நாட்கள் (மொத்தம் 45 நாட்கள்) எடுத்துக் கொள்ளலாம்.
* முதல் மேல் முறையீட்டு அலுவலர் வாய்மொழி ஆணை அல்லது எழுத்து பூர்வ ஆணை அளிக்க அதிகாரம் பெற்றவர் ஆவார்.

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் இரண்டாம் மேல் முறையீட்டு மனு செய்வது எப்படி?

* மேல்முறையீட்டு மனுவை பூர்த்தி செய்து, இது வரை கிடைக்கப் பெற்ற பதில்களின் நகல்களை இணைத்து அனுப்பலாம்.
* மேல்முறையீடு எனில் புகார்/ புகார்தாரர் ஆகியவற்றை நீக்கவும்.
* முதல் மேல்முறையீட்டு மனுவின் நகல் மற்றும் இணைப்புகள் விண்ணப்பம் நிறப்புக் கட்டணமான ரூ. 10-ஐ வங்கி கேட்பு காசோலை/செலுத்துசீட்டு/அஞ்சல் ஆணை/ ரொக்கம் செலுத்திய ரசீது போன்றவை மூலம் செலுத்தலாம்.
* தலைமை தகவல் உரிமை அலுவலரின் தாக்கீது கடிதத்தின் நகல் மற்றும் கட்டணங்கள் அனுப்பியமைக்கான அஞ்சலக சான்று (நகல்)
* அஞ்சலக தபால் ஒப்புகை, மற்றும் தலைமை பொது தகவல் மைய அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட ஒப்புகை மற்றும் முதல் மேல்முறையீட்டு அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட ஒப்புகைகள்.
* தலைமை பொது தகவல் அலுவலர் மற்றும் முதல் மேல் முறையீட்டு அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட முடிவுரை அறிவுறுத்தல்கள்
* அனைத்து படிவங்களையும், தாள்களையும் குறியீடிட்டு வரிசைப்படுத்தி, ஒவ்வொரு தாளின் வலது பக்க மேல் மூலையில் வரிசையின்படி பக்க எண் குறிப்பிடவேண்டும். இது இரண்டும் மேல்முறையீட்டு மனுவின் முதல் பிரதி ஆகும்.
* மேற்கண்ட அனைத்தையும் நான்கு தொகுப்புகள்/ புகைப் பிரதி எடுக்கப்படவேண்டும்.
* ஒவ்வொரு பக்கத்தின் கீழ் கையொப்பமிடவேண்டும்.
* முகவுரை பக்கம் மற்றும் தாக்கீது விபர பட்டியலிலும் கையொப்பமிட வேண்டும்.
* புகை பிரதிகளின் கீழ், சுய உண்மை நகல் சான்று ஒப்பமிடல் வேண்டும் “உண்மை நகல்” என்று எழுதி அதன்கீழ் கையொப்பமிட்டு அதன் கீழ்முழுப் பெயரை தெளிவாக எழுதுதல் வேண்டும்.
* ஒரு தொகுப்பினை தலைமை தகவல் அலுவலருக்கு பதிவு அஞ்சல் (அ) விரைவு அஞ்சல் மூலம் அனுப்பவும். முதல் மேல் முறையீட்டு அலுவலருக்கு ஒரு தொகுப்பும் அனுப்பவேண்டும். அனுப்பியதற்குண்டான ரசீதுகளையும் இணைக்க வேண்டும்.
* முதன்மை விண்ணப்பத்தினை, பதிவு அஞ்சல் மூலமாக (கூரியர் கூடாது) கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்
* The Registrar,

CENTRAL INFORMATION COMMISSION
II floor, August Kranti Bhavan,
Bhikaji Kama Place,
NEW DELHI 110066

* ஒரு தொகுப்பினை தங்கள் பரிசீலனைக்கு பத்திரப்படுத்தவும்.
* தலைமை தகவல் அலுவலரிடமிருந்து மனு கிடைத்ததற்கான ஆதாரம் 15 நாட்களுக்குள் பெறவில்லை எனில், மீண்டும் ஒரு நகலை விரைவு அஞ்சல் மூலம் அனுப்பவும்.
* உங்கள் அருகாமையில் உள்ள தொண்டு நிறுவனங்கள் அல்லது தகவல் பெறும் உரிமை சம்பந்தமாக பணியாற்றும் நிறுவனங்களிடமிருந்து இது தொடர்பான ஆலோசனையும் பெறலாம்.

தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் யார் யாரெல்லாம் தகவல் பெறலாம்?

* எந்த ஒரு இந்தியக்குடிமகனும் தகவல் பெறலாம்
* இந்தச்சட்டம் இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் தவிர மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.
* அயல்நாட்டு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் இந்த சட்டத்தின்கீழ் தகவல் பெறலாம்.
* இந்திய குடிமகன்கள், அயல்நாட்டு வாழ் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தகவல் பெறும் உரிமைக்காக தங்களது விண்ணப்பங்களை, அந்தந்த நாடுகளில் உள்ள நமது நாட்டின் தூதரக அலுவலகங்களில் தேவையான கட்டணத் தொகை மற்றும் அதை செலுத்தும் முறை பற்றி அறிந்துக் கொள்ளலாம்.

தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பத்தினை எவ்வாறு சமர்ப்பிக்கலாம்?



தகவல் பெறும் உரிமைச்சட்டத்திற்கான உங்களுடைய
விண்ணப்பம் உரிய தகவல் அலுவலரிடம் சென்றடைந்துள்ளதா, அதற்கான சான்றுகள் உள்ளனவா என்பதை அறிய, கீழ்கண்ட வழிமுறைகள் பெரிதள்வில் உதவும்.

* நேரடியாக கையில் விண்ணப்பதினை கொடுத்தல் - உங்கள் விண்ணப்பதினை பெற்றுக் கொண்டபின், அதற்கான நகல், கட்டணம் செலுத்தியமைக்கான ரசீது, அதில் கையெழுத்து, தேதி, அலுவலக முத்திரை அனைத்தும் இருக்கிறதா என உறுதி செய்து கொள்ளுதல்.
* பதிவு அஞ்சலுடனான பதில் அட்டை (AD) - இந்த அட்டையில் உள்ள தபால்துறை முத்திரை, விண்ணப்பம் சென்று சேர்ந்துள்ளமைக்கான உத்திரவாதத்தை அளிக்கிறது. பதிவு அஞ்சலுடனான அட்டையில் கையெழுத்து, தேதி, முத்திரை சரியாக இல்லையென்றால், தபால் அலுவலகத்திற்கு சென்று இவற்றையெல்லாம் சரி செய்து, வாங்கித் தருமாறு கேட்க வேண்டும்.
* விரைவு அஞ்சல் (தபால் துறையின் ஒரு சேவை) - உங்கள் விண்ணப்பதினை விரைவு அஞ்சலில் அனுப்பி வைத்தல். http://www.indiapost.gov.in/speednew/trackaspx என்ற இணைய தளம் மூலம் உரிய அலுவலகத்திற்கு சென்று சேர்ந்துள்ளதா என்பதை அறிந்து அதற்கான நிலை குறித்து ஒரு அத்தாட்சி பெற்று வைத்துக் கொள்ள வேண்டும்.
* சாதாரண அஞ்சல் அல்லது தனியார் விரைவு அஞ்சல் சேவை மூலம் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை அனுப்பக் கூடாது. காரணம், விண்ணப்பம் சேர்ந்தமைக்கான உத்திரவாதம் எதுவும் கிடைக்காது.

Sunday, 17 July 2011

மாத்தி யோசி..

அவன் வாழ வழியற்ற குருடன் ஒருவன். தன் வயிற்றினை கழுவிக்கொள்ள தெருவில் உட்கார்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்தான் அருகில் , “நான் குருடன் உதவி செய்யுங்கள்” என்று ஒரு பலகை. முன்னால் கொஞ்சம் நாணயங்கள் அவனது திருவோட்டினுள் சிதறிக்கிடந்தன. இலக்கின்றி அவன் பார்வை எங்கோ வெறிச்சிட்டு நின்றது. நிச்சயமாக அவனக்கு கிடைத்துள்ள அந்நாணயங்கள் அவனது ஒரு வேளை உணவுக்கும் போதாது என்பதை அவன் அறிவானோ என்னவோ??
 
உலகம் வெகு வேகமாக இயங்கிகொண்டிருந்தது. எந்திரம் போல மக்கள் இயங்கிக்கொண்டிருந்தனர். அவ் ஏழை குருடனை நின்று கவனிக்க யாருமில்லை. இருந்தும் ஒருசில விட்டெறிந்த சில்லறைகள்தான் அவனைச்சுற்றிக்கிடந்தன.

அப்போது அதுவழியே வந்த ஒரு பெரியவர், நின்று, சில்லறைகள் சிலவற்றினை இடும்போது அவன் அருகில் இருந்த பலகையினை நோக்கினார். அதை எடுத்து வேறு எதுவோ கிறுக்கிவிட்டு இருந்த இடத்தில் வைத்துவிட்டு அவர் சென்றுவிட்டார். யாரோ தன் அருகிலிருக்கும் பலகிஅயில் அதுவோ செய்கின்றனர் என்பதை ஒலிக்குறிப்பில் உணர்ந்தாலும் அக்கண்பார்வையற்றவன் எதுவும் கூறவில்லை.
 
என்ன ஆச்சரியம்! சிறிது நேரத்திற்கெல்லாம் அவனது பாத்திரம் நிரம்பிவிட்டது. முன்பு கனிக்காமல் சென்ற மனிதர்கள் இப்போது அவனை நின்று கவனித்து அவனுக்கு ஏதாவது கொடுத்துவிட்டு செல்வதை உணர்ந்தான் அம்மனிதன். அதுவும் இம்மாற்றம் முன்பு யாரோ பலகையில் செய்த மாற்றத்தால் என்பதையும் அவன் உணரத்தவறவில்லை.


அந்தி சாயும் வேளை , அப்பெரியவர் மீண்டும் அவ்விடம் வந்தார். அவரது காலடிச்சத்தத்தில், அவரை அடையாளம் கண்டுகொண்டான் ( ? ). அவரிடம் ஐயா, நீங்கள்தான், என் இயலாமையினை விளம்பரப்படுத்தி நான் வைத்த அறிவிப்பில் ஏதோ செய்தீர்கள் என நினைக்கின்றேன். நீங்கள் செய்த மாற்றத்திற்கு பின்னால் எனக்கு சில்லறைகள் போதுமானதாக கிடைத்துள்ளன என்பதை நான் உணர்கின்றேன், உங்களுக்கு என் நன்றிகள். நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை எனக்கு சொல்வீர்களா? என வினவினான்.

சிரித்துக்கொண்டே அப்பெரியவர் சொன்னார். வேறொன்றுமில்லை, நீ
எனக்கு கண் தெரியாது”. என நீ எழுதி வைத்ததை, கொஞ்சம் மாற்றி “ இன்றைய நாள் , மிக அழகானது. ஆனால் எனக்கு பார்க்கும் பாக்கியமில்லை” என மாற்றி எழுதினேன். அவ்வளவுதான் என சொன்னார்.

அவனுக்கு எதுவோ புரிந்தது.


அவன் முன்பு எழுதி வைத்த சேதிக்கும் பின்னர் அப்பெரியவர் மாற்றி எழுதிய செய்திக்கும் இடையில் வித்தியாசம் எதுவும் இல்லை. ஆனாலும் அப்பெரியவர் மாற்றியதில் இன்னும் விடயம் இருந்தது.

அவன் தனக்கும் மட்டும் குருடு என்பதை உலகுக்கு அறிவித்தான். அதில் இருந்த விடயம் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை. ஆனால் அப்பெரியவர் மாற்றிய செய்தியில், பிறருக்கும் செய்தி இருந்தது. அவர்கள் இக்குருடனை விட பாக்கியம் பெற்றவர்கள் என்பது உணர்த்தப்பட்டிருந்தது. இதுதான் அவனுக்கு மேலும் பணம் சேர்க்க உதவியது.

புதிது புனைதல் (innovation) புதுமை (Novel) என்பன இருந்தால் வாழ்க்கையில் இன்னும் விரைந்து முன்னேறலாம். மொத்தத்தில் மாற்றி யோசியுங்கள்.

Monday, 4 July 2011

பேஸ் புக் மூலம் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ். யுவதி!


பேஸ் புக் மூலம் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ். யுவதி! (ஆதாரம் இணைப்பு)
[ 2011-07-04 07:45:23 | வாசித்தோர் : 2770 ]


வெளிநாடுகளில் குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் வாழ்ந்து வருகின்ற இலங்கைத் தமிழர்களை ஏமாற்றி தாயகத்தைச் சேர்ந்த தமிழ் யுவதி ஒருவரால் பேஸ் புக் சமூக இணைப்பு இணையத் தளம் மூலமாக குறைந்தது ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது.
ஏமாற்றுப் பேர்வழியின் உண்மையான பெயர் கந்தையா தர்ஷனா. சொந்த இடம் யாழ். சாவகச்சேரியில் கல்வயல் கிராமம். 1986 ஆம் ஆண்டு செப்டெம்பர் 25 ஆம் திகதி பிறந்தவர். தற்போது கொழும்பில் இருக்கின்றார்.


 இவர் பல பெயர்களிலும் பேஸ் புக்கில் நடமாடுகின்றார். யது கார்த்தி என்கிற பெயரிலும் பேஸ் புக் கணக்கு வைத்து இருக்கின்றார்.
பேஸ் புக் பாவனையாளர்களான புலம்பெயர் தமிழர்களில் பல வயதுக்காரர்களையும் கைக்குள் போட்டுக் கொள்வார்.
இவர் அழகான தோற்றம் உடையவர். குழைந்து பேசுவார்.
அனுதாபத்தை பெறுதல், கவர்ச்சி காட்டுதல் ஆகிய உத்திகளைக் கையாண்டு பணம் பறிக்கின்றமை இவரின் வாடிக்கை.
பெற்றோர் இறந்து விட்டனர் என்பார், வெளிநாட்டில் படிக்க பெருந்தொகை நிதி தேவை என்பார், மன பாதிப்பு உடையவர் போல கைகளை சவர அலகால் அறுத்துக் காண்பிப்பார். - இவையெல்லாம் அனுதாபம் பெறுகின்றமைக்காக. 



காதலிக்கின்றமை போல் நடிப்பார்,  செக்ஸியான தோற்றத்தில் தோன்றுவார். கிளுகிளுப்பு ஊட்டுகின்ற வார்த்தைகள் பேசுவார். - இவையெல்லாம் கவர்ச்சி காட்டுதல் என்கிற உத்தியின் கீழ்.
 


ஸ்கைப், தொலைபேசி ஆகியவற்றின் மூலமாக தொடர்புகளை நெருக்கமாக்கிக் கொள்வார்.
பணம் கிடைத்தமையுடன் அனுப்பியவருடனான தொடர்பை அறுத்துக் கொள்வார்.
சாவகச்சேரியின் கொமர்ஷல் வங்கியில் உள்ள இவரின் கணக்கு ஒன்றுக்கு மாத்திரம் ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றது.
மகளின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டு இருக்கின்ற பணத் தொகையை பார்த்தபோது வங்கியிலேயே தாய் மயங்கி விழுந்த சம்பவமும் இடம்பெற்று உள்ளது.
யுவதியின் மோசடி நடவடிக்கைகளுக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒருவர்தான் சூத்திரதாரி . இந்நபரின் பெயர் ஜெய்சன்.
யுவதியின் கணக்குக்கு வருகின்ற பணத்தை சொந்தக் கணக்குக்கு இவர் மாற்றிக் கொள்வார்.



தற்போது யுவதியின் கையடக்கத் தொலைபேசி இவரின் பாவனையில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தொலைபேசி அழைப்பு விடுக்கின்றபோது இவர் படுகொலை அச்சுறுத்தல் விடுத்து வருகின்றார்.



இம்மோசடிகள் குறித்து இலங்கைப் பொலிஸாருக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று உள்ளன. இம்மோசடிகள் குறித்த பூரண தகவல்களை பொலிஸார் திரட்டி வருகின்றனர். அத்துடன் ஏமாற்றுப் பேர்வழிகளான யுவதி, ஊடகவியலாளர் ஆகியோரின் நடவடிக்கைகளை மிகவும் நெருக்கமாக கண்காணித்து வருகின்றார்கள்.
இதே நேரம் பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர் நாடுகளில் வழக்கு நடவடிக்கைகளை முடுக்கி விட்டு உள்ளார்கள். வெளிநாட்டு நீதிமன்றங்களின் பிடியாணை உத்தரவுகள் மூலம் சர்வதேச பொலிஸாரைக் கொண்டு யுவதி, ஊடகவியலாளர் ஆகியோரைக் கைது செய்கின்றமை குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருகின்றார்கள்.
பேஸ் புக் பாவனையாளர்களான புலம்பெயர் தமிழர்களை மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். அத்துடன் இந்த யுவதியால் ஏமாற்றப்பட்டவர்கள் வேறு யாராவது இருக்கின்ற பட்சத்தில் எம்முடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று கோரப்படுகின்றார்கள்.
மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் :- 0094778200114, 0094772398030
மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கைப் கணக்கு பெயர்கள் :- madhu, karthika

Friday, 1 July 2011

சாலை விபத்து அதிகரிக்க 10 காரணங்கள் + நிவாரணங்கள் !


இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு 1,20,000 பேர்  சாலை விபத்துக்களில்பலியாகின்றனர் .இது கிட்டத்தட்ட ஆண்டுக்கு ஒரு அணு குண்டு இந்தியாவில்வீசப்பட்டால் பலியாவோரின் எண்ணிக்கைக்கு சமம் .உலக அளவில் முதலிடம் .இதற்கு காரணங்கள் என்ன இதற்க்கு தீர்வு  என்ன என்பது குறித்த ஓர் அலசல்.

1 .வாகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஒவ்வொரு வருடமும் வாகனங்களின் எண்ணிக்கை அளவுக்கதிகமாக அதிகரித்து வருகிறது .குறிப்பாக சிறிய ரக கார்கள் இரு சக்கர வாகனங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட பல மடங்கு அதிகரித்துள்ளது .வாகன நெரிசல் காரணமாக அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன .

நிவாரணம் :பேருந்து வசதிகள் அனைத்து ஊர்களுக்கும் தேவையான அளவில் தேவையான நேரத்தில் செய்யப்படவேண்டும் .

2 .வேகம்
பல வாகன ஓட்டிகள் நிதானமான வேகத்தை கடை பிடிப்பதில்லை.வேகமாக ஒட்டுவதால் அவர்களுக்கும் அதை விட அதிகமாக பிறருக்கும்  பிரச்சினைகள் ஏற்படுகின்றன .

நிவாரணம் :அளவுக்கதிகமாக வேகத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது போக்குவரத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் ,வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு தேவை .


3 .ஓட்டுனர் உரிமம்

வாகனகள் ஓட்ட தெரியாதவர்களுக்கு உரிமம் அளிப்பதால் அதிக விபத்துக்கள்நிகழ்கின்றன .அடிப்படையான சாலை விதிகள்கூட பலருக்கு தெரிவதில்லை .

நிவாரணம் : தகுதியில்லாதவர்களுக்கு  ஓட்டுனர் உரிமம் வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .


4 . தூக்கம்

அதிக அளவில் சாலை விபத்துக்கள் நடப்பது இரவு 12 மணியிலிருந்து அதிகாலை5  மணிக்குள் .இதற்கு காரணம் போதிய ஓய்வின்றி ஓட்டுனர்கள் வாகனம் ஓட்டுவதுதான்.

நிவாரணம் :ஓட்டுனர்கள் தேவையான அளவு தூங்கி ஓய்வெடுக்கவேண்டும் .நீங்கள் ஓய்வெடுக்காவிட்டால் பலர் நிரந்தரமாக ஓய்வெடுக்கவேண்டியது வரும் .நீண்ட தூர பிரயாணங்களுக்கு கண்டிப்பாக இரு ஓட்டுனர்கள் இருக்க வேண்டும் .


5 .குடி போதை

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் அதிக அளவில் விபத்துக்கள் நிகழ்கின்றன .

நிவாரணம் : பல சாலை விபத்து வழக்குகளில் குடிபோதையில் வாகனம் ஒட்டிய விஷயம்  சேர்க்கப்படுவதில்லை என்பது பலரது புகாராக உள்ளது .குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு சரியான தண்டனை வழங்கவேண்டும் .நெடுஞ்சாலைகளில் மதுபானக்கடைகளை அகற்றவேண்டும் .


6 . தரமற்ற வாகனங்கள் 
 
காலாவதியான வாகனங்களை ஓட்டுவதால் ஓட்டுனர் திறமையானவராக இருந்தாலும் விபத்தை தடுக்க இயலாமல் போய் விடுகிறது .
 
நிவாரணம் : தகுதியில்லாத வாகனங்களின் உரிமத்தை அதிகாரிகள் ரத்துசெய்யவேண்டும் .காலாவதியான அரசுப்பெருந்துகளை இயக்குவதை தவிர்க்கவேண்டும் 

7 .பழுதடைந்த சாலைகள் 
 
குண்டும்  குழியுமான  சாலைகளும் பல விபத்துக்கு காரணமாகின்றன .
 
நிவாரணம் :பழுதடையும் சாலைகளை உடனடியாக துறை சார்ந்தவர்கள் சரி செய்ய வேண்டும் .
8 .பொதுமக்கள் அலட்சியம்   

சாலை விதிகளை பொதுமக்கள் மீறுவது போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடப்பது வளர்ப்புப் பிராணிகளை சாலையில் நடமாட விடுவதும் விபத்துக்களுக்கு காரணமாகிறது .
 
நிவாரணம் :பொதுமக்கள் விழிப்புணர்வு 

9 .சாலைகள் வடிவமைப்பு 
 
புதிதாக அமைக்கப்படும் சாலைகளின் வடிவமைப்பு குறை பாடுகளாலும் சில விபத்துக்கள் நேரிடுகின்றன .
 
நிவாரணம் :தேர்ந்தவர்களை கொண்டு சாலைகளை வடிவமைக்கவேண்டும் 
10 . ஆக்கிரமிப்பு   சாலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கடைகள் கட்டுவதால் வாகன நெரிசல் அதிகமாகி விபத்துக்கள் நேரிடுகின்றன.பொதுமக்கள் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன .
 
நிவாரணம் : ஆக்கிரமிப்புகளை பார பட்சமின்றி அகற்றவேண்டும் .