காதலர்கள் ஜோடியாக ஆபாச இணைய தளங்களை பார்ப்பது அதிகரித்து வருகிறது என்றார் சென்னையில் உள்ள நெட் செண்டர் உரிமையாளர் ஒருவர். அத்தகைய தளங்களை முடக்கி வைத்தால் காத்து வாங்க ஆரம்பித்து விடுகிறது. இப்போது இணைய தள வசதிகள் இளைய தலைமுறையின் அத்தியாவசிய பொருளாக கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறது. இணைப்புகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
மலையாள படங்களில் ஆபாசத்தை செருகி நடந்து வந்த சினிமா வியாபாரம் காலாவதியாகி விட்ட்து. ஊரில் நான்கு தியேட்டர்கள் இருந்தால் ஒன்றில் A படம் ஓடிக் கொண்டிருக்கும். இம்மாதிரி விஷயங்களில் ஆர்வம் அதிகமாக உள்ள வளரிளம் பருவத்தினர் நிரம்புவார்கள்.இப்போது இணைய தளங்கள் அவர்களுக்கு எளிதாக இருக்கின்றன.
எப்போதும் கையில் லேப்-டாப் சகிதம் இருக்கும் இளைஞர்கள் இன்று அதிகம்.பெரும்பாலானோர் குடும்பத்தை விட்டு தனிமையில் இருப்பவர்களும் கூட. அல்லது தன்னையொத்த வயதில் இருப்பவர்களுடன் தங்கியிருப்பார்கள்.துவக்கத்தில் ஆர்வத்தில் ஆரம்பித்து பின்னர் அதுவே வழக்கமாகி விடுகிறது.
ஆபாச இணைய தளங்கள் தாம்பத்ய வாழ்வைக் கெடுக்கும் என்பதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. கணினியில் காட்சிகளை பார்க்கும்போது மட்டுமே அவர்களது உணர்வுகள் தூண்டப்படும் அளவுக்கு அடிமையாகி விடுவதால் மனைவியின் மீது ஈர்ப்பில்லாமல் போய்விடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.ஒரு மனநோயாக மாறி குடும்பத்தை கூறுபோட வழி வகுத்துவிடும்.
மன நலம் மட்டுமன்றி உடல் நலத்துக்கும் இவை கேடு விளைவிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். அஜீரணம்,தலைவலி,உள்ளிட்ட உடல் நலக்கோளாறுகளை தோற்றுவிப்பதோடு முறையான உடல் இயக்கத்தையும் கெடுத்துவிடுகிறது. தவிர புகைப்பழ்க்கம்,மது அருந்துதல் ஆகியவை இதனால் அதிகரிக்கும். இதுவே எல்லா உடல்,மன நல கோளாறுகளையும் கொண்டு வந்து விடும். சாத்தியமான வரையில் பெற்றோர்கள் இளைஞர்களை தம் கண்காணிப்பில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது.
No comments:
Post a Comment