பசுமரத்தாணிப் போன்று பதியக்கூடிய உணரும் பிஞ்சுப்பருவத்தில் தொழுகையைப் புகுத்தியதும் அது உள்ளத்தில் பதிவதற்காக வல்லோன் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து விட்டு தஃவாவுடனானத் தெடர்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தாய், தந்தையர் தங்கள் பிள்ளைகளுக்காக செய்ய வேண்டிய கடமையான காரியங்கில் இவைகள் முக்கியமானவைகளாகும்.
இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவர்களுக்காக கோடி, கோடியாக சொத்துகளைக் குவிப்பதில் மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால் அது இவ்வுலக வாழ்க்கைக்கு மட்டும் உதவலாம் அது பலருக்கு உதவாமலும் போகலாம். காரணம் நீங்கள் சில கோடிக்கு சொத்து சேர்த்து வைத்திருப்பீர்கள் உங்கள் மகனோ நீங்கள் வாழும் காலத்திலேயே உங்கள் கண் முன்பே பல கோடிக்கு சொத்துகளை சேர்த்திடலாம்.
இந்த நிலையும் இன்று சமுதாயத்தில் சிலரது வாழ்வில் நடப்பதைப் பார்க்கின்றோம் இந்நிலை ஒருவருக்கு ஏற்பட்டுவிடுமாயின் அவர் தன் மகனுக்கு முன்கூட்டியே தஃவா சிந்தனையை விதைத்திருக்காவிடில் அவரை விடக்கூடுதலாக ஈட்டியப் பொருளாதாரம் அவருடைய மகனை அவரது கண் முன்னே சீரழிவுக் கலாச்சாரம் அதள பாதாளத்தில் தள்ளிவிடும் அபாயம் ஏற்பட்டு விடும். அவர் ஹாலில் அமர்ந்திருக்கும் போது அவரது கோடீஸ்வர மகன் அவரைக்கடந்து மாடிக்கு செல்லும்போது மப்பில் (போதையில்) செல்வார் அவர் கோபப்பட முடியாது கோபப்பட்டாலும் அது பயன் தராது. உங்கள் மகனுக்காக நீங்கள் விழுந்து விழுந்து சொத்து சேர்ப்பதற்கு முன்பே தொழுகையையும், தஃவா சிந்தனையையும் விதைத்திருந்தால் தந்தையின் கோபத்தில் இறைவனின் கோபம் இருக்கிறது என்பதை தஃவாவின் மூலம் அறிந்துகொண்டு எத்தனை நூராயிரம் கோடிகளுக்கு சொத்து சேர்த்திருந்தாலும் தந்தை எதிரே வரும்பொழுது அல்லது தந்தையை கடக்கும்பொழுது கண்ணியம் பேணத் தவற மாட்டார், உங்களுக்கு கோபத்தை மூட்டும் எந்த செயலிலும் ஈடுபட மாட்டார்,
எந்த சீரழிவு கலாச்சாரமும் அவரை தடம் புரளச் செய்யாத அளவுக்கு தஃவா முட்டுக் கொடுக்கும். வயதான காலத்தில் பணிவு என்னும் இறக்கையை உங்கள் மீது தாழ்த்துவதற்கும் தஃவாவுடனானத் தொடர்பே தூண்டுதலாக அமையும். இன்று முதியோர் இல்லங்கள் நிரம்பி வழிவதால் ஏராளமான தாய்-தந்தையர் தங்களுடைய வயதான காலத்தில் மகன்கள் கவனிப்பதில்லை வீடு வாசல், சொத்து சுகங்களைப் பிடுங்கிக்கொண்டு விரட்டி விட்டார்கள் என்று காவல்நிலையத்தின் கதவுகளைத் தட்டுவதை செய்தித் தாள்களில் படிக்கும்பொழுது கண்கள் கலங்குகிறது. நம்முடைய சமுதாயத்தில் வயதானவர்கள் கடந்த காலங்களில் முதியோர் இல்லம் சென்று அடைக்கலம் புகுவதற்கு மறுத்து மருமகன்களிடம் அடைக்கலம் பெற்று அவருடைய வீட்டு வேலைகளை செய்து கொடுத்து மருமகன் வீட்டில் மரணித்தவர்களே ஏராளமானோர்.
மாமியார், மாமனாரை வேலை வாங்க எல்லா மருமகன்களும் விரும்பாதக் காரணத்தால் பலர் அந்நியர்களிடம் வீட்டு வேலைக்காரர்களாக அடைக்கலம் புகுவர் அங்கு நோய் வாய்பட்டால் அவர்களும் வெளியேற்றி விடுவார்கள் அரசு மருத்துவமனைகளில் அதிகம் கட்டில்கள் இடாத காரணத்தால் அதன் வராண்டாவில் படுக்கும் முதிர்நோயாளிகள் கருணை கொலைக்கு உள்ளாக்கப்படும் அவலநிலை ஏற்படுகிறது. தமிழகத்தில் தவ்ஹீத் புரட்சி வெடித்து தஃவா சிந்தனை மக்களிடம் பரவிச் சென்றதால் மேற்காணும் தாய்-தந்தையரை விரட்டி அடிக்கும் அவலநிலை ஓரளவாகினும் குறைந்தது. தஃவா சிந்தனையை விதைக்கும் அரும்பணியில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தொழுகையும், தஃவா சிந்தனையும் இல்லாத பிள்ளைகளால் துறத்தப்பட்டு அல்லது முன்கூட்டியே பிள்ளைகளை இழந்த தாய்-தந்தையரை கருணை உள்ளத்துடன் பராமரித்து கடைசிகாலத்தில் ஏகத்துவ கலிமாவை மொழியச்செய்யும் அரும்பணிக்காக முதியோர்இல்லம் திறந்து செயல்படுகிறது.
http://www.tntj.net/charitable-service/old-age-hom e/ வயதான காலத்தில் தாய்-தந்தையருக்கு மகன்கள் ஆற்றும் கடமையானக் காரியங்களை அறிந்து கொள்வதற்கு வழிவகுப்பது தஃவா என்பதால் தொழுகையை விதைக்கும் பொழுதே தஃவாவை அறிந்து கொள்வதற்கான வழித்தடத்தையும் தாய்-தந்தையர் காட்டிக்கொடுத்து விட்டால் மேற்காணும் அவலநிலை அதிகம் ஏற்படாது.
ஏற்க மறுத்தால் ? தாய்-தந்தையரும், மார்க்க அறிஞர்களும் படைத்தவனை தொழுவதற்கு ஏவியப் பின்னரும் படைத்தவனை தொழ மறுத்து பெயரளவில் முஸ்லீமாக இருந்துகொண்டு இதர தேவைகளுக்காக திருமனம் முதல் மரணம் வரை இஸ்லாமிய சட்டங்களை பயன்படுத்திக் கொண்டு வாழ்ந்து மரணித்தவனுக்கு மறுஉலகில் கடுமையான தண்டனையை அல்லாஹ் தீர்மாணித்து வைத்திருக்கின்றான்.
நரகில் பல்வேறு வகையான நெருப்பு மூட்டல்கள் மூட்டப்படும் அதில் தொழுகையை விட்டவர்கள் ''சக்கர்'' என்ற நெருப்பு மூட்டலில் புகுத்தி சித்ரவதை செய்யப்படுவார்கள். ஒவ்வொருவனும், தான் செய்ததற்குப் பிணையாக்கப்பட்டுள்ளான். வலதுபுறத்தில் இருப்போர் தவிர. அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் ''உங்களை நரகத்தில் சேர்த்தது எது?'' என்று விசாரிப்பார்கள். திருக்குர்ஆன் 74:38, 39, 40, 41, 42.
சுவனத்தின் வாழும் சொர்க்கவாசிகள் ''சக்கர்'' என்ற நெருப்பில் பொசுங்கும் நரகவாசிகளிடம் இந்நிலை உங்களுக்கு ஏற்பட எது காரணமாக இருந்தது என்று கேட்க ? அதற்கவர்கள் உலகில் வாழும் காலத்தில் உங்களைப் போன்று படைப்பாளனை தொழுபவர்களாகவும், வறியோருக்கு உதவுபவர்களாகவும் நாங்கள் இருக்கவில்லை, உலக சுகபோகங்களில் இடைவிடாது மூழ்கித் திளைத்ததால் மீண்டும் எழுப்பப்படுவோம் என்பதை எங்கள் உள்ளம் ஏற்க மறுத்தது இந்த அவநம்பிக்கை எங்கள் மரணம் வரை நீடித்தது என்று பதிலளிப்பதாக அல்லாஹ் கூறுகிறான் ''நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம் தீர்ப்பு நாளை பொய்யெனக் கருதி வந்தோம். (எனவும் கூறுவார்கள்). திருக்குர்ஆன் 74: 43, 44. 45. 46.
தர்ம சிந்தனை தொழுபவர்களின் மீது அல்லாஹ்வின் சாந்தி இறங்குவதால் அவர்களது உள்ளத்தில் கருணை குடிகொண்டிருக்கும் அதனால் அவர்களது உள்ளம் இரக்கத்தால் சூழப்பட்டிருக்கும் இரக்கசிந்தனை தர்மம் செய்யத் தூண்டும். தொழாதவர்கள் அல்லாஹ்வின் கருணையிலிருந்து தூரமாவதால் அவரது உள்ளம் இறுகுகிறது அவர் கடின சித்தமுடையவராக மாறுகிறார் அவரது கடினசித்தம் கஞ்சத்தனத்தின் பால் இழுத்துச் செல்லும் அதனால் பிறருக்கு கொடுத்துதவ மாட்டார்.
தொழுகையை விட்டவர்களிடம் அல்லது அறவே தொழாதவர்களிடமிருந்து ஷைத்தான் முதலில் அகற்றுவது தர்மசிந்தனையைத்தான் அதனால்தான் மேற்காணும் விதம் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' என்று தொழுகையை விட்டவர்கள் நரக நெருப்பில் பொசுங்கிக் கொண்டிருக்கும் பொழுதுக்கூறுவதாக அல்லாஹ் கூறுகிறான்.
என்டர்டெயின்மென்ட் தர்ம சிந்தனையை அகற்றியப் பின் தான் ஈட்டியப் பொருளாதாரத்தை தன்னுடைய உடல் சுகத்திற்கு செலவிடுவதற்காக என்னென்ன வழிகள் இருக்கிறது என்று ஷைத்தான் தேட விடுவான் தடுக்கப்பட்ட வழியில் சுகம் அனுபவிப்பதற்காக ஓடுபவருடன் இவரும் சேர்ந்து ஓடுவார். இன்று இஸ்லாம் தடைசெய்த அம்சங்கள் திறந்து விடப்பட்ட நாடுகளை நோக்கி முஸ்லீம்கள் ஓடுவதை நம் கண் முண்ணேப் பார்க்கின்றோம். அதனால் தான் மேற்காணும்விதம் ''நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம் 74: 43, 44. 45.
என்று தொழுகையை விட்டவர்கள் நரக நெருப்பில் பொசுங்கிக் கொண்டிருக்கும் பொழுதுக்கூறுவதாக அல்லாஹ் கூறுகிறான்.
மறுமையின் மீதான நம்பிக்கை தொழுகையை விட்டதும், தர்மசிந்தனையை அகற்றி, சுயநினைவை இழக்கச்செய்யும் மோசமானப் பொழுதுபோக்கு அம்சங்களில் ஷைத்தான் அவர்களை ஊறித்திளைக்கச் செய்ததும் மறுமை நம்பிக்கை அவர்களிடமிருந்து தாமாகவே மேலோங்கி விடும். அதனால் தான் மேற்காணும்விதம் ''நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம் தீர்ப்பு நாளை பொய்யெனக் கருதி வந்தோம். (எனவும் கூறுவார்கள்). என்று தொழுகையை விட்டவர்கள் நரக நெருப்பில் பொசுங்கிக் கொண்டிருக்கும் பொழுதுக் கூறுவதாக அல்லாஹ் கூறுகிறான். திருக்குர்ஆன் 74: 43, 44. 45. 46.
இஸ்லாம் கூறும் எந்த ஒரு அமலைச் செய்தாலும் மறுமை சிந்தனையுடன் செய்யவில்லை என்றால் அது அவர்களிடமிருந்து உலகிலேயே விலகி விடும். அதற்காகத் தான் அல்லாஹ் தன் திருமறையில் இறை நம்பிக்கையாளர்களைப் பார்த்து மறுமையின் மீது நம்பிக்கை வைத்து தொழுகையை நிலைநாட்டும் படியும், தர்மம் செய்யும் படியும் கூறினான்.
அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். திருக்குர்ஆன் 2.:3.
மறுமையின் மீது உறதியான நம்பிக்கையுடன் நம்முடையத் தொழுகையை அமைத்துக் கொண்டு மறுமையில் வெற்றி பெற்று சொர்க்கவாசிகளாக ஆக வேண்டுமென்றால் பிள்ளைகள் உணரும் பிஞ்சுப் பருவத்தில் தொழுகையை விதைத்து அது உள்ளத்தில் பதிவதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதுடன் தஃவாவுடனானத் தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எழுதியபடி என்னையம், வாசித்தப்படி உங்களையும் அமல் செய்யக்கூடிய நன்மக்களாக வல்ல அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக ! 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவர்களுக்காக கோடி, கோடியாக சொத்துகளைக் குவிப்பதில் மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால் அது இவ்வுலக வாழ்க்கைக்கு மட்டும் உதவலாம் அது பலருக்கு உதவாமலும் போகலாம். காரணம் நீங்கள் சில கோடிக்கு சொத்து சேர்த்து வைத்திருப்பீர்கள் உங்கள் மகனோ நீங்கள் வாழும் காலத்திலேயே உங்கள் கண் முன்பே பல கோடிக்கு சொத்துகளை சேர்த்திடலாம்.
இந்த நிலையும் இன்று சமுதாயத்தில் சிலரது வாழ்வில் நடப்பதைப் பார்க்கின்றோம் இந்நிலை ஒருவருக்கு ஏற்பட்டுவிடுமாயின் அவர் தன் மகனுக்கு முன்கூட்டியே தஃவா சிந்தனையை விதைத்திருக்காவிடில் அவரை விடக்கூடுதலாக ஈட்டியப் பொருளாதாரம் அவருடைய மகனை அவரது கண் முன்னே சீரழிவுக் கலாச்சாரம் அதள பாதாளத்தில் தள்ளிவிடும் அபாயம் ஏற்பட்டு விடும். அவர் ஹாலில் அமர்ந்திருக்கும் போது அவரது கோடீஸ்வர மகன் அவரைக்கடந்து மாடிக்கு செல்லும்போது மப்பில் (போதையில்) செல்வார் அவர் கோபப்பட முடியாது கோபப்பட்டாலும் அது பயன் தராது. உங்கள் மகனுக்காக நீங்கள் விழுந்து விழுந்து சொத்து சேர்ப்பதற்கு முன்பே தொழுகையையும், தஃவா சிந்தனையையும் விதைத்திருந்தால் தந்தையின் கோபத்தில் இறைவனின் கோபம் இருக்கிறது என்பதை தஃவாவின் மூலம் அறிந்துகொண்டு எத்தனை நூராயிரம் கோடிகளுக்கு சொத்து சேர்த்திருந்தாலும் தந்தை எதிரே வரும்பொழுது அல்லது தந்தையை கடக்கும்பொழுது கண்ணியம் பேணத் தவற மாட்டார், உங்களுக்கு கோபத்தை மூட்டும் எந்த செயலிலும் ஈடுபட மாட்டார்,
எந்த சீரழிவு கலாச்சாரமும் அவரை தடம் புரளச் செய்யாத அளவுக்கு தஃவா முட்டுக் கொடுக்கும். வயதான காலத்தில் பணிவு என்னும் இறக்கையை உங்கள் மீது தாழ்த்துவதற்கும் தஃவாவுடனானத் தொடர்பே தூண்டுதலாக அமையும். இன்று முதியோர் இல்லங்கள் நிரம்பி வழிவதால் ஏராளமான தாய்-தந்தையர் தங்களுடைய வயதான காலத்தில் மகன்கள் கவனிப்பதில்லை வீடு வாசல், சொத்து சுகங்களைப் பிடுங்கிக்கொண்டு விரட்டி விட்டார்கள் என்று காவல்நிலையத்தின் கதவுகளைத் தட்டுவதை செய்தித் தாள்களில் படிக்கும்பொழுது கண்கள் கலங்குகிறது. நம்முடைய சமுதாயத்தில் வயதானவர்கள் கடந்த காலங்களில் முதியோர் இல்லம் சென்று அடைக்கலம் புகுவதற்கு மறுத்து மருமகன்களிடம் அடைக்கலம் பெற்று அவருடைய வீட்டு வேலைகளை செய்து கொடுத்து மருமகன் வீட்டில் மரணித்தவர்களே ஏராளமானோர்.
மாமியார், மாமனாரை வேலை வாங்க எல்லா மருமகன்களும் விரும்பாதக் காரணத்தால் பலர் அந்நியர்களிடம் வீட்டு வேலைக்காரர்களாக அடைக்கலம் புகுவர் அங்கு நோய் வாய்பட்டால் அவர்களும் வெளியேற்றி விடுவார்கள் அரசு மருத்துவமனைகளில் அதிகம் கட்டில்கள் இடாத காரணத்தால் அதன் வராண்டாவில் படுக்கும் முதிர்நோயாளிகள் கருணை கொலைக்கு உள்ளாக்கப்படும் அவலநிலை ஏற்படுகிறது. தமிழகத்தில் தவ்ஹீத் புரட்சி வெடித்து தஃவா சிந்தனை மக்களிடம் பரவிச் சென்றதால் மேற்காணும் தாய்-தந்தையரை விரட்டி அடிக்கும் அவலநிலை ஓரளவாகினும் குறைந்தது. தஃவா சிந்தனையை விதைக்கும் அரும்பணியில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தொழுகையும், தஃவா சிந்தனையும் இல்லாத பிள்ளைகளால் துறத்தப்பட்டு அல்லது முன்கூட்டியே பிள்ளைகளை இழந்த தாய்-தந்தையரை கருணை உள்ளத்துடன் பராமரித்து கடைசிகாலத்தில் ஏகத்துவ கலிமாவை மொழியச்செய்யும் அரும்பணிக்காக முதியோர்இல்லம் திறந்து செயல்படுகிறது.
http://www.tntj.net/charitable-service/old-age-hom
ஏற்க மறுத்தால் ? தாய்-தந்தையரும், மார்க்க அறிஞர்களும் படைத்தவனை தொழுவதற்கு ஏவியப் பின்னரும் படைத்தவனை தொழ மறுத்து பெயரளவில் முஸ்லீமாக இருந்துகொண்டு இதர தேவைகளுக்காக திருமனம் முதல் மரணம் வரை இஸ்லாமிய சட்டங்களை பயன்படுத்திக் கொண்டு வாழ்ந்து மரணித்தவனுக்கு மறுஉலகில் கடுமையான தண்டனையை அல்லாஹ் தீர்மாணித்து வைத்திருக்கின்றான்.
நரகில் பல்வேறு வகையான நெருப்பு மூட்டல்கள் மூட்டப்படும் அதில் தொழுகையை விட்டவர்கள் ''சக்கர்'' என்ற நெருப்பு மூட்டலில் புகுத்தி சித்ரவதை செய்யப்படுவார்கள். ஒவ்வொருவனும், தான் செய்ததற்குப் பிணையாக்கப்பட்டுள்ளான். வலதுபுறத்தில் இருப்போர் தவிர. அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் ''உங்களை நரகத்தில் சேர்த்தது எது?'' என்று விசாரிப்பார்கள். திருக்குர்ஆன் 74:38, 39, 40, 41, 42.
சுவனத்தின் வாழும் சொர்க்கவாசிகள் ''சக்கர்'' என்ற நெருப்பில் பொசுங்கும் நரகவாசிகளிடம் இந்நிலை உங்களுக்கு ஏற்பட எது காரணமாக இருந்தது என்று கேட்க ? அதற்கவர்கள் உலகில் வாழும் காலத்தில் உங்களைப் போன்று படைப்பாளனை தொழுபவர்களாகவும், வறியோருக்கு உதவுபவர்களாகவும் நாங்கள் இருக்கவில்லை, உலக சுகபோகங்களில் இடைவிடாது மூழ்கித் திளைத்ததால் மீண்டும் எழுப்பப்படுவோம் என்பதை எங்கள் உள்ளம் ஏற்க மறுத்தது இந்த அவநம்பிக்கை எங்கள் மரணம் வரை நீடித்தது என்று பதிலளிப்பதாக அல்லாஹ் கூறுகிறான் ''நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம் தீர்ப்பு நாளை பொய்யெனக் கருதி வந்தோம். (எனவும் கூறுவார்கள்). திருக்குர்ஆன் 74: 43, 44. 45. 46.
தர்ம சிந்தனை தொழுபவர்களின் மீது அல்லாஹ்வின் சாந்தி இறங்குவதால் அவர்களது உள்ளத்தில் கருணை குடிகொண்டிருக்கும் அதனால் அவர்களது உள்ளம் இரக்கத்தால் சூழப்பட்டிருக்கும் இரக்கசிந்தனை தர்மம் செய்யத் தூண்டும். தொழாதவர்கள் அல்லாஹ்வின் கருணையிலிருந்து தூரமாவதால் அவரது உள்ளம் இறுகுகிறது அவர் கடின சித்தமுடையவராக மாறுகிறார் அவரது கடினசித்தம் கஞ்சத்தனத்தின் பால் இழுத்துச் செல்லும் அதனால் பிறருக்கு கொடுத்துதவ மாட்டார்.
தொழுகையை விட்டவர்களிடம் அல்லது அறவே தொழாதவர்களிடமிருந்து ஷைத்தான் முதலில் அகற்றுவது தர்மசிந்தனையைத்தான் அதனால்தான் மேற்காணும் விதம் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' என்று தொழுகையை விட்டவர்கள் நரக நெருப்பில் பொசுங்கிக் கொண்டிருக்கும் பொழுதுக்கூறுவதாக அல்லாஹ் கூறுகிறான்.
என்டர்டெயின்மென்ட் தர்ம சிந்தனையை அகற்றியப் பின் தான் ஈட்டியப் பொருளாதாரத்தை தன்னுடைய உடல் சுகத்திற்கு செலவிடுவதற்காக என்னென்ன வழிகள் இருக்கிறது என்று ஷைத்தான் தேட விடுவான் தடுக்கப்பட்ட வழியில் சுகம் அனுபவிப்பதற்காக ஓடுபவருடன் இவரும் சேர்ந்து ஓடுவார். இன்று இஸ்லாம் தடைசெய்த அம்சங்கள் திறந்து விடப்பட்ட நாடுகளை நோக்கி முஸ்லீம்கள் ஓடுவதை நம் கண் முண்ணேப் பார்க்கின்றோம். அதனால் தான் மேற்காணும்விதம் ''நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம் 74: 43, 44. 45.
என்று தொழுகையை விட்டவர்கள் நரக நெருப்பில் பொசுங்கிக் கொண்டிருக்கும் பொழுதுக்கூறுவதாக அல்லாஹ் கூறுகிறான்.
மறுமையின் மீதான நம்பிக்கை தொழுகையை விட்டதும், தர்மசிந்தனையை அகற்றி, சுயநினைவை இழக்கச்செய்யும் மோசமானப் பொழுதுபோக்கு அம்சங்களில் ஷைத்தான் அவர்களை ஊறித்திளைக்கச் செய்ததும் மறுமை நம்பிக்கை அவர்களிடமிருந்து தாமாகவே மேலோங்கி விடும். அதனால் தான் மேற்காணும்விதம் ''நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம் தீர்ப்பு நாளை பொய்யெனக் கருதி வந்தோம். (எனவும் கூறுவார்கள்). என்று தொழுகையை விட்டவர்கள் நரக நெருப்பில் பொசுங்கிக் கொண்டிருக்கும் பொழுதுக் கூறுவதாக அல்லாஹ் கூறுகிறான். திருக்குர்ஆன் 74: 43, 44. 45. 46.
இஸ்லாம் கூறும் எந்த ஒரு அமலைச் செய்தாலும் மறுமை சிந்தனையுடன் செய்யவில்லை என்றால் அது அவர்களிடமிருந்து உலகிலேயே விலகி விடும். அதற்காகத் தான் அல்லாஹ் தன் திருமறையில் இறை நம்பிக்கையாளர்களைப் பார்த்து மறுமையின் மீது நம்பிக்கை வைத்து தொழுகையை நிலைநாட்டும் படியும், தர்மம் செய்யும் படியும் கூறினான்.
அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். திருக்குர்ஆன் 2.:3.
மறுமையின் மீது உறதியான நம்பிக்கையுடன் நம்முடையத் தொழுகையை அமைத்துக் கொண்டு மறுமையில் வெற்றி பெற்று சொர்க்கவாசிகளாக ஆக வேண்டுமென்றால் பிள்ளைகள் உணரும் பிஞ்சுப் பருவத்தில் தொழுகையை விதைத்து அது உள்ளத்தில் பதிவதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதுடன் தஃவாவுடனானத் தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எழுதியபடி என்னையம், வாசித்தப்படி உங்களையும் அமல் செய்யக்கூடிய நன்மக்களாக வல்ல அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக ! 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
No comments:
Post a Comment