புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அன்பும் அருளும் இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர், தோழர்கள் மற்றும் அவர்களின் நேரான வழியைப் பின்பற்றுவோர் அனைவரின் மீதும் என்றென்றும் பொழியட்டுமாக!
﴿ ذَلِكَ بِأَنَّ الَّذِينَ كَفَرُوا اتَّبَعُوا الْبَاطِلَ وَأَنَّ الَّذِينَ آمَنُوا اتَّبَعُوا الْحَقَّ مِنْ رَبِّهِمْ كَذَلِكَ يَضْرِبُ اللَّهُ لِلنَّاسِ أَمْثَالَهُمْ ﴾
ஈமான் கொண்டோரே! அல்லாஹ்வுக்கு வழிப்படுங்கள்! மேலும் (அவனுடைய) தூதருக்கு கீழ்படியுங்கள்! (மாறு செய்து) உங்கள் அமல்களை வீணாக்கிவிடாதீர்கள்! (அல்குர்ஆன் 47:33)
முஸ்லிம் சகோதரரே! அல்லாஹ் தனது அடியார்கள் அனைவரின் மீதும் இஸ்லாத்தை ஏற்பதையும் அதில் உறுதியாக இருப்பதையும் இஸ்லாத்திற்கு மாற்றமான அனைத்து விஷயங்களிலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதையும் கடமையாக்கியுள்ளான்.
மேலும் இஸ்லாத்தின்பால் மக்களை அழைப்பதற்காகத்தான் தனது தூதர் முஹம்மது(ஸல்) அவர்களை அனுப்பி வைத்தான். மேலும் அவர்களை பின்பற்றுபவர் நிச்சயமாக நேர்வழி பெற்றுவிட்டார். அவர்களை புறக்கணிப்பவர் நிச்சயமாக வழிகெட்டுவிட்டார் என்றும் அறிவித்துவிட்டான்.
மனிதன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறக் காரணமாக இருக்கும் அனைத்துச் செயல்களையும், இணைவைத்தல் மற்றும் இறை நிராகரிப்பின் அனைத்து வகைகளையும் அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் கூறி எச்சரிக்கின்றான்.
ஒரு முஸ்லிம் இஸ்லாத்தை முறிக்கும் பல காரியங்களால் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிடுகிறான். அதனால் அவனுடைய உயிரும் உடமையும் இஸ்லாத்தின் பாதுகாப்பிலிருந்து நீங்கிவிடுகிறது.
மேலும் அக்காரியத்தை செய்ததினால் இஸ்லாத்தை விட்டே அவன் வெளியேறியவனாகிறான் என்ற செய்திகளை மார்க்க அறிஞர்கள் மதம் மாறியவனைப் பற்றிய சட்டத்தின் கீழ் குறிப்பிடுகின்றார்கள்.
இஸ்லாத்தை முறிக்கும் செயல்களில் மிகவும் ஆபத்தான, மக்கள் மத்தியில் அதிகமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் பத்து விஷயங்களை அஷ்ஷைக் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப்(ரஹ்) மற்றும் அவர்களைப் போன்ற அறிஞர்கள் தொகுத்தளித்துள்ளார்கள்.
அவைகளை விட்டும் தாங்களும் விலகி, பிறரையும் எச்சரிக்க வேண்டும் என்பதற்காகவும் அவைகளை விட்டும் முற்றிலும் பாதுகாப்பு பெறவேண்டும் என்பதற்காகவும் சிறிய விளக்கங்களுடன், சுருக்கமாக தங்களுக்கு முன்வைக்கிறேன். அவை:
(1) அல்லாஹ்வுக்காக மட்டுமே நிறைவேற்ற வேண்டிய வணக்க, வழிபாடுகளில் பிறரை இணையாக்குதல், உதாரணமாக, இறந்தவர்களிடம் பிரார்த்திப்பது, அவர்களிடம் பாதுகாவல் தேடுவது, அவர்களுக்காக நேர்ச்சை செய்வது, அவர்களுக்காக பிராணிகளை அறுத்துப்பலியிடுவது. அல்லாஹ் கூறுகிறான்:
﴿ إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ افْتَرَى إِثْمًا عَظِيمًا﴾
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான் இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்.(அல்குர்ஆன் 4 :48)
﴿ إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ ﴾
எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவுபவர் எவருமில்லை. (அல்குர்ஆன் 5:72)
(2) அல்லாஹ்வுக்கும் தமக்கும் மத்தியில் இடைத்தரகை ஏற்படுத்தி, அவர்களிடம் பிரார்த்திப்பவன், இறந்தவர்களிடம் பரிந்துரைக்க வேண்டுபவன், அவர்கள் மீது தவக்குல் நம்பிக்கைவைப்பவன் எவ்வித கருத்து வேறுபாடின்றி நிச்சயமாக அவன் நிராகரித்து விட்டான்.
(3) இணைவைப்பாளர்களை இறைநிராகரிப்பாளர்கள் என கருதாவிட்டாலோ, அல்லது அவர்களின் நிராகரிப்பை சந்தேகித்தாலோ, அல்லது அவர்களின் மதங்களை சரிகண்டாலோ அவனும் நிராகரித்தவன் ஆகிவிட்டான்.
(4) நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை விட பிறரின் வழிகாட்டுதல் பரிபூரணமானது என்றோ, நபி(ஸல்) அவர்கள் வகுத்தளித்த சட்டங்களை விட பிறருடைய சட்டங்கள் சிறந்தது என்றோ கருதினால் அவனும் நிராகரித்தவனாகி விட்டான். நபி(ஸல்) அவர்களின் சட்டங்களை விட ஷைத்தான் - தாகூத் - களின் சட்டங்களை சிலர் மேன்மைப்படுத்துவதும் இதில் அடங்கும்.
(5) எவரேனும் நபி(ஸல்) அவர்கள் கொண்டுவந்தவற்றில் எதையேனும் ஒன்றை வெறுத்தால் நிச்சயமாக அவனும் நிராகரித்தவனாகி விட்டான். அவ்வெறுப்புடன் அவன் அதனை செய்து கொண்டிருந்தாலும் சரியே! அல்லாஹ் கூறுகிறான்:
﴿ ذَلِكَ بِأَنَّهُمْ اتَّبَعُوا مَا أَسْخَطَ اللَّهَ وَكَرِهُوا رِضْوَانَهُ فَأَحْبَطَ أَعْمَالَهُمْ ﴾
ஏனெனில் நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்குக் கோபமூட்டுவதையே பின்பற்றி, அவனுடைய திருப்தியை வெறுத்தமையால் அவர்களுடைய செய்கைகளை அவன் பயனில்லாதவையாக ஆக்கிவிட்டான். (அல்குர்ஆன் 47:28)
(6) நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் ஏதேனும் ஒன்றையோ, அல்லது - மார்க்கத்தின் - தண்டனையையோ, கூலியையோ கேளிசெய்பவனும் நிராகரித்தவனாகி விட்டான். அல்லாஹ் கூறுகிறான்:
﴿ وَلَئِنْ سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ لَا تَعْتَذِرُوا قَدْ كَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ إِنْ نَعْفُ عَنْ طَائِفَةٍ مِنْكُمْ نُعَذِّبْ طَائِفَةً بِأَنَّهُمْ كَانُوا مُجْرِمِينَ ﴾
"அல்லாஹ்வையும், அவன் வசனங்களையும், அவன் தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டு இருந்தீர்கள்?" என்று (நபியே!) நீர் கேட்பீராக. காரணம் கூற வேண்டாம், நீங்கள் ஈமான் கொண்டபின் நிச்சயமாக நிராகரிப்போராய் விட்டீர்கள். (அல்குர்ஆன் 9:65-66)
(7) சூனியம்: நல்ல தொடர்புகளை பிரிப்பதற்காகவோ, தீயவற்றை ஆசையூட்டவோ சூனியம் செய்வது.
உதாரணமாக, ஒருவன் தன் மனைவி மீது கொண்டுள்ள அன்பை கோபமாக மாற்றுவது, அல்லது அவன் விரும்பாதவற்றை ஆசையூட்டுவது.
இவை அனைத்தும் ஷைத்தானுடைய வழிமுறைகளிலேயே செய்யப்படுகின்றன. எனவே யாரேனும் இதனைச் செய்தாலோ, அல்லது அதனை பொருந்திக் கொண்டாலோ அவனும் நிராகரித்தவனாகி விட்டான்.
அல்லாஹ் கூறுகிறான்:
﴿ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّى يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ ﴾
அவர்கள் இருவரும் "நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்" என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை. (அல்குர்ஆன் 2:102)
(8) இணைவைப்பாளர்களை ஆதரிப்பதும் முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களுக்கு உதவுவதும் இஸ்லாத்தை முறித்துவிடும். அல்லாஹ் கூறுகிறான்:
﴿ يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا الْيَهُودَ وَالنَّصَارَى أَوْلِيَاءَ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ فَإِنَّهُ مِنْهُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ ﴾
முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர் உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர்தான் நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.(அல்குர்ஆன் 5:51)
(9) கிழ்ர் அவர்களுக்கு மூஸா(அலை) அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றாமல் இருப்பதற்கு அனுமதியிருந்தது போன்று இச்சமுதாயத்தில் (குறிப்பிட்ட) சிலர் நபி(ஸல்) அவர்களின் மார்க்கத்திலிருந்து வெளியேற அனுமதியுள்ளது என்று நம்புபவன் நிராகரிப்பாளனாகி விட்டான். அல்லாஹ் கூறுகிறான்:
﴿ وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنْ الْخَاسِرِينَ ﴾
இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில்தான் இருப்பார்.(அல்குர்ஆன் 3:85)
(10) அல்லாஹ்வின் மார்க்கத்தை முற்றிலும் புறக்கணித்து, அதனைக் கற்றுக் கொள்ளாமலோ, அதன்படி செயல்படாமலோ இருப்பதும் இஸ்லாத்தை முறித்துவிடும். அல்லாஹ் கூறுகிறான்:
﴿ وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِآيَاتِ رَبِّهِ ثُمَّ أَعْرَضَ عَنْهَا إِنَّا مِنْ الْمُجْرِمِينَ مُنتَقِمُونَ﴾
எவர் தன்னுடைய இறைவனின் வசனங்களைக் கொண்டு நினைவு படுத்தப்பட்ட பின்னரும் அவற்றைப் புறக்கணித்து விடுகிறானோ, அவனைவிட அநியாயக்காரன் எவன் (இருக்கிறான்)? நிச்சயமாக நாம் (இத்தகைய) குற்றவாளிகளை தண்டிப்போம்.(அல்குர்ஆன் 32:22)
இஸ்லாத்தை முறிக்கும் மேற்கூறிய செயல்களை வேண்டுமென்றே செய்வதற்கும் விளையாட்டாகவோ, பயந்தோ செய்வதற்கும் மத்தியில் எந்த வித்தியாசமும் கிடையாது. நிர்ப்பந்திக்கப்பட்டவரை தவிர. இவை அனைத்தும் மிகக் கொடிய விளைவை ஏற்படுத்தக் கூடிய, நம் சமுதாயத்தில் அதிகமாக மலிந்து கிடக்கும் செயல்களாகும்.
எனவே ஒவ்வொரு முஸ்லிம் இவ்விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். இவை தம் வாழ்வில் நிகழ்ந்து விடக்கூடாது என மிகவும் பயப்பட வேண்டும்.
அல்லாஹ்வுடைய கோபத்தையும் அவனுடைய கடும் தண்டனையை பெற்றுத் தறும் விஷயங்களையும் விட்டு அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக!
படைப்பினங்களில் சிறந்தவர்களான முஹம்மது(ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் தோழர்கள் அனைவரின் மீதும் அல்லாஹ் அருட்செய்வானாக!
இஸ்லாத்தை முறிக்கும் காரியங்களில் நாம் மேற்கூறிய நான்காவது வகையில் கீழ் காண்பவைகளும் இடம்பெறும்:
1) மனிதன் தொகுத்த சட்டங்களையும் நெறிமுறைகளையும் இஸ்லாமிய ஷரீஅத்தை விட சிறந்தது என்றோ, அது இஸ்லாத்தின் சட்டத்திற்கு சமமானது என்றோ, இஸ்லாத்தின் சட்டங்களே சிறந்தது எனினும் மனிதன் தொகுத்த சட்டங்களின் அடிப்படையில் தீர்ப்புக் கூறுவது கூடும் என்றோ கருதுவது.
2) இஸ்லாமிய சட்டதிட்டங்கள் இருபதாம் நூற்றாண்டிற்கு பொருந்தாது என்றோ, முஸ்லிம்கள் பின்தங்குவதற்கு இஸ்லாமே காரணம் என்றோ, இஸ்லாத்திற்கும் உலக வாழ்விற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.அது மனிதன் இறைவனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு மட்டும் தான் என்றோ கருதுவது.
3) இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை அமுல்படுத்துவது இக்காலத்திற்கு பொருந்தாது என்று கூறுவது.
4) மார்க்க செயல்பாடுகள், குற்றவியல் சட்டங்கள் மற்றும் இவை போன்றவற்றில் அல்லாஹ் இறக்கியருளாத சட்டங்களைக் கொண்டு தீர்ப்பு வழங்குவது கூடும் என்று கருதுவது.
இவ்வாறு கருதுபவன் மார்க்கச் சட்டங்களை விட அவை சிறந்தது என கொள்கையாக நம்பாவிட்டாலும் சரியே! ஏனெனில் அல்லாஹ் இறக்கியருளாத சட்டங்களைக் கொண்டு தீர்ப்பு வழங்குவது கூடும் எனக் கருதுவது - எந்த கருத்து வேறுபாடுமின்றி - நிச்சயமாக அல்லாஹ் தடுத்துள்ளதை ஆகுமாக்குவதாகும், மார்க்கம் கண்டிப்பாக தடுத்துள்ளவைகளை - விபச்சாரம், மது, வட்டி, அல்லாஹ்வுடைய மார்க்கம் அல்லாததைக் கொண்டு தீர்ப்புக் கூறல் - போன்றவைகளை ஆகுமாக்கியவன் நிச்சயமாக - அறிஞர்களின் ஏகோபித்த முடிவின்படி - காஃபிர் ஆகிவிட்டான்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக! அவனுடைய திருப்பொருத்தத்தை பெற்றுத் தரும் காரியங்களை செய்ய அருள்புரிவானாக! நிச்சயமாக அவன் மிக அருகில் இருப்பவன், பிரார்த்தனைக்குப் பதிலளிப்பவன்.
No comments:
Post a Comment