பூமியில் மனிதன் தோற்றம் எப்போது? சுமார் 6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இத்தனை உறுப்பினர்கள் இல்லை. எல்லாம் சேர்ந்து ஒரே இனமாகத்தான் இருந்தது. பின்னர் ஒவ்வொன்றும் தனித்தனியாக ஒவ்வொரு வகை மிருக இனமாக பிரிந்துவிட்டன. அதில் ஒரு பிரிவுதான் மனித இனம்.கொரில்லா, சிம்பன்ஸி, போனோபோ, உராங் உடான் மனிதன் எல்லாம் சேர்ந்து ஒரே குடும்பம்தான். இந்தக் குடும்பத்தில் இருந்த ஒரு சில உறுப்பினர்கள் இன்று இல்லை. அவை எலும்பு பாஸில்களாக உலகமெல்லாம் புதைந்து கிடக்கின்றன”மனிதனுக்கு மிக நெருங்கிய மிருகம் சிம்பன்ஸிதான். இரண்டுக்கும் இடையே 99 விழுக்காடு DNA ஒற்றுமை காணப்படுகிறது.“நியான்டர்தால் மனிதன், ஆஸ்ட்ராஸோ பித்தேகஸ் போன்றவைகளும் இந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள் தானே”மனித ஜினோமில் மொத்தமாக 3 பில்லியன் எழுத்துக்கள் உள்ளன. கிட்டத்தட்ட அத்தனை எழுத்துக்கள் சிம்பன்ஸி ஜினோமிலும் உள்ளன. இரண்டுக்கும் இடையே 15 மில்லியன் எழுத்துகள் மாறியிருக்கின்றன. அதாவது 1 விழுக்காட்டிற்கும் குறைவாகவே எழுத்து பேதங்கள் உள்ளன. மனித ஜினோமை ஈயின் ஜினோமுடன் ஒப்பிட்டால், அளவிலும் எழுத்து பேதங்களிலும் 40 சத வேற்றுமை இருக்கிறது. கடந்த 40,000 ஆண்டுகளில் மனித இனம் சக குரங்கு இனத்தலிருந்து தன்னை மாற்றிக் கொண்டது. ஆயுதம், சடங்குகள், கலை, இலக்கியம், கட்டடம், தொழில்நுட்பம், ஆன்மிகம், கோயில்கள்.... இப்படி எத்தனை எத்தனை விதத்தில் மனிதன் வேறுபட்டிருக்கிறான்.
1. நிமிர்ந்த உடல், இரண்டு கால்களில் நடப்பது, கண்ணிமைக்கும் நேரத்தில் 360 டிகிரி சுற்றிப் பார்ப்பதற்கு வசதியாக நெட்டுக்குத்தான நிமிர்ந்த உடல். இரண்டே கால்களால் நாலுகால் பாய்ச்சலுக்குச் சமமாக ஓடும் சாமர்த்தியம். நான்கில் இரண்டு விடுதலை பெற்று கைகளாக மாறியதுகூட உடல் நிமிர்ந்ததால்தான்.
2. தட்டையான முகத்தில் கண்களிரண்டும் சமதளத்தில் அமைந்துவிட்டதால் பைனாக்குலர் பார்வை கிடைத்தது. இதனால் நேராக வரும் ஆயுதங்களின் வேகத்தை அறிந்து அதிலிருந்து தப்பமுடிகிறது (இன்று கிரிக்கெட் பந்தை சமாளிப்பதும் இதனால்தான்).
3. கைகளில் கட்டை விரல் மற்ற விரல்களிலிருந்து பிரிந்து நிற்பதால், எல்லா விரல்களின் நுனியையும் தொடு முடிகிறது. இதுவும் ஒரு முக்கியமான மாற்றம். ஊசியைக்கூட சுலபமாக தரையிலிருந்து பொறுக்கி எடுக்க மனிதனைத்தவிர வேறெந்த விலங்காலும் முடியாது. இசைக்கருவி வாசிப்பது முதல், கத்தரிக் கோல் வெட்டுவதுவரை அனைத்துக்கும் பேருதவியாக இருப்பது கட்டைவிரல்தான். ஏகலைவனின் கட்டைவிரலை துரோணர் குருதட்சினையாகக் கேட்டு வாங்கியதன் இரகசியம் இதுதானே.
4. பேச்சு... ஒரு சந்ததியில் பெற்ற வெற்றிக் கனிகளை சந்தததிதோறும் கொண்டு செல்ல உதவியாக இருந்தது பேச்சுத்திறன்தானே. பேச்சினால் மொழியும் இலக்கியமும் அறிவியலும் வளர்ந்தது, பரவியது. மனித உடலிலும், நடத்தையிலும் ஏற்பட்ட மாற்றங்களுக்குப் பின்னணியாக, வெளிப்படையாகத் தெரியாமல், சூட்சுமமாக இருப்பவை ஜீன் மாற்றங்களே. ஜீன்களில் மாற்றம் நிகழாமல் உடல் மாற்றங்கள் நிகழ வாய்ப்பே இல்லை. தற்போது இந்த பூவுல கில் மனிதர்கள் எண்ணற்ற அதிசயங்களையும், வெற்றிகளையும் கண்டு வருகின் றனர். முன்பிருந்த காலத்தோடு ஒப்பி டுகையில் தற்போது மனிதர்கள் பல்வித மான முன்னேற்றங்களைக் கண்டு விட்டனர், கண்டும் கொண்டிருக்கின்றனர். இந்த மனிதன் எங்கிருந்து தோன்றினான்? இந்த பூமி எப்போது தோன்றி யது? எங்கிருந்து மனிதனுக்கு இவ்வளவு ஆற்றல் கிடைத்தது என்பது இன்றும், இவையெல்லாம் நம் சிந்தனைக்கு எட்டாத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. இதற்கான தேடல்களும், ஆராய்ச்சிக ளும் பல மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இவை எப்போது தோன்றின என்பதற் கான விடைகள் இன்னும் சரியாக கணக் கிடப்படவில்லை. இருப்பினும் அறிவியல் ஆய்வாளர்கள் பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டிருந்த பல ஆய்வுகளின் முடிவின்படி இந்தப் பூவுலகம் எப்போது தோன்றியது என்பது ஓரளவு கணிக்கப்பட்டிருக்கிறது.
பூமியில் மனிதனின் தோற்றம், அவன் மொழி யைக் கற்றுக் கொண்ட விதம் பற்றிய தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருக்கின்றனர். வற்றாத நீரும், வளமான நிலமும், வாயு மண்டலமும் சூழ்ந்த உயிரினமும், பயிரினமும் கொண்ட அண்டகோளமானது நாம் வசிக்கும் இந்த பூகோளம். இந்த கோளம் சுற்றிவரும் சூரியன் ஒரு சுய ஒளி விண்மீன். அவ்வாறாக கோடான கோடி விண்மீன்களைக் கொண்டது ஒளிமய மந்தை எனப்படும் "கேலக்ஸி" (Galaxy). இந்த "கேலக்ஸியில் மூன்றாவது இடத்தில் இருக்கும் கிரகமானது நம் பூமி. அறிவியலாளர்கள் பல மூலங்களைப் பயன்படுத்தி பூமி தோன்றிய காலத்தை பல வகையாக கணித்திருக்கின்றனர். பெரிய பாறைகள், பூமியில் விழுந்த விண்கற்கள் ஆகியவற்றைக் கொண்டு பல ஆய்வுகளை நடத்தி, பூமி இப்பொழுதுதான் தோன்றிய காலைத்தைப் பற்றிய சில முடிவுகளை நமக்குக் கொடுத் திருக்கின்றனர். பூமி சுமார் 4.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியது என்பது விஞ்ஞானி களின் ஒருமித்த கருத்து. பூமி தோன்றிய நாள் முதலாக, பூமியின் தளவடிவம் தொடர்ந்து மாறுபட்டு வந்திருக்கிறது என்று வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும் பூமியிலிருக்கும் மிக்க முதுமை யான பாறையைக் கொண்டு அறிவியலாளர் கள் ஓர் ஆய்வினை மேற்கொண்டிருந்தனர். அந்த ஆய்வின்போது அப்பாறையின் மூலத்தின் கதிரியக்கத் தேய்வை (Radioactive Decay of Elemets) ஆராய்ந்து, பூமியின் வயது 3.8 மில்லியன் என்று கணிக்கிட்டிருக்கிறார்கள். ஆனால், பூமியில் விழுந்த மிகப் புராதன விண்கற்களின் (Meteorites) மூலக் கதிரியக்கத் தேய்வை ஆராய்ந்த போது, மீண்டும் சூரியக் குடும் பத்தில் பூமியின் வயது 4.6 மில்லியன் என்று கணித் திருக்கின்றனர். விண்வெளி விஞ்ஞானம் பேரளவில் விருத்தி அடைந்து கொண்டிருக்கும் இந்த மகத்தான யுகத்திலே, வானியல் நிபுணர்கள் பிரபஞ்சத்தின் வயதைக்கூட கணக்கிட பல்வேறு முறைகளையும் ஆய்வுகளையும் கடைப்பிடித்து வந்துள்ளார்கள். இருப்பினும் பிரபஞ்சத்தின் உண்மையான வயதை தெரிந்து கொள்ள இன்றும் முடியவில்லை. பூமிக்கடியில் புதைந்திருக்கும் புராதனப் பாறைகளில் உள்ள மூலங்களின் கதிரியக்கத் தேய்வை கணக்கிட்டு பூமியின் வயது 4.6 பில்லியன் ஆண்டுகள் இருக்கலாம் என்று அறியப்பட்டது. வான்மண்டலத்தில் ஒளிமிக்க விண்மீன்களின் ஒளித்திரட்சியையும் அதன் உஷ்ணத்தையும் பல மாதங்களுக்குப் பதிவு செய்து விண்மீனின் தூரத்தோடு ஒப்பிட்டு பிரபஞ்சத்தின் வயதை 12 பில்லியன் ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டது. இதைத் தவிர, சூரியன் தோற்றுவித்த காலத்தையும் சில ஆய்வுகளின் மூலம் தெளிவு செய்துள்ளனர். சூரிய பரிதியின் பிளாஸ்மா (Plasma) எனப்படும் ஒளிப்பிழம்பின் வெப்பத்தையும், அதன் வாயுக்களையும் கொண்டு செய்த ஓர் ஆய்வில் சூரியன் 10 பில்லியன் வயது கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது.
பூமி தோன்றிய காலத்தைப் பற்றிய ஆய்வுகளின் முடிவுகள், குத்துமதிப்பாக பூமி மேற்குறிப்பிட்ட காலத்தில் தோன்றியிருக்கும் என்றுதான் கூறுகின்றன. ஆனால் மனிதன் எப்போது தோன்றினான், அவனின் மொழி எப்படி தோன்றியது என்பதனைப் பற்றிய ஆய்வுகளையும் அவர்கள் மேற்கொள்வதை விடவில்லை. இதற்கும் பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு இறுதியில் இதற்கான பதிலையும் அறிவியலாளர்கள் கணித்தனர். மனிதன் தோன்றிய காலத்தில் அவன் தனது இனத்தோடு தொடர்பு கொள்ள தற்போது இருக்கும் தமிழ், மலாய், ஆங்கிலம், சீனம், கிரேக்கம், அரபு மொழிகள் அல்லது இதர மொழிகளைப் பயன்படுத்தவில்லை. இவைகளெல்லாம் மனிதன் தோற்றுவித்து பல நூற்றுக்கணக்கான வருடங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டவை என்று அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி மனிதர்கள், விலங்கினக் கூட்டத்தில் சேர்ந்த ஒரு இனமே. ஆறாவது அறிவு எனக்கூறப்படும் பகுத்தறிவு கொண் டவன் என்பதே அவனை மற்ற விலங்குகளிடமிருந்து வேறுபட்டு காட்டுகிறது. விலங்குகள் மனிதர்களோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டவை. ஏறக்குறைய மனிதனை ஒட்டிய குணாம்சங்கள் அவைகளுக்கு உண்டு. பரிணாம வளர்ச்சியின் போக்கில் குரங்கினத்திற்கு அடுத்ததாக மனிதன் என்று சொல்கிறது அறிவியல். மனிதர்களின் ஒத்த குணாம்சங்களைக் கொண்ட இந்த குரங்குகளைக் கொண்டு நடத்திய ஒரு ஆய்வின் மூலம் மனிதர்களின் மொழி எப்படி தோன்றியிருக்கும் என்பது பற்றிய சில தெளிவுகளை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். வாய் வழி ஒலி எழுப்பி மற்றவர்களோடு தொடர்பு கொண்ட மனிதன், காலப்போக்கில் பேச்சை, பேச்சு மொழியை உருவாக்கியிருக்கலாம் என்பது தெளிவு. ஆனால் மனிதன் முதலில் சைகைகளையும், உடல் அசைவுகளையும் மூலமாகக் கொண்டு செய்திகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டிருப்பார்கள் என்பதனை ஆதாரப்பூர்வமாகக் கூறுகின்றனர் நம் அறிவியலாளர்கள். மனிதர்கள் இயல்பாகவே அதிகமாக அங்க அசைவுகள் சைகைகள் மூலம் தொடர்பு கொள்ளக் கூடியவர்கள். மனித மொழி இத்தகைய அங்க அசைவுகளை முக்கியமாகக் கொண்ட சைகை மொழியாகவே முதலில் தோன்றியது. பிறகு பரிணாம வளர்ச்சிக்கிணங்க மனித மூளையின் மொழியைச் சார்ந்த பகுதிகள் நன்றாக வளர்ச்சியடைந்த பின், பேச்சு மொழியானது உருவாகியிருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். மேலும் மனிதன் சைகைகளுக்கு வலது கைகளையே அதிகம் பயன்படுத்துகிறான். வலது கையைக் கட்டுப்படுத்துவது இடது பக்க மூளையாகும். மனித மொழிக் கட்டுப்பாட்டு மையம் அமைந்திருப்பதும் இடது பக்க மூளையில்தான் என்பதன் மூலம் மனித இனத்தின் மொழி சைகைகளில் உருவாகியது என்பதில் சந்தேகமில்லை.
டெதிசு கடல்“கோண்ட்வானாக் கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்தியத் துணைக்கண்டம் வடக்கு நோக்கி நகர்ந்து வடக்கிலிருந்த லாரோசியா என்ற பெருங்கண்டத்தை நெருங்க, அப்பகுதியில் இருந்த டெதிசு எனும் ஆதிக்கடல் பரப்பு சிறுத்து, இடைப்பட்ட படிவங்கள் இமயமலை எனும் மடிப்பு மலையாக உயர்ந்தன. இதில் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய விவரம். இது நடந்தது சுமார் 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன். அதற்கும் 130 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னரே மனித இனம் தோன்றியது”. இந்தக் கூற்றிலிருந்து பல உண்மைகளைப் பெற முடியும்:
(1) மனிதர்கள் தோன்றி (135-130) = 5 மில்லியன், அதாவது ஐம்பது இலக்கம் ஆண்டுகள் ஆயின என்பது. ஆனால் சிக்கல் என்னவென்றால் இந்த ஆசிரியர் இதே நூலில் மனிதன் தோன்றிய காலமாக ஐந்து இடங்களில் 5 வெவ்வேறு காலங்களைக் கூறுகிறார். அவற்றுள் 17-ஆம் பக்கத்தில் “ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன், ஆதிமனிதர் தோன்றிய பின்னர் கண்டங்கள் சில மீற்றர்கள் மட்டுமே நகர்ந்துள்ளன”. (தன்னினைவில்லாதவர் போன்று எழுதும் இவர் போன்றோரது படைப்புகளை ஆகா ஓகோவென்று புகழும் தமிழகத்து மதிப்புரையாளர்களை நினைக்கும்போது இன்றைய கல்வி முறை சிந்தனை என்ற புலனை எவ்வளவு அழிந்து விட்டது என்னும் திடுக்கிட வைக்கும் உண்மை புரிகிறது.)
(2) டெதிசு கடல் மறைந்து 135 மில்லியன் ஆண்டுகள் ஆயிற்று என்றால் அதற்கும் முன்பு டெதிசு கடலைக் காட்டும் வரைபடத்தை மனிதர்கள் வரைந்துள்ளனர் என்றால் மனிதன் புவிமேல் அதற்கும் பல மில்லியன் ஆண்டுகளுக்கும் அதாவது 14 அல்லது 15 கோடி ஆண்டுகளுக்கும் முன்பே தோன்றிவிட்டான் என்பது புலனாகிறது.
(3) காட் எலியட் என்பவர் லெமூரிய மனித இனம் 13.5 முதல் 22.5 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் என்றும் அவர்களிலிருந்து இருபடிகள் முன்னேறிய இனமே ஆரிய இனம் என்று கூறுவதாகவும் திரு.சு.கி. செயகரன் கூறுகிறார். அப்போது டினோசர்கள் லெமூரியாவில் வாழ்ந்தன என்று காட் எலியட் கூறுவதாகக் கூறுகிறார். ஆரிய இனத்தை உயர்த்துவதற்காக உருவானதே லெமூரியாக் கோட்பாடு என்று இதை வைத்து சு.கி.செயகரன் கூறுகிறார். ஆனால் உண்மை அதுவல்ல. எர்ணசுட்டு எக்கல் என்பார் உருவாக்கியது லெமூரியக் கோட்பாடு. மனிதன் தோன்றி வளர்ந்த நிலம் லெமூரியா என்பதோடு அவரது வேலை முடிந்தது. இதன் மூலம் ஐரோப்பா அல்லாத ஒரு மண்ணில் மனிதன் தோன்றி வளர்ந்ததாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்காக அதில் “உள்ளுணர்வால் உணர்ந்த செய்திகளை”ப் புகுத்தியவர் இறைநெறி (பிரம்மஞான)க் கழகத்தினர். இந்தியாவினுள் “ஆரிய” வேதங்களின் ஆட்சியை அழிக்கிறார்கள் ஆங்கிலேயர்கள் என்று பரப்பி இந்திய விடுதலைப் போராட்டத்தில் பார்ப்பனர்களிடையில் ஊடுருவத் திட்டமிட்ட அமெரிக்க முயற்சி தான் இறைநெறிக் கழகம். அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு மும்பையில் காலூன்ற முயன்ற அதனை அங்கு எவரும் ஏறெடுத்தும் பார்க்காததால் சென்னையில் காலூன்றிய அதனுள் உலகிலுள்ள “ஆரிய இன” வெறியர்களும் சாதி வெறியர்களும் புகுந்து கொண்டனர். இந்தியாவில் இறைநெறிக் கழகத்திலிருந்து அமெரிக்கப் பிடியை விலக்க அன்னிபெசன்றைக் கருவாக்கிய பிரிட்டனின் தந்திரம் குறிப்பிடத்தக்கது. நமக்கு வேண்டியது டெத்திசுக் கடல் மறைந்த 13.5 கோடி ஆண்டுக்கும் லெமூரியாவில் மனிதர்கள் தோன்றியதாக காட் எலியட் கூறிய 13.5 - 22.5 கோடி ஆண்டுக்கும் தற்செயலாகவோ, ஏதோ ஏற்பட்ட இணைவை எண்ணிப் பார்க்கத் தோன்றுவது தான். இடைப்பிறவரலாக ஒன்றைக் கேட்கிறேன். கடாரம் (சுமத்திரா) மீது படையெடுத்த இராசேந்திரன் பிடித்த நாடுகளில் “இலாமுரிதேசம்” என்ற ஒன்று இருந்ததாக அவனது மெய்கீர்த்தி கூறுகிறது. அந்த வட்டாரத்தில் அத்தகைய பெயருள்ள பகுதி எது என்று அப்பகுதிவாழ் தமிழர்கள் கூற முடியுமா? லெமூரியா என்ற பெயர் நாம் பொதுவாகக் கருதுவது போல் லெமூர் எனும் குரங்குகளிலிருந்து வந்ததா அல்லது வேறு காரணங்கள் உண்டா என்பது இதிலிருந்து ஒரு வேளை புலப்படலாம்.
இந்தோனேசியத் தீவுக் கூட்டங்களில் சுமத்ரா (சு+மதுரா) = நன்மதுரை அல்லது மூலமதுரை, போர்னியோ, புரூனெய் (பொருனை) போன்ற பகுதிகள் உள்ளன. இனி தமிழர்கள் மட்டுமல்ல, இந்தியர்கள், உலக மக்களின் வரலாற்றையும் குழப்புவது மாக்சுமுல்லர் வகுத்துத் தந்த “ஆரிய இன”க் கோட்பாடு. அறிவொளிக் காலம் எனப்படும் 16 ஆம் நூற்றாண்டு தொடங்கிய ஐரோப்பியரின் உலக வலம் அவர்களுக்குப் பல்வேறு மொழிகளை அறிய வைத்தது. அவற்றுள் முதலில் அவர்கள் அறிந்த சமற்கிருத்ததுக்கும் கிரேக்க, இலத்தீன் மொழிகளுக்கும் இருந்த சில தொடர்புகளை வைத்து “ஆரியர்” என்ற இனத்தை செருமானியரான மாக்சுமுல்லர் உருவாக்கி அவர்களுக்கு செருமானியரின் உடல் தோற்றத்தையே சொந்தமாகக் காட்டினார். ஏறக்குறைய அதே காலகட்டத்தில் வாழ்ந்த கால்டுவெல் ஐயரும் நண்ணில (மத்திய தரை)க் கடல் பகுதி உட்படட 6 பகுதிகளிலிருந்து “திராவிட இனத்தவர்” இந்தியாவில் குடியேறியதாக தன் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலில் எழுதினார். இருவருக்கும் அறிஞர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. மாக்சுமுல்லர் தான் எழுதிய Biography of words என்ற நூலில் தான் ஒன்றோடொன்று உறவுடைய மொழிகளைப் பேசும் மக்கள் இருந்ததாகத் தான் சொன்னதாகவும் அதனடிப்படையில் மனித இனங்களைக் கற்பிப்பது “பாவம்” என்றும் கூறி அதை மறுத்தார். அதே போல் 1875 இல் கால்டுவெல் வெளியிட்ட இரண்டாம் பதிப்பில் பிற்சேர்க்கையாக மனித இனங்களைப் பற்றிய விரிவான விளக்கங்களுடன் உடலின் நிறம், முகத்தோற்றம், மயிரமைப்பு முதலியவை வாழும் சூழல், உணவு ஆகியவற்றால் எளிதில் மாற்றமடைந்து விடுவதாகவும் மண்டையோட்டு நீள அகல விகிதம் தான் இன அடையாளமென்றும் அந்த வகையில் திராவிட ஆரிய மக்கள் எனப்படுவோரிடையில் வேறுபாடு இல்லையென்றும் எழுதினார். மாக்சுமுல்லர் கூறியதை எவரும் கண்டுகொள்ளவில்லை. ஐரோப்பாவில் செருமனி-பிரிட்டன் ஆதிக்க அரசியலுக்கும் இந்தியாவில் பார்ப்பன-வெள்ளாள ஆதிக்க அரசியலுக்கும் இவை தேவைப்பட்டன. கால்டுவெலாரின் நூலை மொழிபெயர்த்தவர்கள் அவரது பிற்சேர்க்கையைத் திட்டமிட்டு மறைந்துள்ளனர்.
முதலில் மனிதன் தோன்றிய நிலம் குமரிக் கண்டமே. அங்கிருந்து வெவ்வேறு காலகட்டங்களிலிருந்த மொழி, நாகரிக வளர்ச்சிகளுடன் உலகின் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்றவர்கள் ஆங்காங்கு தமக்குரிய வளர்ச்சியை அடைந்தோ அல்லது தேங்கியோ நிற்கின்றனர். அதுபோன்றே குமரிக் கண்டத்தில் தோன்றிய மொழியே மேலே கூறிய மாற்றங்களை ஆங்காங்குள்ள மக்களுடன் எய்தி நிற்கிறது. குமரிக் கண்டத்தில் தொழில்நுட்பம், ஆட்சி போன்றவை வளர்ச்சியடைந்த போது உருவான குழுஉக் குறி மொழி பூசகர்கள்-அரசர்கள் கூட்டணியால் திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்பட்டு படிப்படியாக வேதமொழியாகவும் சமற்கிருதமாகவும் உருவாகி நிற்கின்றன. உலகில் நாகரிக வளர்ச்சிடைந்த மக்களின் மொழிகளில் அடித்தளத்தில் தமிழின் சாயலையும் மேல் மட்டத்தில் சமற்கிருதத்தின் சாயலையும் காணலாம். ஆங்கிலச் செய்யுளும் தமிழின் உரைநடையும். எழுவாய்-பயனிலை-செயப்படுபொருள் வைப்பில் இணையானவை. அதுபோலவே தமிழின் செய்யுளும் ஆங்கிலத்தின் உரைநடையும். சொற்களைப் பொறுத்தவரை ஐரோப்பிய மொழிகளைப் பொறுத்தவரை அவை சமற்கிருதத்தை விடத் தமிழுக்கு மிக மிக நெருக்கமானவை. உலகமெலாம் எழுத்தறிவற்ற மக்களின் பேச்சுவழக்குகள் தமிழுக்கு மிக நெருக்கமானவை.
No comments:
Post a Comment