Showing posts with label இஸ்லாம்... Show all posts
Showing posts with label இஸ்லாம்... Show all posts

Tuesday, 26 June 2012

பெண்களுக்கும் பங்குண்டு




 



இஸ்லாமிய வரலாற்றை புரட்டிப் பார்க்கும்போது பெண்மணிகளின் பங்களிப்பு பாரிய அளவில் இருந்திருக்கிறது. ஒரு தாயாக, மனைவியாக, சகோதரியாக, மகளாக முஸ்லிம் பெண் சமூகத்தை தாங்கி நிற்கிறாள். ஆண்களில் சிலர் தாம் மட்டும் புகழுக்குரியவர்கள் என நினைக்கின்றனர். தாமே போராட்டங்களின் முன்னோடிகள் எனவும், நாகரிகங்களின் சொந்தக்காரர்கள் எனவும் கருதுகின்றனர். அறிவும், பலமும், பதவியும் அவர்களிடம் மாத்திரமே இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். பெண்களைப் பற்றி கூறப்பட்டால், அவர்களால் வேலைகளை திறன்பட செய்ய முடியாது, வீட்டு வேலைகளை செய்வதும் கணவனுக்கு பணிவிடை செய்வதும் தான் அவர்களது பணி என்று கூறுகின்றனர்.
உண்மையில் பெண்களுக்கு அல்லாஹ் நிறைய அருள்களை வழங்கியிருக்கின்றான். இஸ்லாமிய வரலாற்றை திரும்பிப் பார்க்கும்போது பெண் என்பவள் எவ்வாறு காணப்பட்டாள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஜாஹிலிய்யா காலத்தைப் பற்றி விளங்கிக் கொள்ளும்போதுதான் இஸ்லாம் பெண்களுக்கு எவ்வளவு சுதந்திரம் வழங்கியிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். ஜாஹிலியா காலத்தில் பெண் இழிவுப் பொருளாக கருதப்பட்டாள். ஓர் ஆணின் உடலியல் தேவைகளை நிறைவேற்றும் அடிமைதான் பெண் என அக்கால மக்கள் நம்பியிருந்தனர்.
பெண் சமூகத்தின் அங்கமாகவே பார்க்கப்படவில்லை. பெண் குழந்தைகள் உயிருடன் புதைக்கப்பட்டன. அவர்களது மனோநிலை பற்றி திருமறை கூறும்போது "அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்து விட்டது என்று நன்மாராயம் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து கோபமுடையவனாகிறான்" (நஹ்ல்: 58) என்று வர்ணிக்கிறது. இந்த அநியாயங்கள், கொடுமைகளிலிருந்து பெண்ணுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தது இஸ்லாம். கண்ணியம் வாங்கிக் கொடுத்தது இஸ்லாம். ஆணைப் போலவே சகல உரிமைகளையும் பெற்றுக் கொடுத்தது இஸ்லாம், "ஆணாயினும் பெண்ணாயினும் யார் நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களுக்கு மணமான நல்ல வாழ்க்கையைக் கொடுப்போம்" (நஹ்ல்: 97) என்று அல்குர்ஆன் கூறுகின்றது.
பெண்ணுக்குரிய சகல உரிமைகளையும் வென்றுகொடுத்த மார்க்கம் இஸ்லாம். (நிஸா - பெண்கள்) என்ற பெயரில் ஒரு முழு ஸூறாவையே அல்லாஹ் இறக்கி வைத்துள்ளான். "மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள். அவன் யாவரையும் ஓர் ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்து அவரது மனைவியைப் படைத்தான். பின்னர் அவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும் பெண்களையும் படைத்தான் (அந்நிஸா-01) ஒரு பெண் பிள்ளையைப் பராமரிப்பதிலும், பாதுகாப்பதிலும் இஸ்லாம் கூடிய அக்கறை செலுத்துகிறது.
இஸ்லாமிய சமூகத்தை கட்டியெழுப்புவதில் ஆணுக்குள்ள அதே பங்கு பெண்ணுக்குமுண்டு. நபி (ஸல்)  அவர்கள் காலம் முதல் இன்று வரை இஸ்லாத்தைப் பாதுகாப்பதில் பெண்களின் பங்கு அளப்பரியது. கல்வி, பொருளாதார, போராட்ட விடயங்களில் பங்கு கொண்டு இஸ்லாத்தை வளர்க்க முடிவு செய்து கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஆண்களைப் போலவே பெண்களும் வணிகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இஸ்லாமிய தஃவாவை பாதுகாத்த பெருமை ஆண்களைப் போலவே பெண்களையும் சாரும். குடும்ப வாழ்வில் பெண்ணுக்கு விஷேடமான பங்கிருக்கிறது. குடும்ப வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி பெண்ணுக்கிருக்கிறது.
நபி (ஸல்) அவர்களின் தஃவாவை ஆரம்பமாக ஏற்றுக் கொண்டவர்களுள் அவரது மனைவி கதீஜா (றழி) அவர்களும் ஒரு வராவார். அப்பெண்மணி தனது செல்வம் முழுவதையும் இஸ்லாத்திற்காக தியாகம் செய்தார். நபியவர்களின் தஃவாவுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினார். இஸ்லாத்திற்காக நிறைய தியாகங்கள் செய்தார். பல இழப்புகளை சந்தித்தார். இதனால்தான் நபியவர்களின் ஒரு ஹதீஸ் "சுவனப் பெண்களில் சிறந்தவர்கள் கதீஜா பின்த் ஹுவைலித், பாதிமா பின்த் முஹம்மத், ஆஸியா (பிர்அவ்னின் மனைவி), மர்யம் பின்த் இம்ரான்" என்று குறிப்பிடுகின்றது.
தியாகம், போராட்டம் என்று நோக்கும்போது கூட அதிலும் பெண்ணுக்கு பெரிய பங்கிருக்கிறது. இஸ்லாத்தை பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தபோது அதை ஏற்றுக் கொண்டதற்காக அம்மாரின் தாய் ஸுமையா பின்த் ஹம்மார் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். போராட்டங்களின்போது முஸ்லிம் படையணிக்கு உதவியாக முஸ்லிம் பெண்மணிகள் செயற்பட்டடிருக்கிறார்கள். நபியவர்களின் காலத்தில் இஸ்லாத்திற்காக வீரத்துடன் செயற்பட்டவராக ஹவ்லா பின்த் அஸ்வர் (றழி) அவர்கள் காணப்படுகின்றார்கள். யுத்தத்தில் காயப்பட்ட முஸ்லிம் வீரர்களுக்கு மருந்து உதவிகளை முஸ்லிம் பெண்களே செய்துவந்தனர்.
நவீன காலத்தில் முஸ்லிம் பெண்களை நோக்கும்போது இரண்டு வகையினரை காண முடியும். இஸ்லாமிய உணர்வுடன் வாழ்பவர்கள் ஒரு பகுதியினர். மேற்கத்தேய கலாச்சாரத்தில் மூழ்கி இஸ்லாமிய பெயர்களில் மாத்திரம் வாழ்பவர்கள் இன்னொரு வகையினர். சிறந்த இஸ்லாமிய குடும்பத்தை உருவாக்கியெடுப்பதில் முக்கிய பொறுப்பு ஒரு குடும்பப் பெண்ணின் கையில்தான் இருக்கிறது. அரை நூற்றாண்டுக்கு மேலான பலஸ்தீனப் போராட்டத்தில் பெண்களின் தியாகம் பாராட்டப்பட வேண்டிய தாகவுள்ளது. அவர்கள் தமது கணவனையும், பிள்ளைகளையும் உற்சாகமூட்டி போராட்டத்துக்கு அனுப்பி வைப்பதைப் பார்த்து எந்த உள்ளமும் அழாமல் இருக்க முடியாது.
கல்வித் துறையிலும் முஸ்லிம் பெண்மணிகள் சாதனை புரிந்திருக்கிறார்கள். பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாக, விரிவுரையாளர்களாக செயற்படுகின்றார்கள். மருத்துவர்களாக, பொறியியலாளர்களாக, வழக்கறிஞர்களாக, கணக்காளர்களாக, ஆசிரியைகளாக தமது சேவையை சமூகத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். எமது பெண்கள் பல துறைகளையும் சார்ந்த புத்த ங்கள் எழுதியிருக்கிறார்கள். ஊடகவியலாளர்களாக முஸ்லிம் பெண்கள் செயற்பட்டு வருகிறார்கள்.
அரசியலிலும் நவீன கால முஸ்லிம் பெண்கள் ஈடுபடுகின்றார்கள். அரச நிறுவனங்களிலும் முக்கிய பதவிகளில் முஸ்லிம் பெண்கள் இணைந்திருக்கிறார்கள். பல நாடுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களாக எமது பெண்கள் இருக்கின்றார்கள். அமைச்சுப் பதவிகளைக் கூட பொறுப்பேற்றிருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் பெண்கள் உரிமைகள் சம்பந்தமாகப் பேசுகின்றார்கள். பெண்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கின்றானர். முக்கியமான நிறுவனங்கள், கம்பனிகளின் உரிமையாளர்களாகவும் எமது பெண்கள் இருப்பது முஸ்லிம் பெண்களின் அந்தஸ்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கான சில உதாரணங்களாகும்.
உண்மையில் இஸ்லாத்தில் பெண்ணுக்கு மிக உயரிய இடம் உண்டு. அவளை மிகவும் கண்ணியத்துடனேயே இஸ்லாம் நோக்குகிறது. இஸ்லாமிய வரலாற்றை புரட்டிப் பார்த்தால் முஸ்லிம் பெண்களின் சாதனைகளைப் புரிந்து கொள்ளலாம். முஸ்லிம் பெண்களையும் இணைத்துத்தான் இஸ்லாமியக் குடும்பம், இஸ்லாமிய சூழல், இஸ்லாமிய நாடு அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை அனைவரும் ஆழமாகப் புரிய வேண்டும். அவளுக்குரிய உரிமைகள் முழுமையாக வழங்கப்பட வேண்டும். உலகில் மிகப் பெரும் இயக்கமாக வளர்ந்துள்ள இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை வளர்த்த பெருமை ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்குமுண்டு.
கலாநிதி அலி-அல்-ஹம்மாதி அவர்களது கட்டுரையை தழுவி எழுதப்பட்டது.

Wednesday, 22 June 2011

இணைவைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழலாமா...???


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு!!

இணைவைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழலாமா...???

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றி தொழுவது பற்றி நேரடியாக ஹதீஸ் ஏதும் இல்லை. ஆயினும் அது பற்றி எந்த முடிவுக்கு வரலாம் என்பதற்கான அடிப்படை குர்ஆனிலும்
ஹதீஸிலும் காணப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் மக்களுக்கு தொழுகை நடத்தி வந்தார். அவர் ஒரு நாள் கிப்லாவை நோக்கி எச்சில் துப்பினார். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் தொழுது முடித்தவுடன் இனி மேல் அவர் உங்களுக்கு தொழுகை நடத்தக் கூடாது என்று மக்களிடம் கூறினார்கள். அவர் மற்றொறு தடவை தொழுவிக்க முயன்ற போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை அவரிடம் தெரிவித்தனர். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்ட போது நீ அல்லாஹ்வையும் அவனது துதரையும் துன்புறுத்தி விட்டாய் எனக் கூறினார்கள்.

அறிப்பவர் : அஹ்மத் (ர)
நுற்கள் : அபூதாவூத்(407). அஹ்மத்(15966)





நபிகள் நாயகம் பார்த்துக் கொண்டிருக்கும் போது கிப்லாவின்பால் எச்சில் துப்பியவர் இமாமத் செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளனர்.



வெளிப்படையாக பகிரங்கமாக பாவம் செய்பவர் தொழுகை நடத்தும் தகுதியை இழந்து விடுகிறார் என்பதை இதிருந்து அறியலாம்.



ஆனால் தொழுத தொழுகையை திருப்பித் தொழுமாறு மக்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லையே என்று சிலர் வாதிடலாம். சட்டம் இயற்றப்படாத நேரத்தில் சட்ட மீறல் கிடையாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கட்டளையிட்ட பிறகு தான் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருகிறது. அதற்கு முன் செய்த செயலை திரும்பச் செய்ய வேண்டியதில்லை.



கிப்லாவை நோக்கி எச்சில் துப்புவதை விட அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல் கடுமையானது என்பதில் சந்தேகம் இல்லை.



மேலும் இது குறித்து திருக்குர்ஆன் வசனங்களும் கடும் போக்கை காட்டுங்கின்றன. அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போர் பள்ளி வாசல்களை நிர்வகிக்க் கூடாது. அந்த உரிமையும் தகுதியும் அவர்களுக்கு இல்லை என்று திருக்குர்ஆன் கூறுகிறது.



இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.



(திருக்குர்ஆன் 9 : 17



தொழுகைக்கு தலைமை தாங்குவது தான் நிர்வகிப்பதில் முக்கியமானதாகும்.. தாங்கள் இணை கற்பிப்பதை பகிரங்கமாக அறிவித்துக் கொண்டுள்ளவர்களை இமாமாக ஏற்கக் கூடாது என்பதை இதிருந்து அறியலாம்.







மேலும் இணை கற்பிப்பவருக்கு பாவ மன்னிப்பு கேட்கக் கூடாது என திருக்குர்ஆன் கூறுகிறது.



இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.



(திருக்குர்ஆன் 9 : 113)



இணை கற்பிக்கும் இமாமை பின்பற்றும் போது தொழுகையில் நாம் கேட்கும் பாவமன்னிப்பு அவருக்கும் உரியதாகிறது. இந்தக் காரணத்திற்காகவும் இணை கற்பிப்போரை பின்பற்றக் கூடாது.



மேலும் இணை கற்பிப்போரை பொறுப்பாளராக ஆக்கக் கூடாது என்று பின் வரும் வசனங்கள் கூறுகின்றன.



நம்பிக்கை கொண்டோர், நம்பிக்கை கொண்டோரை விட்டு விட்டு (ஏக இறை வனை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஆக்கக் கூடாது. இவ்வாறு செய்பவருக்கு அல்லாஹ்விடமிருந்து (பாதுகாப்பு) எதுவுமில்லை. அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தவிர. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். திரும்புதல் அல்லாஹ்விடமே உள்ளது.



(திருக்குர்ஆன் 3 : 28)



(இறை) மறுப்பை விரும்புவார்களானால் அவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்! உங்களில் அவர்களை உற்ற நண்பர்களாக்குவோரே அநீதி இழைத்தவர்கள்.



(திருக்குர்ஆன் 9 : 23)



அவர்கள் நம்பிக்கை கொண்டோரை விடுத்து (ஏக இறைவனை) மறுப்போரை உற்ற நண்பர்களாக்கிக் கொண்டனர்.அவர்களிடம் கண்ணியத்தைத் தேடுகிறார்களா? கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது.



(திருக்குர்ஆன்4 : 139)


நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்டோரை விடுத்து (ஏக இறைவனை) மறுப்போரை உற்ற நண்பர் களாக்கிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்கு எதிரான சான்றை அல்லாஹ்வுக்கு ஏற்படுத்திக் கொடுக்க விரும்புகிறீர்களா?



(திருக்குர்ஆன் 4 : 144)


தொழுகை என்பது அமல்களிலேயே மிக சிறந்த அமலாகும். ஒரு முஸ்லிம் அதை சிறந்த முறையில் கடைபிடிக்கும் பட்சத்தில் அது அவருக்கு சிறந்ததாக அமைந்து விடும். ஜமாஅத்தாக தொழும் தொழுகையின் சிறப்புப் பற்றி பல ஹதீஸ்கள் வந்துள்ளன. அந்த ஹதீஸ்களையெல்லம் படித்து நிறைய நன்மையை பெறுவோம் என்ற எண்ணத்தில் பள்ளிக்கு செல்லும் தவ்ஹீத் வாதிகளில் பலருக்கு சட்டென்று ஒரு ஊசலாட்டம் மனதில் எழுகிறது. இந்த பள்ளி இமாம் நம் கொள்கையை சார்ந்தவர் அல்லவே! எனவே இவர் பின்னால் நின்று தொழுதால் நம் தொழுகை கூடுமா...? என்று. சிலர் ஊசலாட்டத்தை புறக்கணித்து விட்டு ஜமாஅத்தில் சேர்ந்து விடுகிறார்கள். மற்ற சிலர் ஊசலாட்டத்தை மேலும் வளர்த்துக் கொண்டு ஒதுங்கி - தனித்து விடுகிறார்கள் அல்லது தன் கொள்கைக் உட்பட்டவரையாக தேடி தனி ஜமாஅத் அமைத்துக் கொள்கிறார்கள்.

எந்த முன்னோக்கமும் இன்றி திறந்த மனதுடன் குர்ஆன் சுன்னாவை அணுகும் போது இணைவைப்பு உட்பட எந்த தீய காரியத்தை செய்பவராக இருந்தாலும் அவரை பின்பற்றி தொழக் கூடாது என்பதற்கு எந்த ஒரு இடத்திலும் தடை வரவில்லை. நாம் ஏற்படுத்திக் கொண்ட ஊசலாட்டம்தான் நமக்கு தடையாக இருக்கிறது.

முஸ்லிம் என்ற தன்னை அறிவித்துக் கொண்டு தொழுகைக்கு இமாமத் செய்யும் எவரையும் பின்பற்றி நாம் தொழலாம்.

ஒருவர் ஷிர்க் - வட்டி போன்ற கடும் குற்றங்களை செய்கிறார். முஸ்லிம் என்ற நிலையில் இமாமத்திற்காக நிற்கிறார் என்றால் அவருடைய பாவம் அவரை பாதிக்கும் நிலையில் அவரை பின்பற்றி தொழுவதால் நம்முடைய தொழுகைக்கு எத்தகைய பாதிப்பும் வரப்போவதில்லை.

பாவம் செய்யும் எந்த ஒரு ஆத்மாவும் தனக்கே கெடுதியை தேடிக் கொள்கிறது ஒரு ஆத்மாவின் பாவ சுமையை மற்ற ஆத்மா சுமக்காது. (அல் குர்ஆன் 6:164)

நம் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய இந்த ஒரு அறை வசனம் போதும். ஒருவர் சுமையை அடுத்தவர் சுமக்க மாட்டார் என்பது இஸ்லாத்தின் மிக முக்கிய கோட்பாடுகளில் ஒரு கோட்பாடாகும். எனவே இமாமத் செய்பவர் எத்தகைய பாவத்தில் மூழ்கி இருந்தாலும் அவரது பாவம் நம்முடைய அமல்களை ஒரு போதும் பாதிக்காது என்பதால் அத்தகையோரை பின்பற்றி தொழுவதற்கு தடை எதுவும் இல்லை.

எவர் நம் தொழுகையை தொழுது - நம் கிப்லாவை முன்னோக்கி - நாம் அறுத்ததை சாப்பிடுகிறாரோ அவர் முஸ்லிம். அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பிலும் அவன் தூதரின் பாதுகாப்பிலும் இருக்கிறார். மற்ற முஸ்லிம்களுக்கு இருக்கும் உரிமைகளும் கடமைகளும் இவருக்கும் உண்டு என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அனஸ்(ரலி) புகாரி - திர்மிதி)

ஒருவரை முஸ்லிம் என்று தெரிந்துக் கொள்வதற்கு வெளிப்படையான பல அடையாளங்களை இஸ்லாம் காட்டுகிறது. அந்த அடையாளங்களில் சிலது இந்த ஹதீஸில் வந்துள்ளது.

நம் - அதாவது முஸ்லிம்களின் தொழுகையை தொழுதல்

நம் - முஸ்லிம்களின் கிப்லாவை முன்னோக்குதல்

நம் - முஸ்லிம்களின் குர்பானியில் பங்குபெறுதல்.

ஒருவர் முஸ்லிம்களின் தொழுகையை தொழுவதற்காக நின்று - முஸ்லிம்களின் கிப்லாவை முன்னோக்குகிறார் இந்நிலையில் அவரை பின்பற்றி தொழ மனம் இடங் கொடுக்காமல் ஊசலாட்டம் ஏற்பட்டால் ஊசலாட்டத்தைதான் புறக்கணிக்க வேண்டும் ஏனெனில் ஊசலாட்டம் ஷெய்த்தானின் ஆயுதமாகும்.

அதே ஹதீஸில் மற்ற முஸ்லிம்களுக்கு உள்ள உரிமையும் கடமையும் இவருக்கும் உண்டு என்ற வாசகத்தையும் கவனிக்க வேண்டும்.

இமாமத் - ஜமாஅத் தொழுகை என்பது கொள்கையின் அடிப்படையில் இஸ்லாத்தில் நிர்ணயம் செய்யப்படவில்லை. தேவையான சந்தர்பங்களில் முஸ்லிம்கள் ஒருங்கிணைந்து வணங்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடேயாகும்.

தெளிவான வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் இமாமத் செய்பவரின் கொள்கையும் பின்பற்றி தொழுபவரின் கொள்கையும் பின்னி பிணைந்திருக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம் எதுவுமில்லை. இமாமுக்கும் மஃமூம்களுக்கும் உள்ள தொடர்பு முதல் தக்பீரிலிருந்து ஸலாம் கொடுக்கும் வரைதான். அதன் பின் அவர் யாரோ, நாம் யாரோ அவ்வளவுதான். அது ஒரு தற்காலிக கூட்டமைப்பிற்குரிய தலைமைதான் என்பதை விளங்கிக் கொண்டால் ஊசலாட்டம் அகன்றுவிடும்.

எனவே எந்த இமாமையும் பின்பற்றி தொழலாம். நம்முடைய அமல்கள் நம் எண்ண அடிப்படையில் சரியாக இருக்கும் வரை மற்றவர்களால் நம் அமல்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்பதே உண்மையாகும்..!!

Tuesday, 21 June 2011

தீன்குலப் பெண்ணின் குணங்கள்

ஆறாவது குணம்
பயனுள்ள கல்வியைத் தேடுவதில் ஆசை கொள்ள வேண்டும்
عَنْ عَائِشَةَ أَنَّ أَسْمَاءَ سَأَلَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ غُسْلِ الْمَحِيضِ فَقَالَ تَأْخُذُ إِحْدَاكُنَّ مَاءَهَا وَسِدْرَتَهَا فَتَطَهَّرُ فَتُحْسِنُ الطُّهُورَ ثُمَّ تَصُبُّ عَلَى رَأْسِهَا فَتَدْلُكُهُ دَلْكًا شَدِيدًا حَتَّى تَبْلُغَ شُؤُونَ رَأْسِهَا ثُمَّ تَصُبُّ عَلَيْهَا الْمَاءَ ثُمَّ تَأْخُذُ فِرْصَةً مُمَسَّكَةً فَتَطَهَّرُ بِهَا فَقَالَتْ أَسْمَاءُ وَكَيْفَ تَطَهَّرُ بِهَا فَقَالَ سُبْحَانَ اللَّهِ تَطَهَّرِينَ بِهَا فَقَالَتْ عَائِشَةُ كَأَنَّهَا تُخْفِي ذَلِكَ تَتَبَّعِينَ أَثَرَ الدَّمِ وَسَأَلَتْهُ عَنْ غُسْلِ الْجَنَابَةِ فَقَالَ تَأْخُذُ مَاءً فَتَطَهَّرُ فَتُحْسِنُ الطُّهُورَ أَوْ تُبْلِغُ الطُّهُورَ ثُمَّ تَصُبُّ عَلَى رَأْسِهَا فَتَدْلُكُهُ حَتَّى تَبْلُغَ شُؤُونَ رَأْسِهَا ثُمَّ تُفِيضُ عَلَيْهَا الْمَاءَ فَقَالَتْ عَائِشَةُ نِعْمَ النِّسَاءُ نِسَاءُ الْأَنْصَارِ لَمْ يَكُنْ يَمْنَعُهُنَّ الْحَيَاءُ أَنْ يَتَفَقَّهْنَ فِي الدِّينِ رواه مسلم
அஸ்மா பின்த் ஷகல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், மாதவிடாய்க் குளியல் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவர் (மாதவிடாய்க் குளிய-ன் போது) தண்ணீரையும் இலந்தை இலைகளையும் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள்ளட்டும். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகத் தேய்த்து தலையின் சருமம் நனையும்வரைக் கழுவட்டும். பிறகு உடம்புக்குத் தண்ணீர் ஊற்றட்டும். அதன் பின்னர் கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து சுத்தம் செய்துகொள்ளட்டும்'' என்று சொன்னார்கள். அதற்கு அஸ்மா (ர-) அவர்கள், "அதை வைத்து அவள் எவ்வாறு சுத்தம் செய்வாள்?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்!). அதனால் சுத்தம் செய்துகொள்ளட்டும்'' என்று (மீண்டும்) சொன்னார்கள்.
உடனே நான், "இரத்தம் படிந்த இடத்தில் தடவிக்கொள்' என்று பிறர் காதில் விழாதவாறு அதை இரகசியமாகச் சொன்னேன். மேலும், அஸ்மா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் முறை பற்றிக் கேட்டார். அதற்கு அவர்கள், "தண்ணீர் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி தலையின் சருமம் நனையும் அளவுக்கு நன்கு தேய்த்துக்கொள். பின்னர் உன் (மேனியின்) மீது தண்ணீர் ஊற்று!'' என்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: பெண்களிலேயே மிகச் சிறந்தவர்கள் அன்சாரிப் பெண்களாவர். மார்க்கத்தை விளங்கிக்கொள்வதில் வெட்கம் அவர்களுக்குத் தடையாக இருந்ததில்லை.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் 552

أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَتْ لَا تَسْمَعُ شَيْئًا لَا تَعْرِفُهُ إِلَّا رَاجَعَتْ فِيهِ حَتَّى تَعْرِفَهُ وَأَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ حُوسِبَ عُذِّبَ قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ أَوَلَيْسَ يَقُولُ اللَّهُ تَعَالَى فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا قَالَتْ فَقَالَ إِنَّمَا ذَلِكِ الْعَرْضُ وَلَكِنْ مَنْ نُوقِشَ الْحِسَابَ يَهْلِكْ متفق عليه
இப்னு அபீமுலைக்கா (அப்தில்லாஹ் பின் உபைதில்லாஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் தமக்குப் புரியாத ஒரு செய்தியைக் கேட்டால் அதனை அவர்கள் நன்கு புரிந்துகொள்ளும் வரை (அதையொட்டி) மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்வார்கள்.
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், "எவர் (மறுமை நாளில் துருவித் துருவி) விசாரிக்கப்படுவாரோ அவர் வேதனை செய்யப்படுவார்'' என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ் (குர்ஆனில்) "வலக்கரத்தில் தமது வினைப் பதிவுச் சீட்டு வழங்கப்பட்டவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும்' (84:8) என்றல்லவா கூறுகின்றான்?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "இது (கேள்விக் கணக்குத் தொடர்பானது அன்று: மாறாக, மனிதர்களின் நன்மை தீமைகளின் பட்டியலை அவர்களுக்கு முன்) சமர்ப்பிக்கப்படுவதுதான். துருவித் துருவி விசாரிக்கப்படுபவர் அழிந்தே போய்விடுவார்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி 103, முஸ்-ம்
سَمِعْتُ مُعَاوِيَةَ خَطِيبًا يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ يُرِدْ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ وَإِنَّمَا أَنَا قَاسِمٌ وَاللَّهُ يُعْطِي وَلَنْ تَزَالَ هَذِهِ الْأُمَّةُ قَائِمَةً عَلَى أَمْرِ اللَّهِ لَا يَضُرُّهُمْ مَنْ خَالَفَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ متفق عليه
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கிவிடுகின்றான். நான் விநியோகிப்பவன்தான். அல்லாஹ்வே வழங்குகிறான். இந்தச் சமுதாயத்தில் ஒருசாரார் அல்லாஹ்வுடைய கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். அல்லாஹ்வின் கட்டளை (மறுமை நாள்) வரும் வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்துவிட முடியாது.
அறிவிப்பவர் : முஆவியா (ரலி),
நூல் : புகாரீ 71, முஸ்லிம்
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ يَسَّرَ اللَّهُ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَاللَّهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ وَمَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ وَمَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللَّهِ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ إِلَّا نَزَلَتْ عَلَيْهِمْ السَّكِينَةُ وَغَشِيَتْهُمْ الرَّحْمَةُ وَحَفَّتْهُمْ الْمَلَائِكَةُ وَذَكَرَهُمْ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ وَمَنْ بَطَّأَ بِهِ عَمَلُهُ لَمْ يُسْرِعْ بِهِ نَسَبُهُ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் இம்மையில் ஓர் இறைநம்பிக்கையாளரின் துன்பங்களில் ஒன்றை அகற்றுகிறாரோ அவருடைய மறுமைத் துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் அகற்றுகிறான். யார் சிரமப்படுவோருக்கு உதவி செய்கிறாரோ அவருக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி செய்கிறான். யார் ஒரு முஸ்-மின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் மறைக்கிறான். அடியான் தன் சகோதரன் ஒருவனுக்கு உதவி செய்துகொண்டிருக்கும்வரை அந்த அடியானுக்கு அல்லாஹ் உதவி செய்துகொண்டிருக்கிறான். யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக் கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள் மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக் கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்து கொள்கின்றனர். மேலும் இறைவன், அவர் களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவு கூறுகிறான். அறச் செயல்களில் பின்தங்கிவிட்ட ஒருவரைக் குலச் சிறப்பு முன்னுக்குக் கொண்டு வந்து விடுவதில்லை.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 5231
7528 عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَحَاسُدَ إِلَّا فِي اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللَّهُ الْقُرْآنَ فَهُوَ يَتْلُوهُ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ فَهُوَ يَقُولُ لَوْ أُوتِيتُ مِثْلَ مَا أُوتِيَ هَذَا لَفَعَلْتُ كَمَا يَفْعَلُ وَرَجُلٌ آتَاهُ اللَّهُ مَالًا فَهُوَ يُنْفِقُهُ فِي حَقِّهِ فَيَقُولُ لَوْ أُوتِيتُ مِثْلَ مَا أُوتِيَ عَمِلْتُ فِيهِ مِثْلَ مَا يَعْمَلُ رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களில் தவிர வேறெதற்காகவும் பொறாமைப்படக் கூடாது.
1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனின் ஞானத்தை வழங்கினான். அதை அவர் அல்லும் பகலும் ஓதி (அதன்படி செயல்பட்டு) வருகிறார். (இதைக் கண்ட) மற்றொருவர், "இவருக்கு வழங்கப்பட்டதைப் போன்றே எனக்கும் வழங்கப்படுமானால் இவரைப் போன்றே நானும் செயல்படுவேனே!'' என்று (ஆதங்கத்துடன்) கூறினார். 2. மற்றொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அதை அவர் உரிய வழியில் செலவிடுகிறார். (இதைக் காணும்) மற்றொருவர், "இவருக்கு வழங்கப்பட்ட (செல்வத்)தைப்போன்று எனக்கும் வழங்கப்பட்டால், இவரைப் போன்றே நானும் செயல்படுவேன்'' என்கிறார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 7528
ஏழாவது குணம்
தாம் தேடிப் பெற்ற பயனுள்ள கல்வியை மற்றவர்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான் : நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
அல்குர்ஆன் 9:71
மார்க்க விஷயங்களை தெரியாத ஒருவர் நம்மிடம் வந்து மார்க்க விஷயங்களை கேட்டால் நமக்கு அந்த விஷயம் தெரியுமானால் அவற்றை சொல்லிவிட வேண்டும்.
4855 عَنْ مَسْرُوقٍ قَالَ قُلْتُ لِعَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا يَا أُمَّتَاهْ هَلْ رَأَى مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَبَّهُ فَقَالَتْ لَقَدْ قَفَّ شَعَرِي مِمَّا قُلْتَ أَيْنَ أَنْتَ مِنْ ثَلَاثٍ مَنْ حَدَّثَكَهُنَّ فَقَدْ كَذَبَ مَنْ حَدَّثَكَ أَنَّ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَبَّهُ فَقَدْ كَذَبَ ثُمَّ قَرَأَتْ لَا تُدْرِكُهُ الْأَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْأَبْصَارَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ وَمَا كَانَ لِبَشَرٍ أَنْ يُكَلِّمَهُ اللَّهُ إِلَّا وَحْيًا أَوْ مِنْ وَرَاءِ حِجَابٍ وَمَنْ حَدَّثَكَ أَنَّهُ يَعْلَمُ مَا فِي غَدٍ فَقَدْ كَذَبَ ثُمَّ قَرَأَتْ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَنْ حَدَّثَكَ أَنَّهُ كَتَمَ فَقَدْ كَذَبَ ثُمَّ قَرَأَتْ يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ الْآيَةَ وَلَكِنَّهُ رَأَى جِبْرِيلَ عَلَيْهِ السَّلَام فِي صُورَتِهِ مَرَّتَيْنِ رواه البخاري
மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ர-) அவர்கüடம் "அன்னையே! முஹம்மது (ஸல்) அவர்கள் தம் இறைவனை (மிஅராஜ்-விண்ணுலகப் பயணத்தின்போது நேரில்) பார்த்தார்களா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நீங்கள் சொன்னதைக் கேட்டு என் ரோமம் சி-லிர்த்து விட்டது. மூன்று விஷயங்கள் (பற்றிய உண்மைகள்) உங்களுக்கு எப்படித் தெரியாமல் போயின? அவற்றை உங்களிடம் யார் தெரிவிக்கின்றாரோ அவர் பொய்யுரைத்து விட்டார். முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்கüடம் யார் கூறுகிறாரோ அவர் பொய் சொல்-விட்டார்'' என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) "கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது; அவனோ அனைத்தையும் பார்க்கின்றான். அவன் நுட்பமானவனும் நன்கறிந்தவனும் ஆவான்'' எனும் (6:103ஆவது) வசனத்தையும், "எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும் வஹியின் (வேத அறிவிப்பின்) மூலமோ, திரைக்கு அப்பா-ருந்தோ, ஒரு தூதரை அனுப்பி வைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகின்றவற்றை அறிவிக்கச் செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை'' எனும் (42:51ஆவது) வசனத்தையும் ஓதினார்கள். மேலும், "எவர் உங்கüடம் முஹம்மது (ஸல்) அவர்கள் நாளை நடப்பவற்றையும் அறிவார்கள்'' என்று சொல்கிறாரோ, அவரும் பொய்யே சொன்னார்'' என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) "எந்த மனிதனும் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறான் என்பதை அறிவதில்லை'' எனும் (31:34ஆவது) வசனத்தை ஓதினார்கள். மேலும், "எவர் உங்கüடம் முஹம்மது (ஸல்) அவர்கள் (மக்களுக்கு எடுத்துரைத்துவிடுமாறு பணிக்கப்பட்ட ஒன்றை) மறைத்து விட்டார்கள்'' என்று சொன்னாரோ, அவரும் பொய்யே சொன்னார்'' என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) "தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கி வைக்கப்பட்டவற்றை (மக்களுக்கு) எடுத்துரைத்துவிடுங்கள்...'' எனும் (5:67ஆவது) வசனத்தை ஓதினார்கள். "மாறாக, முஹம்மது (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களையே அவரது (நிஜத்) தோற்றத்தில் இரண்டு முறை கண்டார்கள்'' என்று சொன்னார்கள்
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி 4855
தவறு செய்வதைப் பார்த்தால் அதை சுட்டிக்காட்டி திருத்த வேண்டும்.
عَنْ إِبْرَاهِيمَ عَنْ الْأَسْوَدِ قَالَ دَخَلَ شَبَابٌ مِنْ قُرَيْشٍ عَلَى عَائِشَةَ وَهِيَ بِمِنًى وَهُمْ يَضْحَكونَ فَقَالَتْ مَا يُضْحِكُكُمْ قَالُوا فُلَانٌ خَرَّ عَلَى طُنُبِ فُسْطَاطٍ فَكَادَتْ عُنُقُهُ أَوْ عَيْنُهُ َنْ تَذْهَبَ فَقَالَتْ لَا تَضْحَكُوا فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ مُسْلِمٍ يُشَاكُ شَوَْةً فَمَا فَوْقَهَا إِلَّا كُتِبَتْ لَهُ بِهَا دَرَجَةٌ وَمُحِيَتْ عَنْهُ بِهَا خَطِيئَةٌ رواه مسلم
அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள் "மினா'வில் இருந்த போது அவர்களிடம் குறைஷிக் குலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வந்தார். அப்போது அ(ங்கிருந்த)வர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள். உடனே ஆயிஷா (ரலி) அவர்கள், "உங்களுடைய சிரிப்புக்கு என்ன காரணம்?'' என்று கேட்டார்கள். அதற்கு அம்மக்கள், "இன்ன மனிதர் கூடாரத்தின் கயிற்றில் இடறி விழுந்து விட்டார். அவரது கழுத்தோ கண்ணோ போயிருக்கும் (நல்லவேளை பிழைத்துக் கொண்டார்)'' என்று கூறினர். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், "(இதற்கெல்லாம்) சிரிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு முஸ்லிமைத் தைக்கும் ஒரு முள்ளாயினும் அதைவிடச் சிறிய துன்பம் எதுவாயினும், அதற்காக அவருக்கு ஓர் அந்தஸ்து பதிவு செய்யப்படுகிறது; அதற்குப் பகரமாக அவருடைய தவறுகளில் ஒன்று துடைக்கப்படுகிறது' என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்'' என்றார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் 5024
عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ حَدَّثَهُ عَنْ أَبِيهِ أَنَّهُ كَانَ قَاعِدًا عِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ إِذْ طَلَعَ خَبَّابٌ صَاحِبُ الْمَقْصُورَةِ فَقَالَ يَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ أَلَا تَسْمَعُ مَا يَقُولُ أَبُو هُرَيْرَةَ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ خَرَجَ مَعَ جَنَازَةٍ مِنْ بَيْتِهَا وَصَلَّى عَلَيْهَا ثُمَّ تَبِعَهَا حَتَّى تُدْفَنَ كَانَ لَهُ قِيرَاطَانِ مِنْ أَجْرٍ كُلُّ قِيرَاطٍ مِثْلُ أُحُدٍ وَمَنْ صَلَّى عَلَيْهَا ثُمَّ رَجَعَ كَانَ لَهُ مِنْ الْأَجْرِ مِثْلُ أُحُدٍ فَأَرْسَلَ ابْنُ عُمَرَ خَبَّابًا إِلَى عَائِشَةَ يَسْأَلُهَا عَنْ قَوْلِ أَبِي هُرَيْرَةَ ثُمَّ يَرْجِعُ إِلَيْهِ فَيُخْبِرُهُ مَا قَالَتْ وَأَخَذَ ابْنُ عُمَرَ قَبْضَةً مِنْ حَصْبَاءِ الْمَسْجِدِ يُقَلِّبُهَا فِي يَدِهِ حَتَّى رَجَعَ إِلَيْهِ الرَّسُولُ فَقَالَ قَالَتْ عَائِشَةُ صَدَقَ أَبُو هُرَيْرَةَ فَضَرَبَ ابْنُ عُمَرَ بِالْحَصَى الَّذِي كَانَ فِي يَدِهِ الْأَرْضَ ثُمَّ قَالَ لَقَدْ فَرَّطْنَا فِي قَرَارِيطَ كَثِيرَةٍ رواه مسلم
ஆமிர் பின் சஅத் பின் அபீவக்காஸ் அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது பெரிய வீட்டுக்காரர் கப்பாப் அல்மதனீ (ரலி) அவர்கள் அங்கு வந்து, "அப்துல்லாஹ் பின் உமர் அவர்களே! "ஒரு ஜனாஸாவின் வீட்டிலிருந்து அதனுடன் புறப்பட்டுச் சென்று, (ஜனாஸாத் தொழுகை) தொழுதுவிட்டு, அடக்கம் செய்யப்படும்வரை அதைப் பின்தொடர்கின்றவருக்கு இரண்டு "கீராத்'கள் நன்மை உண்டு; ஒவ்வொரு "கீராத்'தும் உஹுத் மலை அளவுடையதாகும்; (ஜனாஸாத்) தொழுது விட்டு
(அடக்கம் செய்யப்படும் வரை காத்திராமல்) திரும்பி விடுகின்றவருக்கு உஹுத் மலையளவு (ஒரு "கீராத்') நன்மை உண்டு' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிவருகின்றார்களே?'' என்று கேட்டார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், கப்பாபை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அது பற்றிக் கேட்டுவிட்டு அவர்கள் அளிக்கும் பதிலைத் தம்மிடம் வந்து தெரிவிக்குமாறு அனுப்பிவைத்தார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், போனவர் திரும்பி வரும்வரை பள்ளிவாசல் தரையில் கிடந்த சிறு கற்களில் ஒரு கைப்பிடியளவு அள்ளி தமது கையில் வைத்து கிளறிக்கொண்டிருந்தார்கள்.
(கப்பாப் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று கேட்டதற்கு) ஆயிஷா (ரலி) அவர்கள் "அபூஹுரைரா சொன்னது உண்மையே'' என்றார்கள். (இதைக் கேள்விப்பட்ட) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தமது கையிலிருந்த சிறு கற்களை கீழே எறிந்துவிட்டு, "நாம் ஏராளமான "கீராத்' (நன்மை)களை தவற விட்டுவிட்டோம்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : முஸ்லிம் 1727
عَنْ أَنَسٍ قَالَ قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ بَعْدَ وَفَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعُمَرَ انْطَلِقْ بِنَا إِلَى أُمِّ أَيْمَنَ نَزُورُهَا كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَزُورُهَا فَلَمَّا انْتَهَيْنَا إِلَيْهَا بَكَتْ فَقَالَا لَهَا مَا يُبْكِيكِ مَا عِنْدَ اللَّهِ خَيْرٌ لِرَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ مَا أَبْكِي أَنْ لَا أَكُونَ أَعْلَمُ أَنَّ مَا عِنْدَ اللَّهِ خَيْرٌ لِرَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَكِنْ أَبْكِي أَنَّ الْوَحْيَ قَدْ انْقَطَعَ مِنْ السَّمَاءِ فَهَيَّجَتْهُمَا عَلَى الْبُكَاءِ فَجَعَلَا يَبْكِيَانِ مَعَهَا رواه مسلم
நபி (ஸல்) அவர்களின் இறப்புக்குப்பின் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், "நம்மை (அம்மையார்) உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சந்தித்துவந்ததைப் போன்று நாமும் சந்தித்துவருவோம்'' என்று கூறினார்கள். அவ்வாறே உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றபோது அவர்கள் அழுதார்கள். அப்போது அவர்கள் இருவரும், "ஏன் அழுகிறீர்கள்? (நம்மிடம் இருப்பதை விட) அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாயிற்றே?'' என்று கேட்டார்கள். அதற்கு உம்மு அய்மன் (ரலி) அவர்கள், "அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாகும் என்பதை நான் அறியாமல் அழவில்லை. மாறாக, (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்போடு) வானிலிருந்து இறைச் செய்தி (வஹீ) வருவது நின்றுவிட்டதே! (அதற்காகத் தான் அழுகிறேன்)'' என்று கூறி, அவர்கள் இருவரையும் அழச்செய்துவிட்டார்கள். அவருடன் சேர்ந்து அவர்கள் இருவருமே அழலாயினர்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : முஸ்-ம் 4849

Wednesday, 15 June 2011

நபிமொழி அறிவோம்!

"எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவ+த் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து) சம்பாதித்த உணவையே உண்பவர்களாக இருந்தார்கள்" - நபி(ஸல்) நூல்: புகாரி

"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே!" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்

"பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்." - நபி(ஸல்) நூல்: புகாரி

"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும். - நபி (ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர், தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி

"கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)

"தன் இறைவனை நினைவு கூர்பவனுக்கும், அவனை நினைவு கூறாதவனுக்கும் உதாரணம் : உயிருள்ளவன், மரணித்தவன் போலாகும்" நபி(ஸல்) - நூல்: புகாரி

"எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ் அவனது தவறுகளை மன்னிக்கின்றான். எந்த அளவுக்கு எனில் அவனுக்கு ஒரு முள் குத்திவிட்டால் அதுவும் அவனுடைய பாவங்களை மன்னித்திடக் காரணமாகின்றது" - நபி(ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

ஜும்ஆ நாளில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று கூறினார்கள். நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது

மிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு "ஒருவர், மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர், இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்" நூல்: புகாரி, முஸ்லிம்

"இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்" நபி(ஸல்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி

"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்" நபி (ஸல்) அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி

யார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக! நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்!" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்" - நபி (ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்

"அக்கிரமம் செய்யாதீர்கள்! எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று: செல்வத்தின் உரிமையாளர், அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர!" - நபி(ஸல்) நூல்: பைஹகீ

''ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்" - நபிகள் நாயகம் (ஸல்) - நூல்: புகாரி, முஸ்லிம்

உங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்

தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்" - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்

''செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி

"நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்" நபி(ஸல்) அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"எவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க வேண்டுமென வேண்டினாரோ அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி

"இறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று. (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்" நபி(ஸல்) அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி

"தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்" நபி(ஸல்)

அறிவிப்பாளர் : ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி

"எந்த மனிதர் பொறுமையாயிருக்க முயல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பான். பொறுமையைவிடச் சிறந்தது பல நன்மைகளைக் குவிக்கக் கூடியதுமான கொடை வேறெதுவுமில்லை" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"வழங்கும் (உயர்ந்த) கை, வாங்கும்(தாழ்ந்த) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக!" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி

நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்

Sunday, 12 June 2011

முக்காடு..

நபியே நீர், உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய பெண் மக்களுக்கும், முஃமீன் பெண்களுக்கும், அவர்கள் தங்களுடைய தலை முந்தானைகளை இறக்கி கொள்ளும்படி நீர் கூறுவீராக. அதனால் [கண்ணியமானவர்கள் என] அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்போனும், கிருபை செய்வோனுமாக இருக்கின்றான். [சூரா அல் அஹ்ஜாப் :59]

அபூபக்கர்(ரழி) அவர்களுடைய மகள் அஸ்மாஃ(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். (அப்பொழுது) அவர்கள் மெல்லிய ஆடை (அணிந்திருந்தனர் அது கண்ட) நபி(ஸல்) அவர்கள் தங்கள் முகத்தை அவர்களை விட்டும் திருப்பிக்கொண்டு ‘அஸ்மாவே’ நிச்சயமாக பெண்கள் பூப்பெய்திவிடின் அவர்களின் இது, இதைத் தவிர (வேறு எதனையும் பிறர்) பார்த்தல் கூடாது’ என்று கூறித் தங்களின் முகத்தையும் கைகளையும் சுட்டிக் காட்டினர். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி) ஆதாரம்: அபூதாவூத்

கீழ்கண்ட கட்டுரையில் வரும் சம்பவங்களும், நபர்களும் உண்மையே அன்றி கற்பனை அல்ல. இக்கட்டுரையில் வரும் சம்பவங்கள், நபர்கள் உங்களை போல் இருந்தால் அதற்கு தாங்களே பொறுப்பு. நாங்கள் அல்ல. நமது சகோதரிகளின் அலட்சியத்தால் அல்லது கவன குறைவால் இது கூட சரியான வார்த்தையாக தோன்றவில்லை. இப்படி கூட நடக்குமா? என்ற எண்ணத்தில் செயல்படுவதால் இப்படி நம்மை எண்ண வைக்கிறது. இதை படித்துவிட்டு சகோதரிகளிடம் இருந்து காரசாரமான அம்பு மழைகளை எதிர்பார்க்கிறோம். நாம் குறை சொல்வது நோக்கமல்ல. நம்மை நாமே பரிசோதனை செய்வதே நோக்கம்.

முக்காடு என்பது தமிழ் பேசும் சகோதரிகளால் பல வண்ணங்களில் துப்பட்டி, அரை துப்பட்டி, முழு துப்பட்டி, கூசாலி துப்பட்டி, புர்கா என்று அழைக்கப்படுகிறது. அதற்கு கற்பனையான வடிவம் கொடுத்து அதை அணிவதையே இஸ்லாமிய உடையாக கருதுகிறார்கள். உண்மையில் இஸ்லாமிய உடை என்று ஒன்று இல்லை. அந்தந்த நாடுகளில் சகோதரிகள் அங்குள்ள தட்ப வெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப, இறைத் தூதர் சொன்ன வழியில் அணிவதே இஸ்லாமிய உடையாகும். முகம், இரு கைகள் மட்டும் தெரிய மற்ற உடல் உறுப்புகளை மறைப்பது, இறுக்கமான ஆடைகளை தவிர்ப்பது அனைத்தும் இஸ்லாமிய உடையாகும். அது எந்த வண்ணத்தில், வடிவில் இருந்தாலும் சரியே. இக்கட்டுரையின் பல பகுதிகளில் மக்கள் பயன்படுத்தும் அதே வார்த்தையை பயன்படுத்துகிறோம். உண்மை நிலையை உணர்த்தவே இவ்வாறு அழைக்கிறோம்.

முக்காடு இடுதலை பலவகையாக பிரிக்கலாம். அவற்றில் சிலவற்றை மட்டும் காண்போம்.

1.பார்த்தால் முக்காடு

இக்காட்சியை பெரும்பாலான இடங்களில் காணமுடியும். மாற்று மத நபர்களுடன் (ஆண்கள் உட்பட) பேசிக்கொண்டு இருப்பார்கள். முக்காடு இருக்காது. யாராவது ஒரு தாடியையோ, தொப்பியையோ, கைலியையோ அல்லது முஸ்லிம்களை பார்த்துவிட்டால் போதும். உடனே முக்காட்டை சரியாக இழுத்து போட்டுக் கொள்வார்கள். சகோதரிகளே! முக்காடு உங்களுக்கா!? மற்றவர்களுக்கா!? முக்காடு என்பது முஸ்லிம்களின் கண்களில் இருந்து பாதுகாக்க மட்டும் தானா!? மாற்று மத சகோதரர்களின் கண்களில் இருந்து பாதுகாக்க தேவை இல்லையா !!!

2.கிராமிய முக்காடு

முஸ்லிம் சகோதரிகள், உள்ளூரிலும், அண்டை வீடுகளுக்கும், ஊர்களுக்கும் செல்லும் போது முக்காடு இட்டு போவார்கள். கொஞ்சம் பெரிய நகரங்களுக்கு (திருச்சி, தஞ்சை, மதுரை, சென்னை) போகும் போது முக்காட்டுக்கு மூட்டை கட்டி விட்டு மற்ற இன பெண்களுள் கலந்துவிடுகிறார்கள். தங்களது அடையாளத்தை அறியாத அப்பாவிகள். ஏன்!? முக்காடு கிராமங்களுக்கு மட்டும் தானா!?

3.கிழடு கட்டை முக்காடு

இக்காட்சியை நகர் புறங்களில் காணலாம். முக்காடு அவசியம் தேவைப்படும் இளம் சகோதரிகள் அதை மறந்துவிட்டு (!) ‘ஹாயாக’ போய்க்கொண்டு இருப்பார்கள். முக்காடு அவசியம் தேவைப்படாத வயதான பெண்மணிகள் முக்காடு இட்டு செல்வார்கள். அதற்கு இளம் நங்கையர் சொல்லும் காரணம். முக்காடு எல்லாம் பத்தாம் பசலி தனம். அது எல்லாம் இக்காலத்துக்கு பொருந்தாது!

4.சீருடை முக்காடு (Uniform)

இது மார்க்க கல்வி, பள்ளிவாசல்கள், இறந்தவர்களின் வீடுகள் என செல்லும்போது மட்டும் பயன்படுத்துவார்கள். (குழந்தை பள்ளிக்கு செல்லும்போது மட்டும் அணியும் சீருடை போல) மற்ற நேரங்களில் அதை அப்படியே மாட்டி வைத்து விடுவார்கள். முக்காடும் சீருடையாகி விட்டதா!?


5.சவுதி முக்காடு

இவர்கள் சவூதி அல்லது மற்ற முஸ்லிம் நாடுகளில் வசிக்கும்போது அந்த நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு முக்காடிட்டு இருப்பார்கள். அவர்கள் அந்தந்த நாடுகளை விட்டு வெளிநாடுகளுக்கு செல்லும்போது அந்த பழக்கத்தை அங்கேயே விட்டு விட்டு வந்துவிடுவார்கள், ஏன்? மன்னர் போடும் சட்டங்களுக்கு அடிபணியும் சகோதரிகள் அந்த மன்னனை படைத்த அல்லாஹ்வின் கட்டளையை மீறுவது ஏனோ?

6.ஏர்போர்ட் முக்காடு

இது வெளிநாடு செல்லும் சகோதரிகளிடம் காணப்படுகிறது. சகோதரிகள் தங்களது சொந்த வீட்டை விட்டு (தமிழகத்தில்) புறப்படும் போது முக்காடு இட்டு ஏர்போர்ட் உள்ளே நுழையும் வரை போட்டு இருப்பார்கள் உள்ளே நுழைவதற்கு முன்பு முக்காட்டை அப்படியே கழற்றி வந்தவர்களிடம் கொடுத்து அனுப்பிவிடுவார்கள். மீண்டும் வெளிநாட்டில் இருந்து வரும் போது முக்காடு ஏர்போர்ட்டில் இருந்து தொடங்கும். வெளிநாட்டில் முக்காடு இட்டால் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். இது இவர்கள் சொல்லும் காரணம்.

இப்படி முக்காடு இடுதலை பலவகையாக காணலாம். முக்காடு போடும் பெரும்பாலான பெண்கள் (அனைவரும் அல்ல) தாங்கள் முக்காடு போடாவிட்டால் கிழடு, கட்டைகள் ஏதாவது சொல்வார்கள், நினைப்பார்கள் என ஒரு சமுதாய அங்கீகாரத்துக்காகவே போடுகிறார்கள், முக்காடு தங்களது தற்காப்புக்காகத்தான் என்பதை எத்தனை பேர் உணர்கிறார்கள். உண்மையில் பாலியியல் பலாத்காரத்திற்கு உட்பட்ட பெண்களில், முக்காடு இட்ட பெண்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. ஒளிவு மறைவு அற்ற சுதந்திரமாக வாழும் நாடுகளில் ஒழுக்க கேடுகளின் பட்டியலை எழுதினால் அது நீண்டு கொண்டே போகும்.

கல்யாணமில்லா குடும்பங்கள், தகப்பன் இல்லா குழந்தைகள், தகப்பன் பெயர் அல்லா முகமறியாத குழந்தைகள், பாசத்திற்கு அழும் குழந்தைகள், பிஞ்சிலே பழுத்த கிழங்கள், மணமாவதற்கு முன்பே குடும்ப உறவு காதல் பெயரில், முதியோர் இல்லங்கள் இப்படி எத்தனை எத்தனையோ…..

முக்காடு என்பது நம்மை தனிமைப்படுத்தவோ, அடையாளம் காட்டவோ அல்ல. தன்னுடைய பாதுகாப்புக்கு இறைவன் வழங்கியுள்ள சாதனம் என்பதை நாம் ஏன் உணர தவறிவிட்டோம்.!?

படித்த நமது சகோதரிகள் அடிமை தனம், ஆண் வர்க்கத்தின் ஆதிக்கம், பத்தாம் பசலித்தனம் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

நவ நாகரீகமான சுதந்திரமான அமெரிக்க குட்டை பாவாடையுடன் வாழ்ந்த ஒரு பெண் இஸ்லாத்தை தழுவிய பின்பு, முக்காட்டை பற்றி கூறிய கூற்று:- குட்டை பாவாடையுடன் சுதந்திரமாக சுற்றி வந்த போது கிடைக்காத சுதந்திரம் முக்காடு போட்ட பின்பு தான் கிடைத்தது என கூறுகிறார்.

“உயர்ந்த பொருளைத்தான் பாதுகாப்பாக வைத்திருப்போம். வைரத்தை தான் பட்டு துணியில் சுற்றிபாதுகாப்பாக வைப்பார்கள்.கற்களையோ ,கூலாங்கற்களையோ அல்ல. இஸ்லாத்தில் பெண்களுக்கு மிகுந்த சிறப்பான ஒரு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.அதை உணர்ந்து, நீங்கள் வைரம் என்றால் முக்காடு இடுங்கள். இல்லை..இல்லை… நாங்கள் கூலாங்கற்கள் என்றால்… சகோதரிகளே நீங்கள் வைரமா ??? கூலாங்கற்களா !!!! “


பெண்ணே, முக்காடு என்பது உனக்காக, உன் பாதுகாப்புக்காக என்பதை நீ உணராத போது நீ ஏன் பிறருக்காக முக்காடு போடுகிறாய். அது உனக்கு அல்லாஹ் வழங்கியுள்ள கொடை என்று நீ அறியாத வரை அதை போடாதே என சொல்ல எனக்கு உரிமை இல்லை. ஆனால் உணர்ந்து போடு என்று கூறத்தான் ஆசைப்படுகிறேன்.

இன்றைய பெண்களின் முக்காடு!

Monday, 6 June 2011

ஆதி மனிதரின் தோற்றம்!

ஆதிமனிதத் தோற்றம் மத்திய கிழக்குப் பகுதியில் (இன்றைய சவூதி, பாலஸ்தீனம்) தான் அமைந்துள்ளது என அண்மையில் வெளிவந்துள்ள ஆய்வு முடிவு ஆழமான சிந்தனைக்குரியதாகும்.

ஆதிமனிதர்கள் ஆப்பிரிக்காவில் தோன்றினர், என்றும், அங்கிருந்து புலம் பெயர்ந்து பல நாடுகளுக்கும் பரவினர் என்றும் இதுவரை கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்போது வெளிவந்துள்ள புதிய ஆய்வு ஆதி மனிதத் தோற்றம் மத்திய கிழக்கில் தான் ஏற்பட்டுள்ளது என்பதற்கு பல ஆதாரங்களைத் தருகிறது. மனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி இதுவரை இருந்து வந்த கருத்துகள் தொல்லியவாளர்களின் கருதுகோள்கள் யாவற்றையும் இந்த புதிய ஆய்வு மாற்றியுள்ளதாக, மானுடவியல் துறை அறிஞர்கள் கூறுகின்றனர்.

டெல்அவிவ் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆதிமனிதத் தோற்றம் குறித்த ஆய்வுக்கு அறிஞர்கள் அவி கோஃபர் மற்றும் நான்பர்காய் ஆகியோர் தலைமையேற்றனர். இந்தக் குழுவினர் இஸ்ரேலின் பென்குரியன் விமான நிலையத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள ரோஷ்ஹா அய்ன் என்ற இடத்திற்கு அருகில் உள்ள ‘கெசம்’ குகையில் இன்றைய மனிதப்பற்களின் அமைப்போடு மிகவும் பொருந்திப்போகிற, 8 மனிதப் பற்களைக் கண்டு பிடித்துள்ளனர். இப்பற்களின் வயதை ஆய்வு செய்தபோது, இவை நானூறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை எனத் தெரியவந்துள்ளது.

ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட ஆதிமனிதத் தோற்றத்திற்கான ஆதாரங்கள் இருநூறாயிரம் ஆண்டுகள் பழமை கொண்டவை. மத்திய கிழக்கில் கிடைத்துள்ள ஆதிமனித ஆதாரங்களோ நானூறாயிரம் ஆண்டுகள் தொன்மையானவை. இவை மத்திய பெலிஸ்டோசின் என்ற காலத்தைச் சேர்ந்தவை எனக் கருதப்படுகின்றன.

ஆப்பிரிக்காவில் தோன்றிய ஆதிமனிதர்கள் 70ஆயிரத்திலிருந்து 50ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வடபகுதி, மத்தியகிழக்கு, ஐரோப்பா உள்ளிட்ட இடங்களுக்கு இடம்பெயர்ந்ததாக இதுவரைக் கூறப்பட்டது.

ஆப்பிரிக்காவிலிருந்து, ஆஸ்திரேலியாவுக்கு, கடலோரப் பாதைகளைப் பயன்படுத்தி ஆதிமனிதர்கள் செய்த இடப்பெயர்ச்சி குறித்து, டாக்டர் ஸ்பென்சர் வெல்ஸ் என்பவர் தி ஜர்னி ஆஃப்தமென், (The Journey of the men) என்ற ஆவணப் படத்தைத் தயாரித்தார்.

இது ’நேஷனல்ஜாக்ரபிக்’ தொலைக்காட்சியில் பலமுறை ஒளிபரப்பானது.

ஆப்பிரிக்காவிலிருந்து, ஆஸ்திரரேலியாவுக்கு இடம்பெயரும்போது, இடையிடையே மனிதக் கூட்டங்கள் தங்கிவருவதும், பிறகு பல்கிப் பெருகுவதும், அவ்வாறு பயணித்தவர்களின் மரபணுக்களிடையே ஒற்றுமை இருந்ததையும், டாக்டர் ஸ்பென்சர் வெல்ஸ் வெளிப்படுத்தினார்.

இந்தப் பயண மார்க்கத்தில், தமிழகத்தின் மதுரையும் அமைந்திருந்தது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை ஒரு கடலோர நகரம் என்ற செய்தி ஆச்சரியம் தான். இமயமலையே கடல் இருந்த இடம் என்பதற்கானத் தடங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இமயமலையின் உச்சியில், கடல்தாவரங்களின் படிவுகள் கிடைத்துள்ளன. இறைவனின் படைப்பில் இப்படி ஏராள ஆச்சரியங்கள் உண்டு.

மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் ஏராளமானவர்களின் மரபணுக்களை ஆய்வு செய்த டாக்டர் ஸ்பென்சர் வெல்ஸ், அலங்காநல்லூரைச் சேர்ந்த விருமாண்டி என்பவருக்கு ஆப்பிரிக்க ஆதி மனிதக் கூட்டத்தின் மரபணு தொடர்ச்சி இருப்பதைக் கண்டறிந்தார்.

ஆப்பிரிக்காவிலிருந்து, ஆஸ்திரேலியாவுக்கு 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதக் கூட்டம் பயணித்திருக்கலாம். ஆனால் ஆதி மனிதத் தோற்றம் ஆப்பிரிக்காவில் தான் நிகழ்ந்தது என்பதற்கு எதிரான பல ஆதாரங்களை இன்றைய ஆய்வுகள் வெளிக்கொணர்கின்றன. மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று கூறும் குறைமதியாளர்கள் ஆப்பிரிக்காவின் கடும் வெப்பம், வேறுநிலையில் இருந்து மனித நிலைக்கு வர உதவியதாகச் செல்வதுண்டு.

எனவேதான், ஆப்பிரிக்காவில் தான் மனிதத் தோற்றம் நிகழ்ந்திருக்க முடியும் என்று கூறினர். சமீபகால ஆய்வுகளில் ஸ்பெயினிலும், சீனாவிலும் கிடைத்த ஆதாரங்கள், ஆப்பிரிக்காவில் ஆதி மனிதன் தோன்றியதைக் கேள்விக் குள்ளாக்கின.

மத்திய கிழக்கில் கண்டுபிடிக்கப்பட்டு நானூறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகக் கருதப்படும் மனிதப் பற்கள் தான் இன்றைய மனிதப் பற்களோடு அமைப்பால் பொருந்தி இருப்பதை ‘அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பிசிக்கல் ஆந்த்ரோ போலஜி, என்ற ஆய்வுப் பத்திரிகை கட்டுரையாக வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கின் ஆதி மனிதர்கள் நெருப்பைப் பயன்படுத்த வேட்டையாடவும், சுரங்கம் தோண்டவும், அறிந்திருந்ததாகக் கூறும் ஆய்வாளர் குழு, சிறப்பான சமூக வாழ்வை ஆதி மனிதர்கள் வாழ்ந்ததற்கும் ஆதாரங்களை அளித்துள்ளது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர்சர் பால் மெல்லர்ஸ் உள்ளிட்ட மானுடவியல் நிபுணர்கள், மத்திய கிழக்கில் ஆதிமனிதத் தோற்றம் நிகழ்ந்ததாகக் கூறும் ஆய்வு முடிவை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

உறுதிபடுத்தப்படும் இஸ்லாமியச் செய்திகள்

நம் ஆதிபிதா ஆதம்(அலை) அவர்களும் அன்னை ஹவ்வா (அலை) அவர்களும், சுவர்க்கத்தில், ஷைத்தானின் தூண்டுதலால், விலக்கப்பட்டக் கனியைப் புசித்தனர், அதனால், பூமியின் இருவேறு பகுதியில் இறக்கப்பட்டனர்.

தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆதம், ஆதம் தந்தையார் (ஆந்தையார்), சேது(ஷீது) அவ்வா, (அவ்வை) ஆகிய சொற்கள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. இலங்கையில் ஆதம் மலை என்ற மலை உள்ளது. அவர்களின் மகனார் ஷீது பேரில் அமைந்த கால்வாய் தான் சேதுக்கால்வாய் என்றும் சொல்வர்.

“பஃருளி ஆற்று பன்மலை அடுக்கத்து

குமரிக்கோரும் கொடுங்கடல் கொள்ள”

என்ற வரிகள் மூலம், தமிழக மற்றும் இலங்கையை ஒட்டிய ஒரு பெரும் நிலப்பரப்பு, கடலில் மூழ்கிவிட்டதை அறிய முடிகிறது. ஆயினும், ஆதம் என்ற பெயர் தமிழில் தொன்று தொட்டு வழங்கி வருவது, ஆதிபிதா ஆதம் என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஹவ்வா(அலை) அவர்கள் இன்றைய சவூதியின் ஜித்தா பகுதியில் இறக்கப்பட்டார்கள் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஜித்தா என்ற சொல்லுக்கே பாட்டி என்று அரபியில் பொருளாகும். ஆதம், ஹவ்வா இருவரும், பூமிக்கு வந்த பிறகு முதலில் சந்தித்து, அறிமுகமாகிய இடம் தான் அரஃபா பெருவெளி என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர். அரஃபா என்றால் அறிமுக மாதம் என்று பொருள்படும்.

இப்போதும், ஆதிபிதா, ஆதி அன்னையின் வழித்தோன்றல்கள் அரஃபாவில் ஹஜ்ஜின்போது சந்திப்பது சிந்தனைக்குரியது. பூமிக்கு இறக்கப்பட்ட ஆதி பிதா ஆதம், ஹவ்வா, இன்றைய மத்திய கிழக்கில் மறு அறிமுகமாகி, சந்ததிகளை ஈன்று, அவர்களிலிருந்து மனிதகுலம் பல்கிப் பெருகி இருப்பதற்கான ஆதாரமாகவே ஆதிமனிதத் தோற்றம், மத்திய கிழக்கில் அமைந்தது என்ற ஆய்வு முடிவை எடுத்துக் கொள்ளலாம்.

‘மனித குலத்தை ஓர் ஆண், பெண்ணிலிருந்தே படைத்ததாகத் திருக்குர்ஆனின் பல இடங்களில் இறைவன் கூறுகிறான். (4:1,,,,,,,,,,)

அது எதிர்காலத்தில் மிகத் துல்லியமாக அறிவியல் மூலம் நிறுவப்படும் என்பதில் அய்யமில்லை. எடுத்துக்காட்டாக, தந்தை இல்லாமல், உடல் ரீதியாகத் தொடர்பு ஏற்படாமல் ஈஸா (அலை) பிறந்ததாக திருக்குர்ஆன் கூறியபோது அறிவியல்படி அது முடியாதே என அன்று விமர்சித்தார்கள்.

‘க்ளோனிங்’ கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, தந்தையின்றி பிறப்பது மிகச் சாதாரண உண்மையாகிவிட்டது. அறிவியலின் மிக வேகமான வள்ர்ச்சியால், பல மதங்களில் கூறப்பட்ட செய்திகள் காலாவதியாகி வருகின்றன. பூமி தட்டை வடிவம் என்ற பைபளின் கூற்று ஓர் உதாரணம். ஆனால் இஸ்லாமியக் கருத்துக்களை, நாளுக்கு நாள் வளரும் நவீன அறிவியல் மெய்ப்பித்து வருவதுதான் நாம் அறிந்து ஆய்வு செய்ய வேண்டிய செய்தியாகும்.

பெயரளவில்...நானும் ஒரு முஸ்லிமே...


நான் சரியான இஸ்லாமிய அடிப்படையில் வாழ்கிறேனோ இல்லையோ,இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

மார்க்க சம்பந்தமான அறிவு எனக்கு இருக்கிறதோ இல்லையோ,இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

என் மனைவி – மக்கள், குடும்பத்தினருக்கு நான் இஸ்லாத்தைப் பற்றி கூறி நல்வழிப் படுத்துகிறேனோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

எனது இல்லத்தில் இஸ்லாத்திற்கு மாறான செயல்கள் நடப்பதைக் கண்டும் காணாமல் இருந்து விடுகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!  

மறுமை நாளைக்காக நான் எதை சேர்த்து வைத்திருக்கிறேன் என்று எண்ணிப் பார்க்க இந்த அவசர கால உலகத்தில் எங்கே முடிகிறதுஇருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

ஐந்து வேளைத் தொழுவது கடமை என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் வேலைப் பளுவினால் என்னால் தொழமுடியவில்லை,இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

ரமலானில் நோன்பு வைப்பது கட்டாயம் என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும். இருப்பினும் பசி தாகம் சமாளிக்க.. நோன்பு வைக்க என்னால் முடியவில்லை, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 
 
என் தொழிலில் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. எனினும் கணக்குப் பார்த்து ஜகாத் கொடுத்திட மனம் இடம் தரவில்லை,இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

என் வாழ்நாள் முழுவதும் ஓடி ஓடி உழைத்து ஓரளவு என் குடும்பத்திற்காக உழைத்து சேர்த்து ஓய்ந்து விட்டேன். இப்போது ஹஜ் செல்லும் அளவுக்கு என் உடலில் தெம்பு இல்லை இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 


உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவி கோருகிறோம்! என்று தொழுகையில் ஓதிவிட்டு அவ்லியாக்கள், பெரியார்களிடம் உதவி தேடுவது என் இரத்தத்தில் ஊறிப்போய்விட்டது, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 


பால்கிதாப்-பில்லி-சூனியம்-ஏவல்-தகடு-தட்டு-தாயத்து-பேய்-பிசாசு-ஆவி எல்லாம் நம்புகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

புனை குறுக்கே செலவது, பல்லி தலையிலே விழுவது, ஆந்தை அலருவது, காகம் கரைவது, ஸஃபர் பீடை மாதம்-கெட்ட சகுனம் என எல்லாம் பார்த்து பார்த்து ஒவ்வொரு வேலையும் செய்கிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

பலர் பாராட்ட கத்னா-பூப்புனித நீராட்டு விழாவை விமரிசையாக நான் நடத்துகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

புதுமனை புகுவிழாவிற்கு பால் காய்ச்சி விழா நடத்துகிறேன். குழந்தைக்கு தர்காவில் சென்று முடி இறக்கி மொட்டை போடுகிறேன். அவ்லியா சன்னிதானத்தில் ஆடு, சேவல் பலி தருகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

என் அம்மாவின் கடைசி ஆசைக்காகத்தான் மஹர் கொடுத்து மணம் புரியாமல் வரதட்சணை வாங்கிக் கொண்டு திருமணம் செய்தேன். என் மனைவியின் ஆசைக்காகத்தான் சுன்னத்தான தாடியை சிரைத்துவிட்டேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

என் தந்தையின் வற்புறுத்தலால் என் மகன் திருமணத்தை மேள தாளத்துடன் யானை ஊர்வலத்துடன் மிக ஆடம்பரத்துடன் நடத்துகிறேன்,இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

வட்டி வாங்கக்கூடாது என்று வான் மறைக்கூறினாலும் கூட என் தொழில் வளர்ச்சிக்காக குறைந்த வட்டியில் வீடுகட்ட, கடை ஆரம்பிக்க, பைக் சவாரிக்காக வட்டி வாங்க வேண்டிய நிர்பந்தம். என்ன செய்வது?இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

லாட்டரி சூதாட்டம்தான். அரசு அதனை தடை செய்திருந்தாலும் என்ன? நான் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை வாங்கி மறைத்து விற்பனை செய்து வருகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

குடி குடியைக் கெடுக்கும்! மது ஹராம்தான், ஆனால் எனக்கு டாஸ்மார்க் கம்பெனியில்தான் வேலை கிடைத்தது. கைநிரைய சம்பாதிக்கிறேன்,இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

சினிமா பார்க்கக் கூடாதாம்! இந்த காலத்தில் நடக்கக்கூடிய காரியமா என்ன? பேரும் புகழும் பேரின்பமும் பெற்றுத் தரும் கனவுத் தொழிற்சாலையல்லவா அது! பாம்பு மட்டும்தான் படம் எடுக்குமா? மக்கள் பாராட்டும் விதமாக நான் கூட படம் எடுக்கிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

அளவு நிலுவையில் மோசடி கூடாதாம். வியாபாரத்தில் பொய் கூடாதாம். (பரக்கத்) இறையருள் கிடைக்காதாம். பொய் சொல்லாமல், மோசடி செய்யாமல் எப்படி விரைவில் பணக்காரன் ஆவதாம்? இருந்தாலும்...நான் ஒரு முஸ்லிம்! 

ஒரு சாண் நிலம் ஆக்கிரமிப்பு செய்தாலும் மறுமையில் ஒரு பூமி அளவு நிலத்தை நான் சுமக்க வேண்டுமாம். பலரின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த, அந்த நிலத்தை திரும்பக் கொடுத்து விட்டு என் பிள்ளைகளுக்கு எதைக் கொடுத்துவிட்டுப் போவதாம்? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கூடாதாம். பிறகு எதற்கு உலகத்தில் வாழ்வதாம்? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 


கடவுள், பாவம், புண்ணியம், நீதி, நியாயம், உண்மை என்கிறவற்றில் நம்பிக்கை கிடையாது. ஏதோ உலகத்திலே பிறந்துட்டோம். முளைக்கிற செடி வளர்ந்து மரமாகிற மாதிரி நாமும் வளர்ந்துட்டோம். ஏதோ வாழந்துட்டு இருக்கிறோம். ஊரோடு இணைந்து போகத்தானே வேண்டும். இஸ்லாமிய அடிச்சுவட்டில் இக்காலத்தில் வாழ்ந்தால் உலகம் நகைக்காதா? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 


ரேசன் கார்டிலும், வாக்காளர் அட்டையிலும், பள்ளி கல்லூரி சான்றிதழ்களிலும் மட்டுமே முஸ்லிமாக வாழ்பவர்களே! சிந்தியுங்கள். நமது வாழ்வும். மரணமும் தூய இஸ்லாத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்திட வேண்டும் என்பதை உள்ளத்தில் பதித்துக் கொள்ளுங்கள்.

Sunday, 5 June 2011

நபியின் அறிவுரை..

ஆடை விஷயத்திலும் ஆண் தொப்புளுக்கும், முழங்காலுக்கும் இடையில் உள்ள பகுதியையும், பெண் முகத்தையும், இரண்டு மணிக்கட்டுகள் வரையுள்ள கைகள் பகுதியையும் தவிர்த்து மற்ற அனைத்தையும் மறைக்க வேண்டும் என்கிறது இஸ்லாம். இன்றைய உலகில் யார் அதிகம் மறைக்க வேண்டுமோ அவர்கள் தான் அதிகம் திறந்து காட்டுவதோடு நில்லாமல், அதுதான் நாகரீகம் என்றும் துணிந்து கூறுகின்றார்கள். அந்நியப் பெண்களைத் தொடுவது கை செய்யும் விபச்சாரமாகும்.'' (ஆதாரம்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, முஸ்லிம்.) மனிதன் எவ்வளவுதான் பாதுகாப்பாக இருந்தாலும் சுற்றுப்புற சூழ்நிலைகள் அவனை விபச்சாரத்தின் பக்கம் இட்டுச் செல்லக்கூடியதாக அமைந்து விடும் என்பதைக் கருத்தில் கொண்டு கீழ்வரும் பல சட்டங்களையும் கூறுகின்றது. (அந்நியப் பெண்களை) கண்ணால் (தீய இச்கையுடன்) பார்ப்பதும் விபச்சாரமாகும்.'' (ஆதாரம்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி.) ''பெண்களே! நளினமாகப் பேசாதீர்கள். அது ஆண்களின் மனதில் கிறுகிறுப்பை ஏற்படுத்தக் கூடும். பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத் தில் நோய் இருக்கிறதோ அவன் மோகம் கொள்வான்.'' (அல்குர்ஆன் :33:32) ''சலங்கை ஒலி ஏற்படுத்திக் கொண்டு பெண்கள் செல்லக் கூடாது தாங்கள் மறைத்து வைத்துள்ள அலங்காரத்தை வெளிப்படுத்திக் காட்டுவதற்காக தங்கள் கால்களைத் தட்டி நடக்க வேண்டாம்.'' (அல்குர்ஆன் 24:30) ''நறுமணம் பூசிக்கொண்டு ஓர் கூட்டத்தின் பக்கம் செல்பவள் அப்படி உள்ளவளே, (ஒரு வகையில்) விபச்சாரியே!'' (ஆதாரம்: அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி.) ''கணவன் இல்லாத நிலையில் உள்ள பெண்களிடம் (தனிமையில்) செல்லாதீர்கள்.'' (ஆதாரம்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி.) அபூஉமாமா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள். ஒரு வாலிபர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! எனக்கு விபச்சாரம் செய்வதற்கு அனுமதியளியுஙகள் என்றார். அப்போது (அங்குள்ள) மக்கள் அவரை விரட்ட ஆரம்பித்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரை விட்டுவிடுங்கள்! என்று கூறிவிட்டு, அவரை தன் பக்கத்தில் அழைத்தார்கள். அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பக்கத்தில் வந்து அமர்ந்தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரை நோக்கி, அதை உமது தாயிடம் செய்ய நீர் விரும்புகிறீரா? என்றார்கள். அப்போது அவர் அல்லாஹ் என்னை தங்களுக்கு அர்ப்பணமாக்குவானாக (அவ்வாறு நான் பெற்ற தாயிடம் ஒருபோதும் நடக்க) விரும்பமாட்டேன் என்றார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த மனிதரும் தமது தாயிடம் இவ்வாறு நடந்து கொள்ள விரும்பவே மாட்டார்கள் என்றார்கள். அப்படி என்றால் அதை உனது மகளிடம் செய்ய நீர் விரும்புகிறீரா? அல்லது உமது சகோதரியிடம் சின்னம்மா-பெரியம்மாவிடம் செய்ய விரும்புகிறீரா என்றார்கள். அதற்கு அவர் அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணம் செய்வானாக! அல்லாஹ்மீது ஆணையாக நான் அதை செய்ய விரும்ப மாட்டேன் என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இவ்வாறு எந்த மனிதனும் செய்ய விரும்பமாட்டான் என்று கூறிவிட்டு, தமது கையை அவர் மீது வைத்து யா அல்லாஹ் இவர் பாவத்தை மன்னித்தருள்! இவரது உள்ளத்தை தூய்மையாக்கு! மேலும் இவரது அபத்தை பாதுகாப்பு செய்! என்றார்கள். அதன் பின்னர் அந்த வாலிபர் ஏற்கனவே இருந்தது போன்றில்லாது, எந்த பக்கமும் தீய சிந்தனை அற்றவராகிவிட்டார். (நூல்: அஹ்மத்) எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டும்) விரும்பினால், அவர்கள் செயலுக்குரிய பலனை இவ்வுலகத்திலேயே நாம் முழுமையாகக் கொடுத்து விடுவோம். அதில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள்''. (11:1

Wednesday, 1 June 2011

ஏன் அல்லாஹ் எல்லா மனிதர்களுக்கு ஒரே மார்க்கத்தை தரவில்லை...?

இந்த நவீன, நாகரிக உலகத்தில் மனிதனுக்கு அல்லாஹ்வின் கட்டளை, சட்டங்கள் அவனின் குணாதிசயங்கள் பற்றி இந்த சந்தேகங்கள் வருவதற்கு சாத்தியம் இல்லாவிட்டாலும்,சராசரி பாமர மக்களுக்கு இவ்வித சந்தேகங்களுக்கு,சரியான பதில்கள் கொடுக்க வேண்டியது அறிந்த ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் கடமையாகிவிட்டபடியால், சில சந்தேகங்களும் அதற்கு அல்குர்ஆன் அடிப்படையில் விடைகளும் கீழே தரப்படுகின்றது.
மனிதன் கேட்கிறான், "இந்த அடையாளங்கள், பிரபஞ்சங்கள், வானம், பூமி, இதனுள் உள்ள உயிரினங்கள் இவை எல்லாம் படைத்தவன் அல்லாஹ் என்கிறீர்கள்? சரி! உலகத்தை எடுத்துக் கொள்வோம், இங்கு, எல்லா உயிரினங்களையும் படைத்து, அதற்குரிய உணவு வகைகளையும் படைத்து குறிப்பாக மனிதனையும், அவனுக்கு வேண்டிய அறிவையும் தந்து, எல்லாப் படைப்புகளையும் விட அவனுக்கு பெரிய அந்தஸ்தையும் தந்து வாழவைத்தான், இருந்தும் ஏன் அல்லாஹ் எல்லா மனிதர்களுக்கு ஒரே மார்க்கத்தை தரவில்லை...? ஏன் சிலரை மேலானவர்களாகவும், பலரை கீழானவர்கலாகவும், நடமாடவிடவேண்டும்?
சிலர் பிறப்பால் சரியான மார்க்கம் உள்ள தாய் தந்தையிடம் தோன்றி அதில் திளைகின்றார்கள், சிலர் அறிவே இல்லாத மக்களிடம் பிறக்கின்றார்கள். முன்னர், காட்டியவர் நேரான மார்க்கத்தில் வருவதால் அது அவரின் பங்கா?... அன்றி அவரின் பிறப்பால் வந்த பயனா? பின்னே கூறியவர் அறிவில்லாத கூட்டத்தில் பிறந்தால் அது அவரின் பங்கா?..அன்றி அவரின் பிறப்பால் வந்த தீமையா? மேலும் உண்மையான மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவரை விட நிராகரிப்பவர்களும் இணைவைப்பவர்களும் நல்ல நிலைமைகளில் உள்ளார்களே... சிலருக்கு அன்றுட வயிற்றுப்பாட்டை கவனிக்கவோ நேரமில்லாத போடு...இறைவனை நினைக்க, சிந்தனை செய்ய எப்படி நேரம் வரும்?
ஆக,, இப்படி ஏழ்மையில், உள்ளவர்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கியது யார் செயல்? மனிதனின் அவன் பிறப்பதற்கு முன் முதல் அவன் இறக்கும் வரை மேலும், இறந்த பின்னும் அவனுக்கு நரகமா அன்றி சுவனமா?... என்பது வரை இறைவன் அவனுடைய பதிவு புத்தகத்தில் (லவ்ஹுல் மக்பூல்) எழுதிவைத்துவிட்டான் என்கிறானே அப்படி என்றால் ஏன் மனிதன் செய்யும் செயல்களுக்கு அல்லாஹ் கேள்வி கேட்க வேண்டும்? படைக்கப்பட்ட ஜீவராசிகளுக்கு உணவளிப்பது தனக்கு கடமை என்று இறைவன் கூறுகின்றான் அப்படியானால் உலகில் சில இடங்களில் பட்னி சாவு ஏற்படுகின்றதே ஏன்? ஆக, இத்தகைய கேள்விகளுக்கு சரியான பதிலை வேண்டுகிறோம்!"
மேற்கண்டவை மனிதனின் மனம் கேட்கும் கேள்வி, இதற்குரிய பதில்கள்... அல்குர்ஆனின் அடிப்படையில் தரப்படுகின்றது.
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்,
"அவன்தான் (பூமியையும்) பூமியிலுள்ள யாவற்றையும் உங்களுக்காகப் படைத்தான்,மேலும்,அவன் வானத்தைப் படைக்கக்கருதி (ய போது) அவைகளை ஏழு வானங்களாகவும்,அமைத்தான்.அன்றி, (அவற்றிலுள்ள) யாவற்றையும் அவன் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்." (அல்குர்ஆன் 2:29
அல்லாஹ் ,நீங்கள் கேள்வியில் கூறியபடியே தனது திருமறையிலும் கூறுகின்றான்....உங்களின் கேள்வியின் சாராம்சம், ஏன் எல்ல மனிதர்களையும் ஒரே மார்க்கத்தில் நிலை நிறுத்தவில்லை என்பது...
அல்லாஹ் ஆரம்பத்தில் மனிதனை படைக்க எண்ணிய போது ...
திருமறை கூறுகின்றது...
"(நபியே!) உமதிறைவன் மலக்குகளை நோக்கி, "நான் பூமியில் (என்னுடைய) பிரதிநிதி (-ஆதமை) நிச்சயமாக அமைக்கப் போகிறேன், ""எனக்கூறிய சமையத்தில் (அதற்கு) அவர்கள், "(பூமியில்) அழிம்பு செய்து இரத்தம் சிந்தக் கூடிய ( சந்ததிகளைப் பெரும்) அவரை, அதில் (உன்னுடைய பிரதிநிதியாக) ஆக்குகிறாயா? நாங்களோ, உன்னுடைய பரிசுத்தத் தன்மையைக் கூறி உன்னுடைய புகழைக் கொண்டு உன்னைத் துதிசெய்து கொண்டிருக்கிறோம்," என்று கூறினார்கள்.(அதற்க்கு இறைவன்) "நீங்கள் அறியாதவர்ரைஎல்லாம் நிச்சயமாக நான் நன்கறிவேன்" என கூறி விட்டான். (அல்குர்ஆன் 2:30)
ஆக, மேற்கண்ட ஆயத்தின் வசனக் கூற்றுப்படி, மனிதன் அழிம்பு செய்யக்கூடியவன், இரத்தம் சிந்தக் கூடியவன், வழிதவற கூடியவன் என்பதை மலக்குகள் அறிந்திருப்பதால்தான், அல்லாஹ் மனிதனை படைக்க எண்ணி அதுப்பற்றி மலக்குகளிடம் கூறும்போது அவர்கள் மேற்கண்ட வாறு இறைவநிதம் கேட்கின்ரனை... ஆகவே மனிதனை இறைவன் படைத்து அறிவைக் கொடித்த்தாலும், எல்லோரும் ஒரே மார்க்கத்தை பெறக் கூடிய சூழ்நிலை இல்லாமலேயே இறைவன் வைத்துள்ளான்....
மேலும், இறைவன் ஆதமை படைத்து அவரின் ஜோடியான ஹவ்வாவைப் படைத்து இருவரையும் சுவனத்தில் தாமதப்படுத்தி, அவர்களுக்கு நல்வாழ்வு கொடுத்தபோது, இப்லீஸ் சூழ்ச்சி செய்து அவ்விருவரையும் கெடுத்து வழிதவற வைத்துவிட்டான்... அதனால் அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்குள்ளாகி சுவனத்திலிருந்து இறக்கிவிடப்பட்டனர். பிறகு இறைவனிடத்தில் சில சொற்களைக் கற்று அவனின் மன்னிப்பையும் பெற்றனர், இதிலிருந்து என்ன தெரிகின்றது முதல் மனிதர் ஆதம் ஹவ்வாவே, வழித்தவறி இருக்கும்போது, இறைவனின் நேரிடை உபதேசத்தைக் கேட்டவர்களே வழிதவறி இருக்கும்போது இப்போதுள்ள மக்கள் அன்றி தொடரும் மக்கள் வழித்தவறுவது மிகவும் ஆச்சர்யம் அல்ல..
மேலும் அல்லாஹ் கூறுகிறான்,
ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோரை (அவர்கள் இன்பமுடன் வசித்து வந்த ) சோலையிலிருந்து வெளியேறி (துன்பத்திற்குள்ளாகி)ய பிரகாரம், உங்களையும் துன்பத்திற்குள்ளாகி விட வேண்டாம். அவர்களுடைய மானத்தை அவர்களுக்கு காண்பிக்கும் பொருட்டு, அவன் அவர்களுடைய ஆடைகளை களைந்து விட்டான். நிச்சயமாக அவனும் அவனுடைய இனத்தாரும் நீங்கள் அவர்களைக் காணமுடியாதவாறு (மறைவாக இருந்து கொண்டு) உங்களை (வழிகெடுக்க சமயம்) பார்த்து கொண்டிருக்கின்றார்கள். நிச்சயமாக விசுவாசம் கொள்ளாதவர்களுக்குத் தான் ,அந்த ஷைத்தான்களை நாம் நண்பர்கலாக்குகின்றோம். (அல்குர்ஆன் 7:27)
மனிதர்களுக்கு ,இந்த உலகத்தில் ஷைத்தானின் பின் சென்று வழிகெட்டுவிடாமல் இருக்கும்படி தன் அருள்மறையில் இறைவன் பல இடங்களில் எச்சரிக்கை செய்கின்றான் இருந்தாலும் மக்கள் வீண் சந்தேகங்களுக்கு உள்ளாகி அவர்களில் பெரும்பாலோர் வழி தவறிவிடுகின்றனர்.ஆகவே,இறைவன் மனிதனை முதன் முதலில் தன் மார்க்கத்திலேயே உள்ளாகி பிறப்பிக்க வைத்தாலும் நாலாம் வட்டத்தில் அவர்கள் பல்கி, பெருகி பல பாகங்களிலும் பரவும் போது ...அவர்களின் எண்ணங்கள் பலவாறுக பெருகி,முன் கண்ட உண்மைகள் மறந்து பொய் வீண் சந்தேகங்களுக்கு உள்ளாகி பல பிரிவுகளாக பிரிந்து விடுகின்றனர்.
(ஆரம்பத்தில்) மனிதர்கள் (அனைவரும்)ஒரே சமுதாயத்தவரகவே இருந்தனர். (அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு,நான்மை மனித)சமுதாயம் கூறும்படியும் (தீமை செய்வோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்படியும் அல்லாஹ், நபிமார்களை அனுப்பி வைத்தான், தவிர, அம்மனிதருக்குள் விகற்பங்களைத் தீர்த்து வைக்கும் பொருட்டு, அவர்களோடு சத்திய வேதத்தையும் அருட்செய்தான்.இவ்வாறு தெளிவான அத்தாட்சிகள் (உள்ள வேதம்)வந்ததன் பின்னர், அதனைப் பெற்றுக் கொண்ட அவர்கள், தங்களுக்குள் ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே, (அந்த சத்திய வேதத்திற்கு)மாறு (செய்ய முற்)பட்டனர். ஆயினும், அவர்கள் மாறுபட்டு புறக்கணித்து விட்ட அந்த சத்தியதளவில் செல்லும்படி விசுவாசிகளுக்கு,அல்லாஹ் தன் அருளைக் கொண்டு (நேர்) வழிகாட்டினான். இன்னும் (இவ்வாறே)டான் விரும்பியவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறான். (அல்குர்ஆன் 2:213)
ஆக மனித சமுதாயம் நாளடைவில் தானாகவே பிரிந்து விட்டனர். இறைவன் ஒரே மார்க்கத்தில் அவர்களை படைத்தாலும் ஷைத்தான் சூழ்ச்சியால் பிரிக்கப்பட்டுவிட்டனர்.இன்றைய உலகில் ஒருவர் கூறிய கருத்துக்களை விட்டு அதையே பேசி பல பிரிவுகளாக பிரிந்து நிற்கும் கட்சிகளை காண்கிறோம்... கம்யூனிஸம், இம்பிரியலிஸம் நாடு நிலைமை எனக் கூறிக் கொண்டு, அந்தந்த பிரிவில் உள்ளவர்களே பல பிரிவுகளாக பிரிந்து வாதிப்பதை கண்கூடாக காணுகின்றோம்.

Sunday, 29 May 2011

இரவில் தஹஜ்ஜுத் தொழுவீராக

அல்லாஹ் கூறினான்: 'இரவில் நீர் தஹஜ்ஜுத் தொழுவீராக!' (திருக்குர்ஆன் 17:79)

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழுந்ததும் 'இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி அவற்றிலுள்ளவை அனைத்தையும் நிர்வம்ப்பவன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி அவற்றிலுள்ளவற்றின் உரிமை உனக்கே உரியது. உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒளி நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமிக்கு அரசன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். நீ உண்மையாளன். உன் வாக்குறுதி உண்மை. உன்னுடைய சந்திப்பு உண்மை. உன்னுடைய கூற்று உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. நபிமார்கள் உண்மையாளர்கள். முஹம்மது உண்மையாளர். மறுமை நாள் உண்மை. இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன்னையே நம்பினேன். உன்மீது உறுதியான நம்பிக்கை வைத்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன். உன்னிடமே நீதி கேட்பேன். எனவே நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பம்ரங்கமாகச் செய்த பாவங்களை மன்னித்துவிடு. நீயே (சிலரை) முற்படுத்துபவன், (சிலரை) பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. உன்னுடைய உதவியின்றி நமை செய்யும் ஆற்றலோ தீமையிலிருந்து விடுபடும் ஆற்றலோ இல்லை' என்று கூறிவார்கள்.
புஹாரி :1120