Monday, 6 June 2011

இனிது...இனிது...



றியாமை இனிது 
அனைத்தும் அறிந்த 
அறிவை அறிவெனத்
தேரா மாந்தர் முன் 
அறியாமை இனிது...!

பேசாமை இனிது 
பேசியும் 
சாமான்யன் பேச்சு என்பதால் 
பேதம் காட்டும்
மனிதர்கள் முன்னே 
பேசாமை இனிது...!

செல்லாமை இனிது 
சென்றால் 
பேச்சால், செயலால்
காமத்தை சீண்டிப் பார்க்கும் 
பித்தர் முன்னே 
வேலைக்குக்  கூட
செல்லாமை இனிது ...!

ழுதாமை இனிது 
எழுத்தினால் 
சாதிக்க பல இருந்தும் 
சாமான்யன் எழுத்து 
என்பதினால் 'பூ' என ஒதுக்கும்
வல்லோர் முன்னே 
எழுதாமை இனிது...!

No comments:

Post a Comment