Wednesday, 22 June 2011

நான் ஒரு இஸ்லாமிய மதத்தைச் சேரந்தவன் என்ற ரீதியில் சுவாமி நித்யானந்தா, மற்றும் நடிகை ரஞ்சிதா விவகாரம் தொடர்பாக ஒரு சில கருத்து


நான் ஒரு இஸ்லாமிய மதத்தைச் சேரந்தவன் என்ற ரீதியில் சுவாமி நித்யானந்தா, மற்றும் நடிகை ரஞ்சிதா விவகாரம் தொடர்பாக ஒரு சில கருத்துக்களை இங்கே பதிவு செய்ய ஆசைப்படுகின்றேன்.

சுவாமி நித்யானந்தா அவர்களை விமர்சிக்க நான் இங்கே வரவில்லை. மாறாக, இந்து சமுதாய அன்பர்களுக்கு மாத்திரம் இங்கு ஒரு விடயத்தைக் கூற ஆசைப்படுகின்றேன். ஒரு மதத்தை சரி பிழை என்பதை தீர்மானிப்பதற்கு உங்களது வேதத்தை அளவுகோளாகக் கொள்ள வேண்டுமே தவிர தயவு செய்து உங்களைப் போன்ற ஆறறிவுள்ள மனிதர்களை அளவு கோளாக கொள்ளாதீர்கள்.

நித்யானந்தன் போன்ற சுவாமிகள் செய்கின்ற அசிங்கமான மானக்கேடான செயற்பாடுகளால் இந்து மதத்திற்கு எவ்வித கலங்கமும் ஏற்படவில்லை. ஏற்படவுமாட்டாது. இதே மாணக்கேடான செயல்களை உங்களது மத நூல் சொல்லியிருந்தால்தான் இந்து மதத்திற்கு அசிங்கம். ஆனால் அவ்வாறு இல்லை என்பதை இந்த ஈனச்செயலுக்கெதிரான ஒட்டு மொத்த இந்து மக்களின் கொந்தளிப்பினாலேயே விளங்கிக்கொள்ள முடிகின்றது.

இந்து மக்கள் தவறாக எடுத்துக்கொள்ளாவிடில் இஸ்லாம் மார்க்கம் தொடர்பான ஒரு கருத்தை சுருக்கமாக இங்கு பதிவு செய்ய ஆசைப்படுகின்றேன். அதாவது, இஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்தவரைக்கும் ஆபாசங்களையும் அசிங்கங்களையும் நேரடியாக தடைசெய்வதோடு மட்டும் நின்று கொள்ளாமல் அவற்றின் பால் ஒரு மனிதனை இட்டுச்செல்லுகின்ற வாயில்கள் அனைத்தையும் மூடிவிடும். அதுதான் இஸ்லாமிய மார்க்கத்தின் தன்னிகரில்லா சிறப்பம்சமாகும்.

முதலில் சுவாமி நித்யானந்தா அவர்களை எடுத்துக்கொள்வோம். அவர் இதுபோன்ற ஈனச்செயலில் ஈடுபடுவதற்கு அடித்தளமிட்டது எது? துறவறம் என்பதை எவராலும் மறுக்க முடியாதல்லவா? மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் ஆசைகள், உணர்ச்சிகள் இருக்கவே செய்கின்றன. அந்த ஆசைகளும் உனர்ச்சிகளும் வரையரையோடு இருந்தால் அவன்தான் மனிதன். வரையரையை விட்டும் அப்பாற்பட்டு விட்டால் அவன் மிருகமாக மாறி விடுகின்றான்.

இவ்விரண்டிற்கும் அப்பால் தனக்கு எந்தவித ஆசாபாசங்களும் இல்லை, தான் ஒரு துறவி என்று வாதிடுவானாயின் அவன் வெறும் பொய்யனாகத்தான் இருப்பான். அது மட்டுமன்றி சில வேலைகளில் மிருகமாகக்கூட மாறிவிடுவான். அதற்கு நல்லதொரு உதாராணம்தான் நித்யானந்தா போன்ற சுவாமிகள். துறவறம் என்ற போலி வாதம் விபச்சாரம் வரைக்கும் இட்டுச்செல்லும் ஒரு செயலாக இருப்பதனால்தான் இஸ்லாம் விபச்சாரத்தை தடை செய்கின்ற அதே நேரம் துறவறத்தையும் சேர்த்தே தடை செய்கிறது.

எமது ஆத்மீகத் தலைவர் நபிகளார் அவர்களது காலத்தில் மூன்று மனிதர்கள் அண்ணார் அவர்களின் சபைக்கு வந்து, ஒருவர் 'நான் இரவு முழுக்க தூங்காமல் இறைவனை தொழுது கொண்டே இருக்கப் போகின்றேன்' என்றும், மற்றவர் 'நான் காலம் பூராக நோன்பு நோற்றுக் கொண்டே இருக்கப் போகின்றேன்' என்றும், மற்றவர் 'நான் பெண்களை விட்டும் விலகி திருமனம் முடிக்காமலே வாழப் போகின்றேன்' என்றும் முறைப்பட்டனர். அந்த நேரத்தில் எமது ஆத்மீக் தலைவர் அவர்கள் வருகை தந்து, நீங்கள் இப்படி இப்படி எல்லாம் கூறுகின்றீர்கள். அறிந்து கொள்ளுங்கள், நானோ உங்கள் அனைவரையும் விட இறைவனை அதிகம் பயப்படுபவன், அச்சப்பட்டு வாழ்பவன். ஆனால், நான் நோன்ப பிடிக்கவும் செய்கின்றேன், விடவும் செய்கின்றேன். (இரவில்) தொழவும் செய்கின்றேன், தூங்கவும் செய்கின்றேன். மற்றும் நான் (பென்களை விட்டும் ஒதுங்கி வாழாமல்) திருமனமும் செய்கின்றேன். இதுதான் எனது வழிமுறை. இவ்வழிமுறையை எவர்கள் புறக்கனிக்கிறார்களோ அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள் அல்ல என்று எச்சரிக்கை செய்கின்றார்கள்.

பாரத்தீர்களா அன்பர்களே, ஆன்மீகத் தலைவரின் சீரிய வழிகாட்டுதலை! இதுதான் இஸ்லாம் காட்டும் வழிமுறை. இவ்வழிமுறையை இஸ்லாமியர்கள் மட்டுமன்றி அனைத்து மதத்தவர்களும் கடைப்பிடிப்பார்களாயின் நித்யானந்தா போன்ற பல சுவாமிகளின் அசிங்கமான ஆபாசமான ஈனச்செயல்களிலிருந்து பாதுகாப்புபெற முடியும் என்பது நிச்சயம்.

அடுத்து, பிரபல நடிகை ரஞ்சிதா அவர்களை எடுத்துக் கொள்வோம். இப்பெண் அனைத்து சினிமா நடிகைகளுக்கும் ஒரு படிப்பினையும் பாடமுமாகும். நான் ஏற்கனவே குறிப்பிட்து போன்று, இஸ்லாமிய மார்க்கம் எந்த ஒரு அசிங்கத்தையும் ஆபாசத்தையும் தடை செய்வதற்கு முன் அவற்றின் பால் இட்டுச்செல்கின்ற சகல அம்சங்களுக்கும் வேலி போட்டு விடும். சற்று சிந்தித்துப்பாருங்கள்! இந்த ரஞ்சிதாவை நித்யானந்தாவிற்கு எப்படித் தெரியும்? ரஞ்சிதா எதனால் ஆசிரமத்திற்கு உள்வாங்கப்பட்டார்;? நித்யானந்தாவிற்கு ரஞ்சிதா மீது ஈர்ப்பை காட்டிக்கொடுத்தது எது? இதனை இன்னுமொரு வார்த்தையில் சொன்னால் குறித்த பெண்னை போகையாக பயன்படுத்த வைத்தது எது? இக்கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில் சினிமாதான் என்பதை உங்கள் ஒவ்வொருவரது மனச்சாட்சியும் மறுத்துரைக்குமா? மனசாட்சியை கேட்டுப்பாருங்கள்.

ஒரு பெண், தனது கணவன் மாத்திரம் பார்த்து ரசிக்க வேண்டிய இறைவன் அருளாகக் கொடுத்திருக்கின்ற உடல் அழகை அந்நிய ஆண்களுக்கு காட்டுவதில் என்ன மர்மம் இருக்கிறது? ஒரு பெண்ணின் கற்புக்கு உலகத்தில் என்ன விலை இருக்கிறது? சினிமாவில் ஈடுபடுகின்ற எந்த ஒரு நடிகையும் (விதிவிலக்காக சிலர் இருக்கலாம்) தனது கற்பு தனது கணவன் அல்லாத அந்நிய ஆனினால் பறிபோவதை விரும்பவே மாட்டார்கள். இல்லை, சினிமா நடிகைகளை திருமணம் செய்கின்ற ஆடவர்களாவது அதனை விரும்பவார்களா? அப்படியிருக்க, ஒரு பெண்ணிடத்தில் கட்டாயம் குடிகொண்டிருக்க வேண்டிய ஒழுக்கம், மானம், ரோஷம், வெட்கம் அனைத்தையும் குழிதோண்டிப் புதைக்கும் விதத்தில் அற்ப உலக ஆதாயங்களுக்காக தன்னை ஒரு கண்காட்சிப் பொருளாக மாற்றி காண்பிப்பதில் என்ன இன்பம் காண்கிறார்கள்? அதை விட்டுவிடுங்கள், சினிமா நடிகைகளை திருமணம் செய்திருக்கின்ற ஆண்கள் தங்களது மனைவியின் உடல் அங்கங்களை தனக்கு முன்னால் இன்னுமொறு ஆண் பார்த்து ரசித்துக்கொண்டிருப்பதை விரும்புவார்களா? மனச்சாட்சி தீர்ப்புச் சொல்லட்டும். ஆனால் அதுதானே நடந்து கொண்டிருக்கின்றது.

இவை அனைத்தையும் விட்டு விடுங்கள்? சினிமாவில் ஈடுபடும் நடிகைகள் சிந்திப்பாரகளாக! உங்களது உடல் அங்கங்களை உங்கள் கணவனுக்கு நிகராக இருக்கின்ற ஆண்கள் மாத்திரம் ரசிக்கவில்லை. உங்கள் கூடப்பிறந்த சொந்த சகோதரனுமல்லவா ரசிக்கின்றான். நாளை தங்களுக்கு குழந்தைகள் பிறந்து அக்குழந்தைகள் சினிமாவில் ஈடுபாடு காட்டும் போது தனது தாய் நடித்த படத்தை பாரத்தால் அவனது சிந்தனை என்னவாக இருக்கும்? சொந்தக் கணவனோடு முத்தமிட்டு கொஞ்சிக் குலவுவதை தங்களது பிள்ளைகள் பார்ப்பதையே அசிங்கமாகக் கருதுவீர்கள். அதே உங்களது குழந்தை உங்களது தகப்பன் அல்லாத வேறொரு ஆணுடன் கொஞ்சிக் குலவுவதைப் பார்த்தால் அந்தப் பிள்ளைகளது மனோ நிலை என்னவாக இருக்கும்? அதை நீங்கள்தான் விரும்புவீர்களா? அல்லது உங்கள் குழந்தைகளைத்தான் சினிமாவில் ஈடுபாடுகாட்டுவதை விட்டும் தடுக்கப் போகின்றீர்களா? மனச்சாட்சி பதில் சொல்லட்டும்.

உதாரணத்திற்கு, சூரியா, ஜோதிகா ஆகிய இரு நடிகர்களையும் எடுத்துக்கொள்வோம். இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. இக்குழந்தை வாலிப வயதை அடைந்ததும் தனது அப்பாவாகிய சூர்யா, அம்மா அல்லாத வேறோரு சினிமா நடிகையோடு கொஞ்சிக் குலவும் படத்தை பார்க்க நேரிட்டால் அல்லது அந்தப் பிள்ளை பாடசாலையில் படிக்கும் போது நன்பர்கள் தனது அப்பாவை அம்மா அல்லாத பிற நடிகையோடு, அம்மாவை அப்பா அல்லாத பிற நடிகனோடு தொடர்புபடுத்திப் பேசினால் அக்குழந்தையின் மனோ நிலை என்னவாகும்? அந்தப் பிள்ளைக்கு முன்னாள் அப்பாவும் அம்மாவும் எப்படி தலை நிமிர்ந்து நடக்கப் போகின்றார்கள். நான் இங்கே குறிப்பிடுவது படக்கதையைப் போன்று கற்பனைக் கதையல்ல. நிஜக்கதையை. மனசாட்சி தீர்ப்புச் சொல்லட்டும்! (நான் இந்த இடத்தில் இவ்விருவரை மாத்திரம் குறிப்பிட்டது உதாரணத்திற்காகத்தான். அத்தோடு இவ்விருவரையும் சாடுவதற்காக இதனை எழுதவில்லை. மாறாக நியாயத்தை சிந்திக்க வேண்டுமென்பதற்காகவே எழுதுகிறேன்.)

அத்தோடு இதுபோன்ற அனாச்சாரங்களுக்கும் அசிங்கங்களுக்கும் துணைபோகின்ற அப்பாஸ், ஏ.ஆர் ரகுமான் போன்ற இஸ்லாத்தின் துரோகிகளையும் சேர்த்தே இங்கு சாடுகின்றேன். தமிழ் உலகத்தில் இப்படியான விபச்சாரங்களும் அசிங்கங்களும் அநாச்சாரங்களும் புரையோடிப்போய் இருப்பதற்கு காம லீலைப் படங்களுக்கு அப்பால் இந்த சினிமாக்கள்தான் முதற்காரணம் என்று நான் சொன்னால் மனசாட்சி இருக்கின்ற எவரும் மறுக்க முடியாது.

ரஞ்சிதா என்ற பெண்மனி விபச்சார சந்தைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு அவர் சினிமாவில் பிற அந்நிய ஆண்களுக்கு தனது கணவன் மாத்திரம் பார்க்க வேண்டிய மேனியை காட்சிப் பொருளாக மாற்றியதுதான் பிரதான காரணமாகும் என்பதுதான் நான் மேற்குறிப்பிட்டவற்றின் சாரம்சமாகும்.

எனவே, நான் மேற்குறிப்பிட்டதைப் போன்று, இஸ்லாமிய மார்க்கம் விபச்சாரத்தை தடைசெய்வதற்கு முன்பாக அதற்கு உந்து கோளாக இருக்கின்ற ஒரு பெண்ணின் மறைவிடங்களான உடல் அங்கங்களுக்கு ஒரு கட்டுப்பாடை போடுகிறது. அதாவது முகம், இரு மணிக்கட்டுகள் ஆகியவற்றைத் தவிர மற்றைய அனைத்துப் பகுதிகளையும் மறைக்குமாறு இஸ்லாம் கட்டளை பிறப்பிக்கிறது. அதுதான் ஒரு பெண்னுக்கு பாதுகாப்பும் சுதந்திரமுமாகும் என்பதை திட்டவட்டமாக வலியுருத்துகிறது. ஒரு மனிதனுக்கு இச்சையை உண்டுபன்னக் கூடிய மனைவியின் மேனியை கணவனைத் தவிர வேறு எவரும் பாரத்துவிடக் கூடாது என்பதில் இஸ்லாம் கடுமை காட்டுகிறது. இதனால்தான் இன்று உலகத்தில் மலிந்து காணப்படுகின்ற ஆபாசங்கள், விபச்சாரங்களில் முஸ்லிம் அல்லாதவர்களே முன்னனியில் இருக்கின்றனர். இந்த உண்மையை ஜாதி மத வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று நடு நிலையோடு சிந்திப்பீர்களாயின் நான் கூறுவதில் நியாயம் இருக்கிறது என்பதை இலகுவில் புரிந்து கொள்வீர்கள்.

எனது அன்பிற்கினிய முஸ்லிம் அல்லாத அன்பர்களே! தாங்கள் இவ்வாறான மானக்கேடான காரியங்களைப் பார்த்து கொந்தளிப்பது பாராட்டத்தக்கது, வரவேற்கத்தக்கது. நான் தவறு என்று சொல்ல வரவில்லை. ஆனால் அடிப்படையில் தவறு செய்திருக்கின்றோம் என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டிய விடயமாகும். அஸ்திவாரத்தில் கோட்டைவிட்டுவிட்டு நாம் அழுது புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது?

முக்கால்வாசி அதைவிட மேலான உடல்பகுதிகளை அந்நிய ஆண்களுக்கு காட்டுவதை நவீன கலாச்சாரம் என்கிறோம். முழு உடலையும் காட்டினால் தவறு என்கிறோம். ஆட்டுப்பண்னையில் வேலிபோட்டதன் பின் ஆடுகள் தவறினால் கவலைப்படுவதில் நியாயம் இருக்கிறது. எந்த வேலியும் போடாமல் துரந்து வைத்துவிட்டு அதையே கலாச்சாரமாக ஆக்கிவிட்டு தவறிப்போனதும் கவலைப்படுவதில் என்ன நியாயம் இருக்கிறது என்பது எனக்கு புரியவில்லை. சுருக்கமாகச் சொல்லப்போனால், வேரை விட்டு விட்டு கிளையைப் பிடுங்குவதால் எந்த அர்த்தமும் இல்லை. பச்சிளம் பாலகனையே சீர்கெடுத்திருக்கின்ற இந்த சினிமா (கலக்கப்போவது யார் என்ற நிகழ்ச்சியைப் பார்த்தால் பட்டென புரிந்து கொள்வீர்கள்) இள வயதினரை பாழ்படுத்தாமலா விடும்?

நடிகை ரஞ்சிதாவை நேற்று வரை ஆடை அணிந்த நிர்வாணியாக சினிமா உலகம் பாரத்தது. இன்று ஆடை இல்லா நிர்வாணியாக பார்த்திருக்கிறது. சிறிய வித்தியாசம்தான் பதட்டப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் வேடிக்கை என்னவென்றால் பாதி ஆடை அணிந்த நிர்வாணியாக இருக்கும் போது கை தட்டி ஊக்குவித்த சினிமா உலகம் பாதி ஆடை இல்லாத நிர்வாணியாக இருந்தமையினால் தூற்றுகின்றமைதான். விபச்சாரம் வரைக்குமுள்ள அனைத்தையும் படம் போட்டுக்காட்டிவிட்டு விபச்சாரத்தில் மாத்திரம் ஈடுபடவேண்டாம் என்று சட்டம்போடுவதில் வேடிக்கையும் வினோதத்தையும் தவிர வேறு என்னதான் இருக்கிறது.

இதனால்தான் முஸ்லிம்களின் வேதமாகிய அருள்மறை அல்குர்ஆன் கூறுகிறது.

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது. (அத்தியாயம் :17 வசன எண்:32)

அல்குர்ஆன் விபச்சாரத்தில் ஈடுபடாதீர்கள் என்று கூறவில்லை. மாறாக நெருங்கவே வேண்டாம் என்று கூறுகிறது. நுழைவதைத் தடுப்பதற்கு முன்னால் வாயிலையே அடைக்கின்றது இஸ்லாமிய மார்க்கம். மீண்டும் அல்குர்ஆன் கூறுகிறது.
வெளிப்டையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள். (அத்தியாயம்:06 வசன எண்:151)

இவ்வசனத்திலும் நெருங்காதீர்கள் என்ற வார்த்தையைத்தான் இறைவன் பயன்படுத்துகின்றான். இதனால்தான் இஸ்லாமியர்களாகிய நாங்கள் ஒட்டுமொத்த சினிமாக்களையும் தடுக்கப்பட்டவை என்று கருதுகிறோம். ஏனென்றால் எம்மைப் படைத்து பரிபாலிக்கின்ற இரட்சகன் விபாச்சாரம், மாணக்கேடான காரியங்களை நெருங்க வேண்டாம் என்று கூறுகிறான். சினிமாக்கள் அவற்றை நெருங்குவதற்கான நுழைவாயில்கள் அல்லாமல் வேறு என்னவாகத்தான் இருக்க முடியும்? அறிவுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்.

இந்த இடத்தில் தஸ்லீமா நஸ்ரின், ஏ.ஆர் ரகுமான் (இசையமைப்பாளர்), ரகுமான் (நடிகர்) அப்பாஸ், ரியாஸ்கான் போன்ற இஸ்லாமிய பெயர்தாங்கிகளை வதிவிளக்களிக்கின்றேன். இவர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று அழைத்துக்கொண்டாலும் உண்மையில் இவர்கள் இஸ்லாத்தின் துரோகிகள் என்றே கருதுகிறோம். இந்து மத அன்பர்கள் நடிகை ரஞ்சிதா மீது எவ்வளவ வெறுப்புணர்வு காட்டுகின்றார்களோ அதே அளவுக்கான வெறுப்புணர்வை இவர்கள் மீது நாம் காட்டுகின்றோம். ஸ்டீவன்சன் என்ற உலகப்புகழ்பெற்ற பாடகன் யூஸுப் இஸ்லாமாக, கமலாதாஸ் என்ற பெரும் எழுத்தாளரும், ஒழுக்கக்கேடுகளை ஆதரித்தவருமான பெண்மனி கமலா சுரய்யாவாக மாறி, இஸ்லாத்தின் புனிதத்துவத்தை கலங்கம் இல்லாமல் பாதுகாத்து கொண்டிருக்கின்ற அதே நேரம் நான் மேலே குறிப்பிட்டவர்கள் போன்று இஸ்லாமிய பெயர்தாங்கிகள் இஸ்லாத்தை கலங்கப்படுத்திக்கொண்டு இருக்கின்றார்கள் என்பதுதான் உண்மையாகும்.

எம்மைப் பொருத்தவரை ரஞ்சிதா மாத்திரமல்ல. தமிழ் உலக சினிமாவின் தாக்கத்தால் நடைபெருகின்ற எந்த விபச்சாரத்திற்கும் மேலே சொன்ன முஸ்லிம் பெயர்தாங்கிகளும் இறைவனிடதத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஏ.ஆர் ரகுமானுக்கு திரையுலகங்கள், ஆட்சிபீடங்கள் வேண்டுமானால் பரிசில்கள், விருதுகள் கொடுத்து கௌரவிக்கலாம். அவரைப் படைத்த இறைவன் நாளை மறுமையில் என்ன கொடுக்க இருக்கிறான் என்பதை மனச்சாட்சியின் அடிப்படையில் சிந்திப்பீராயின் நாளை உண்மையான முஸ்லிமாக மாறக்கூடும்.

இஸ்லாமியர்கள் அனைவராலும் இறை தண்டனைக்குரிய செயல் என்று அறியப்பட்ட இசையை தனது தொழிளாகக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஏ.ஆர் ரகுமானுக்கு இஸ்லாமிய கடவுள் கோட்பாடு பற்றிக்கூட எதுவும் தெரியாது என்பதுதான் உண்மையாகும். அவர் பிறப்பால் முஸ்லிமல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். உண்மையில் இஸ்லாத்திற்கு வருபவர்கள் அதிகப்படியாக இஸ்லாத்தின் தெய்வீகக்கோட்பாட்டினால் ஈர்க்கப்படுபவர்களே அதிகம். ஆனால் ஏ.ஆர் ரகுமான் அவர்களோ இஸ்லாம் எதனை வண்மையாக கண்டிக்கிறதோ அத்தகைய தர்கா வழிபாட்டில் தனனை இனைத்துக்கொண்டிருப்பதிலிருந்தே அவர் இஸ்லாம் என்றால் என்னவென்று தெரியாத ஒருவராக இருக்கின்றார் என்பது உள்ளங்காய் நௌளிக்கனியாகும். எனவேஇ ஏ.ஆர் ரகுமானுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை இந்து மத அன்பர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.)

ஓட்டுமொத்த சினிமா நடிகர் நடிகைகளை நோக்கிச் சொல்கின்றேன். ரஞ்சிதாவின் இந்த செயலுக்கு சினிமா நடிகையாக இருந்ததைத் தவிர அவர் செய்த பாவம்தான் என்ன? இளைய தலைமுறையினரின் கலாச்சார சீரழிவுக்கும், கல்வி வீழ்ச்சிக்கும், ஆத்மீக நெறிபிறழ்தலுக்கும் பின்னால் நீங்கள்தான் இருக்கிறீர்கள் என்பதை மனசாட்சியிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள்.

முஸ்லிம் பாடகர், நடிக, நடிகைகளே! அற்ப சொற்ப சுகத்துக்காகவும் உலக ஆதாயங்களுக்காகவும் நிரந்தர மறுமையையும் அதன் இன்பங்களையும் மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற உங்களுக்கு எமது வேதமாகிய அல்குர்ஆனை நோக்கி அழைப்புவிடுக்கின்றேன்.

குறிப்பு : நான் குறிப்பிட்ட கருத்தில் ஜாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பால் தாங்கள் தவறுகளைக் கண்டால் சுட்டிக்காட்டுங்கள். நியாயம் இருந்தால் மணமுவந்து ஏற்றுக்கொள்வேன். அடுத்து, எத்தனையோ இணையதளங்கள் தாங்கள் சொல்வது மட்டும்தான் சரி, மற்றவை எல்லாம் தவறு என்று கருதி நேர்களின் கருத்துக்களுக்க இடம் கொடுக்காமல் இருக்கும் போது எக்கருத்தாயினும் ஒளிவு மறைவு இல்லாமல் சாதகமோ பாதகமோ அவற்றை உலகுக்கு அப்படியே கொண்டுபோய்ச்சேர்க்கின்ற இந்நேரம்.காம் தளத்துக்கும் அதன் ஆசிரியருக்கும் என் மனமுவந்த நன்றியைத்தெரிவித்துக் கொள்கின்றேன்.

No comments:

Post a Comment