Monday, 27 June 2011

உலக சாதனையில் இடம் பெற்ற பூங்கா..


AL AIN PARADISE
The First park in Guinness World Record by The Largest Number of Hanging Flower Bskets---Al Ain, United Arab Emirates ..........

Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos

Saturday, 25 June 2011

இதயம் காக்கும் காளான்....


காளான் மழைக்காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் ஒருவகை பூஞ்சையினமாகும்.

இயற்கையாக வளரும் இவற்றை சிலர் பிடுங்கி எறிந்திடுவர். ஆனால், இந்தியா முதற்கொண்டு பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது.

இயற்கையாய் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும், சில விஷமற்றதாகவும் வளரும். விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ண முடையதாகவும் இருக்கும்.

காளான் வளர்ப்பு சிறந்த வருவாய் ஈட்டித்தரும் எளிய தொழிலாக உள்ளது. இதனை தமிழ்நாட்டில் பல இடங்களில் குடிசைத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.

காளான் மிகுந்த சுவையுள்ளதாகவும், மிகுந்த சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது. காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும்.

காளான் வகைகள்

இந்தியாவில் 8 வகையான காளான்கள் உள்ளன. இவற்றுள் மொக்குக்காளான், சிப்பிக்காளான், வைக்கோல் காளான் என்ற மூன்று வகை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

காளான் மருத்துவ பயன்கள்

காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.

காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசøரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.

இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்த வித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது.

இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.

பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது.

இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.

மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.

காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.

மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.

தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.

எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது.

மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.

கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.

காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.

காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

இலவங்கப் பட்டையின் மருத்துவ குணம்..


இலவங்கப்பட்டை ஏராளமான மருத்துவக் குணங்களைக் கொண்டது. பாட்டி வைத்தியமாக, பட்டையை இருமலுக்கு தற்காலிக மருந்தாகத் தருகின்றனர். இதனுடைய மணம் மற்றும் தசையை இறுக்கும் குணம், கபத்தை வெளியேற்றும் தன்மையால் தலைசுற்றல் மற்றும் வாந்தியைத் தடுக்கும் மருந்துப் பொருளாக ஆதிகாலத்திலிருந்தே மக்கள் லவங்கத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். வயிற்றுப் பொருமல் மற்றும் வயிற்று வலிக்கும் கூட இலவங்கப்பட்டையைத் தருகின்றனர். மூட்டுவலியின் மருந்தாகக் கூட பட்டை பயன்படுத்தப்படுகின்றது. இந்தப் பட்டையிலிருந்து எடுக்கப்படும் இலவங்க தைலமும் இனிப்புப் பொருள், மது பானம், மருந்து, சோப், பற்களுக்கான பொருள்களில் கலக்கப்படுகிறது. இலவங்கத்தைலம்/எண்ணெய், கிரம்புத் தைலத்தின் நிறத்தை ஒத்திருக்கும். இலவங்க மரத்தின் விதையிலிருந்தும் எண்ணெய் எடுக்கின்றனர்.
pattai_340இதிலுள்ள பினால் என்ற வேதிப் பொருளால் பட்டை வாய்துர்நாற்றம் நீக்கும் பொருளாகவும் பயன்படுகிறது. இது வெப்பம் தரும் நறுமணப் பொருளாக உள்ளதால் பட்டையை சளி மற்றும் ப்ளூ காய்ச்சலின்போது மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். இலவங்கப் பட்டை, வயிறு சம்பந்தமான வயிற்றுப் பொருமல், அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிற்று வலி என அனைத்துவித நோய்களுக்கும் நிவாரணியாக கருதப்படுகிறது. பூஞ்சைக் காளானால் வரும் நோய்களையும் குணப்படுத்துகிறது என்று ஆராய்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரத்த ஓட்டத்தை செம்மைப்படுத்தும். இலவங்கம் கீல்வாதம், மூட்டுவலி, தசைவலியை சரி செய்யும். அதுமட்டுமல்ல மூளையின் நினைவுப் பெட்டகத்தை நன்கு பணி புரிய வைக்குமாம். உடல் கொழுப்பைக் குறைக்குமாம். 
 லவங்கப் பட்டை, மனவழுத்தம், மன இறுக்கம், பதட்டம் போன்றவற்றை அமைதிப்படுத்தும். பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்; மாதவிடாயை சீராக்கும். இரத்த அழுத்தத்தை குறைக்கும். இலவங்கத்தைச் சுவைத்தால் பல்வலி குணமாகும்; வாயை புத்துணர்வுடன் வைத்திருக்கும். இரத்தம் உறைதலைத் தடுக்கும் மருந்து பட்டைதான். இரண்டாம் வகை சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்க இலவங்கப் பட்டை உதவுகிறது. மேலும் இது இன்சுலினுக்கு துணையாகவும், தூண்டுதலாகவும் இருந்து செயல் புரிகிறது. இலவங்கத்தில் ஒரு நல்ல உடல் நலத்திற்கு தேவையான அளவு, மாங்கனீஸ், இரும்பு, கால்சியம் மற்றும் முக்கியமான தாது உப்புக்கள் உள்ளன.
 ஒருவர் தினம் 1/2 தேக்கரண்டி பட்டை பொடி சாப்பிட்டால், அது கொழுப்பைக் கட்டுப் படுத்தும்.
அமெரிக்கா, மேரிலாந்தில் சமீபத்தில்(2005 ல்) நடத்திய ஆராய்ச்சியில், பட்டை, இரத்த புற்றுநோய், குடல் புற்று மற்றும் தசை புற்றுநோயைக் குறைக்கிறது எனவும், இரத்த கொலஸ்டிரால், சர்க்கரை நோயினைக் குறைப்பதாகவும் கண்டறிந்துள்ளனர். தினம் காலை 1/2 தேக்கரண்டி பட்டை பொடி + 1தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் , அது நாள்பட்ட மூட்டு வலியை நன்கு குணப்படுத்துமாம். 
பட்டையை நுகர்ந்து பார்ப்பதனால், மூளையின் ஆராய்ந்து அறியும் மனப்பாங்கையும், நினைவாற்றலையும் அதிகப்படுத்துகிறது என ஓர் ஆய்வு சொல்கிறது. தொடர்ந்து பட்டை சாப்பிட்டால் அதுவே நல்ல குடும்ப கட்டுப்பாட்டு மருந்தாகும். இது இயற்கையான பிறப்புக் கட்டுப்பாட்டு பொருள். குழந்தை பிறந்து ஒரு மாதம ஆனபின்பு, தினம் இரவு ஒரு துண்டு பட்டை சாப்பிட்டால், அது அடுத்த குழந்தையின் பிறப்பை 15 -20 மாதம் தள்ளிப் போடுமாம்.
இது உடல் எடையைக் கட்டுப்படுத்துகிறது.. முக்கியமாக தாய்மையுற்ற பெண்களின் எடையை..!
பட்டையிலுள்ள கால்சியம் நமது இதயத்தை நன்கு சீராக வைக்க உதவுகிறது. நரம்புத் தளர்ச்சியைக் கட்டுப் படுத்துகிறது. பட்டையும் தேனும் கலந்து சாப்பிட்டால், இது தற்காப்புத் தன்மையை அதிகரிக்குமாம். ஆயுளைக் கூட்டுமாம். உடல் சோர்வை விரட்டுமாம்.
பட்டை பூஞ்சை காளான், பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணி நோய்களிலிருந்து நமைக் காப்பாற்றுகிறது. தலைப் பேனை விரட்டவும் பட்டை உதவுகிறது. பூச்சிக் கடிக்கு பட்டையை அரைத்துப் பூசலாம்.
சிறு நீர் உபாதை, சிறு நீர்க் குழாயில் பாக்டீரியா தொற்று போன்றவற்றிலிருந்து நம்மைக் காக்கிறது.
பரு வந்தாலும், பட்டையை அரைத்துப் பூசினால் பரு போயேவிடும். பட்டை மற்றும் தேன் கலந்து தினம் காலையில் சாப்பிட்டால் காது கேளாமை சரியாகும். தலைவலிக்கும் பட்டையை அரைத்து தடவலாம்.
பட்டை பொடி+ தேன்+ சூடான ஆலிவ் எண்ணெய் கலந்து வழுக்கை விழுந்த தலையில் தடவி 15 நிமிடம் வைத்திருந்தால் முடி முளைக்கும் என சொல்லப்படுகிறது. (காரியம் நடக்காவிட்டால், என் மேல் கல் வீசாதீர்கள்).
கிட்டத்தட்ட ஆயுர்வேதம், சித்தா மற்றும் அலோபதி கூட லவங்கப்பட்டை பல நோய்களின் நிவாரணி என்று சொல்கின்றன.
100 கிராம் பட்டையில் உள்ள சத்துப்பொருள்கள்
முக்கியப் பொருள்கள் +-சத்து மதிப்பு-+தினத் தேவையின்%
ஆற்றல் 247 Kcal 12%
மாவுப் பொருள் 50.59 g 39%
 புரதம் 3.99 g 7%
மொத்த கொழுப்பு 1.24 g 4.5%
கொலஸ்டிரால் 0 mg 0%
நார் சத்து 53.1 g 133%
 வைட்டமின்கள்: போலேட் 6 mcg 1.5%
நியாசின் 1.332 mg 8%
பான்டோதனிக் அமிலம் 0.358 mg 7%
பைரிடாக்சின் 0.158 mg 12%
ரிபோபிளேவின் 0.041 mg 3%
 தையாமின் 0.022 mg 2%
வைட்டமின் A 295 IU 10%
 வைட்டமின் C 3.8 mg 6%
வைட்டமின் E 10.44 mcg 70%
வைட்டமின் K 31.2 mcg 26%
 Electrolytesசோடியம் 10 mg <1%
 பொட்டாசியம் 431 mg 9%
தாது உப்புக்கள் கால்சியம் 1002 mg 100%
தாமிரம் 0.339 mg 38%
இரும்பு 8.32 mg 104%
 மக்னீசியம் 60 mg 15%
 மாங்கனீஸ் 17.466 mg 759%
 பாஸ்பரஸ் 64 mg 9%
 துத்தநாகம் 1.83 mg 17%

Wednesday, 22 June 2011

நான் ஒரு இஸ்லாமிய மதத்தைச் சேரந்தவன் என்ற ரீதியில் சுவாமி நித்யானந்தா, மற்றும் நடிகை ரஞ்சிதா விவகாரம் தொடர்பாக ஒரு சில கருத்து


நான் ஒரு இஸ்லாமிய மதத்தைச் சேரந்தவன் என்ற ரீதியில் சுவாமி நித்யானந்தா, மற்றும் நடிகை ரஞ்சிதா விவகாரம் தொடர்பாக ஒரு சில கருத்துக்களை இங்கே பதிவு செய்ய ஆசைப்படுகின்றேன்.

சுவாமி நித்யானந்தா அவர்களை விமர்சிக்க நான் இங்கே வரவில்லை. மாறாக, இந்து சமுதாய அன்பர்களுக்கு மாத்திரம் இங்கு ஒரு விடயத்தைக் கூற ஆசைப்படுகின்றேன். ஒரு மதத்தை சரி பிழை என்பதை தீர்மானிப்பதற்கு உங்களது வேதத்தை அளவுகோளாகக் கொள்ள வேண்டுமே தவிர தயவு செய்து உங்களைப் போன்ற ஆறறிவுள்ள மனிதர்களை அளவு கோளாக கொள்ளாதீர்கள்.

நித்யானந்தன் போன்ற சுவாமிகள் செய்கின்ற அசிங்கமான மானக்கேடான செயற்பாடுகளால் இந்து மதத்திற்கு எவ்வித கலங்கமும் ஏற்படவில்லை. ஏற்படவுமாட்டாது. இதே மாணக்கேடான செயல்களை உங்களது மத நூல் சொல்லியிருந்தால்தான் இந்து மதத்திற்கு அசிங்கம். ஆனால் அவ்வாறு இல்லை என்பதை இந்த ஈனச்செயலுக்கெதிரான ஒட்டு மொத்த இந்து மக்களின் கொந்தளிப்பினாலேயே விளங்கிக்கொள்ள முடிகின்றது.

இந்து மக்கள் தவறாக எடுத்துக்கொள்ளாவிடில் இஸ்லாம் மார்க்கம் தொடர்பான ஒரு கருத்தை சுருக்கமாக இங்கு பதிவு செய்ய ஆசைப்படுகின்றேன். அதாவது, இஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்தவரைக்கும் ஆபாசங்களையும் அசிங்கங்களையும் நேரடியாக தடைசெய்வதோடு மட்டும் நின்று கொள்ளாமல் அவற்றின் பால் ஒரு மனிதனை இட்டுச்செல்லுகின்ற வாயில்கள் அனைத்தையும் மூடிவிடும். அதுதான் இஸ்லாமிய மார்க்கத்தின் தன்னிகரில்லா சிறப்பம்சமாகும்.

முதலில் சுவாமி நித்யானந்தா அவர்களை எடுத்துக்கொள்வோம். அவர் இதுபோன்ற ஈனச்செயலில் ஈடுபடுவதற்கு அடித்தளமிட்டது எது? துறவறம் என்பதை எவராலும் மறுக்க முடியாதல்லவா? மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் ஆசைகள், உணர்ச்சிகள் இருக்கவே செய்கின்றன. அந்த ஆசைகளும் உனர்ச்சிகளும் வரையரையோடு இருந்தால் அவன்தான் மனிதன். வரையரையை விட்டும் அப்பாற்பட்டு விட்டால் அவன் மிருகமாக மாறி விடுகின்றான்.

இவ்விரண்டிற்கும் அப்பால் தனக்கு எந்தவித ஆசாபாசங்களும் இல்லை, தான் ஒரு துறவி என்று வாதிடுவானாயின் அவன் வெறும் பொய்யனாகத்தான் இருப்பான். அது மட்டுமன்றி சில வேலைகளில் மிருகமாகக்கூட மாறிவிடுவான். அதற்கு நல்லதொரு உதாராணம்தான் நித்யானந்தா போன்ற சுவாமிகள். துறவறம் என்ற போலி வாதம் விபச்சாரம் வரைக்கும் இட்டுச்செல்லும் ஒரு செயலாக இருப்பதனால்தான் இஸ்லாம் விபச்சாரத்தை தடை செய்கின்ற அதே நேரம் துறவறத்தையும் சேர்த்தே தடை செய்கிறது.

எமது ஆத்மீகத் தலைவர் நபிகளார் அவர்களது காலத்தில் மூன்று மனிதர்கள் அண்ணார் அவர்களின் சபைக்கு வந்து, ஒருவர் 'நான் இரவு முழுக்க தூங்காமல் இறைவனை தொழுது கொண்டே இருக்கப் போகின்றேன்' என்றும், மற்றவர் 'நான் காலம் பூராக நோன்பு நோற்றுக் கொண்டே இருக்கப் போகின்றேன்' என்றும், மற்றவர் 'நான் பெண்களை விட்டும் விலகி திருமனம் முடிக்காமலே வாழப் போகின்றேன்' என்றும் முறைப்பட்டனர். அந்த நேரத்தில் எமது ஆத்மீக் தலைவர் அவர்கள் வருகை தந்து, நீங்கள் இப்படி இப்படி எல்லாம் கூறுகின்றீர்கள். அறிந்து கொள்ளுங்கள், நானோ உங்கள் அனைவரையும் விட இறைவனை அதிகம் பயப்படுபவன், அச்சப்பட்டு வாழ்பவன். ஆனால், நான் நோன்ப பிடிக்கவும் செய்கின்றேன், விடவும் செய்கின்றேன். (இரவில்) தொழவும் செய்கின்றேன், தூங்கவும் செய்கின்றேன். மற்றும் நான் (பென்களை விட்டும் ஒதுங்கி வாழாமல்) திருமனமும் செய்கின்றேன். இதுதான் எனது வழிமுறை. இவ்வழிமுறையை எவர்கள் புறக்கனிக்கிறார்களோ அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள் அல்ல என்று எச்சரிக்கை செய்கின்றார்கள்.

பாரத்தீர்களா அன்பர்களே, ஆன்மீகத் தலைவரின் சீரிய வழிகாட்டுதலை! இதுதான் இஸ்லாம் காட்டும் வழிமுறை. இவ்வழிமுறையை இஸ்லாமியர்கள் மட்டுமன்றி அனைத்து மதத்தவர்களும் கடைப்பிடிப்பார்களாயின் நித்யானந்தா போன்ற பல சுவாமிகளின் அசிங்கமான ஆபாசமான ஈனச்செயல்களிலிருந்து பாதுகாப்புபெற முடியும் என்பது நிச்சயம்.

அடுத்து, பிரபல நடிகை ரஞ்சிதா அவர்களை எடுத்துக் கொள்வோம். இப்பெண் அனைத்து சினிமா நடிகைகளுக்கும் ஒரு படிப்பினையும் பாடமுமாகும். நான் ஏற்கனவே குறிப்பிட்து போன்று, இஸ்லாமிய மார்க்கம் எந்த ஒரு அசிங்கத்தையும் ஆபாசத்தையும் தடை செய்வதற்கு முன் அவற்றின் பால் இட்டுச்செல்கின்ற சகல அம்சங்களுக்கும் வேலி போட்டு விடும். சற்று சிந்தித்துப்பாருங்கள்! இந்த ரஞ்சிதாவை நித்யானந்தாவிற்கு எப்படித் தெரியும்? ரஞ்சிதா எதனால் ஆசிரமத்திற்கு உள்வாங்கப்பட்டார்;? நித்யானந்தாவிற்கு ரஞ்சிதா மீது ஈர்ப்பை காட்டிக்கொடுத்தது எது? இதனை இன்னுமொரு வார்த்தையில் சொன்னால் குறித்த பெண்னை போகையாக பயன்படுத்த வைத்தது எது? இக்கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில் சினிமாதான் என்பதை உங்கள் ஒவ்வொருவரது மனச்சாட்சியும் மறுத்துரைக்குமா? மனசாட்சியை கேட்டுப்பாருங்கள்.

ஒரு பெண், தனது கணவன் மாத்திரம் பார்த்து ரசிக்க வேண்டிய இறைவன் அருளாகக் கொடுத்திருக்கின்ற உடல் அழகை அந்நிய ஆண்களுக்கு காட்டுவதில் என்ன மர்மம் இருக்கிறது? ஒரு பெண்ணின் கற்புக்கு உலகத்தில் என்ன விலை இருக்கிறது? சினிமாவில் ஈடுபடுகின்ற எந்த ஒரு நடிகையும் (விதிவிலக்காக சிலர் இருக்கலாம்) தனது கற்பு தனது கணவன் அல்லாத அந்நிய ஆனினால் பறிபோவதை விரும்பவே மாட்டார்கள். இல்லை, சினிமா நடிகைகளை திருமணம் செய்கின்ற ஆடவர்களாவது அதனை விரும்பவார்களா? அப்படியிருக்க, ஒரு பெண்ணிடத்தில் கட்டாயம் குடிகொண்டிருக்க வேண்டிய ஒழுக்கம், மானம், ரோஷம், வெட்கம் அனைத்தையும் குழிதோண்டிப் புதைக்கும் விதத்தில் அற்ப உலக ஆதாயங்களுக்காக தன்னை ஒரு கண்காட்சிப் பொருளாக மாற்றி காண்பிப்பதில் என்ன இன்பம் காண்கிறார்கள்? அதை விட்டுவிடுங்கள், சினிமா நடிகைகளை திருமணம் செய்திருக்கின்ற ஆண்கள் தங்களது மனைவியின் உடல் அங்கங்களை தனக்கு முன்னால் இன்னுமொறு ஆண் பார்த்து ரசித்துக்கொண்டிருப்பதை விரும்புவார்களா? மனச்சாட்சி தீர்ப்புச் சொல்லட்டும். ஆனால் அதுதானே நடந்து கொண்டிருக்கின்றது.

இவை அனைத்தையும் விட்டு விடுங்கள்? சினிமாவில் ஈடுபடும் நடிகைகள் சிந்திப்பாரகளாக! உங்களது உடல் அங்கங்களை உங்கள் கணவனுக்கு நிகராக இருக்கின்ற ஆண்கள் மாத்திரம் ரசிக்கவில்லை. உங்கள் கூடப்பிறந்த சொந்த சகோதரனுமல்லவா ரசிக்கின்றான். நாளை தங்களுக்கு குழந்தைகள் பிறந்து அக்குழந்தைகள் சினிமாவில் ஈடுபாடு காட்டும் போது தனது தாய் நடித்த படத்தை பாரத்தால் அவனது சிந்தனை என்னவாக இருக்கும்? சொந்தக் கணவனோடு முத்தமிட்டு கொஞ்சிக் குலவுவதை தங்களது பிள்ளைகள் பார்ப்பதையே அசிங்கமாகக் கருதுவீர்கள். அதே உங்களது குழந்தை உங்களது தகப்பன் அல்லாத வேறொரு ஆணுடன் கொஞ்சிக் குலவுவதைப் பார்த்தால் அந்தப் பிள்ளைகளது மனோ நிலை என்னவாக இருக்கும்? அதை நீங்கள்தான் விரும்புவீர்களா? அல்லது உங்கள் குழந்தைகளைத்தான் சினிமாவில் ஈடுபாடுகாட்டுவதை விட்டும் தடுக்கப் போகின்றீர்களா? மனச்சாட்சி பதில் சொல்லட்டும்.

உதாரணத்திற்கு, சூரியா, ஜோதிகா ஆகிய இரு நடிகர்களையும் எடுத்துக்கொள்வோம். இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. இக்குழந்தை வாலிப வயதை அடைந்ததும் தனது அப்பாவாகிய சூர்யா, அம்மா அல்லாத வேறோரு சினிமா நடிகையோடு கொஞ்சிக் குலவும் படத்தை பார்க்க நேரிட்டால் அல்லது அந்தப் பிள்ளை பாடசாலையில் படிக்கும் போது நன்பர்கள் தனது அப்பாவை அம்மா அல்லாத பிற நடிகையோடு, அம்மாவை அப்பா அல்லாத பிற நடிகனோடு தொடர்புபடுத்திப் பேசினால் அக்குழந்தையின் மனோ நிலை என்னவாகும்? அந்தப் பிள்ளைக்கு முன்னாள் அப்பாவும் அம்மாவும் எப்படி தலை நிமிர்ந்து நடக்கப் போகின்றார்கள். நான் இங்கே குறிப்பிடுவது படக்கதையைப் போன்று கற்பனைக் கதையல்ல. நிஜக்கதையை. மனசாட்சி தீர்ப்புச் சொல்லட்டும்! (நான் இந்த இடத்தில் இவ்விருவரை மாத்திரம் குறிப்பிட்டது உதாரணத்திற்காகத்தான். அத்தோடு இவ்விருவரையும் சாடுவதற்காக இதனை எழுதவில்லை. மாறாக நியாயத்தை சிந்திக்க வேண்டுமென்பதற்காகவே எழுதுகிறேன்.)

அத்தோடு இதுபோன்ற அனாச்சாரங்களுக்கும் அசிங்கங்களுக்கும் துணைபோகின்ற அப்பாஸ், ஏ.ஆர் ரகுமான் போன்ற இஸ்லாத்தின் துரோகிகளையும் சேர்த்தே இங்கு சாடுகின்றேன். தமிழ் உலகத்தில் இப்படியான விபச்சாரங்களும் அசிங்கங்களும் அநாச்சாரங்களும் புரையோடிப்போய் இருப்பதற்கு காம லீலைப் படங்களுக்கு அப்பால் இந்த சினிமாக்கள்தான் முதற்காரணம் என்று நான் சொன்னால் மனசாட்சி இருக்கின்ற எவரும் மறுக்க முடியாது.

ரஞ்சிதா என்ற பெண்மனி விபச்சார சந்தைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு அவர் சினிமாவில் பிற அந்நிய ஆண்களுக்கு தனது கணவன் மாத்திரம் பார்க்க வேண்டிய மேனியை காட்சிப் பொருளாக மாற்றியதுதான் பிரதான காரணமாகும் என்பதுதான் நான் மேற்குறிப்பிட்டவற்றின் சாரம்சமாகும்.

எனவே, நான் மேற்குறிப்பிட்டதைப் போன்று, இஸ்லாமிய மார்க்கம் விபச்சாரத்தை தடைசெய்வதற்கு முன்பாக அதற்கு உந்து கோளாக இருக்கின்ற ஒரு பெண்ணின் மறைவிடங்களான உடல் அங்கங்களுக்கு ஒரு கட்டுப்பாடை போடுகிறது. அதாவது முகம், இரு மணிக்கட்டுகள் ஆகியவற்றைத் தவிர மற்றைய அனைத்துப் பகுதிகளையும் மறைக்குமாறு இஸ்லாம் கட்டளை பிறப்பிக்கிறது. அதுதான் ஒரு பெண்னுக்கு பாதுகாப்பும் சுதந்திரமுமாகும் என்பதை திட்டவட்டமாக வலியுருத்துகிறது. ஒரு மனிதனுக்கு இச்சையை உண்டுபன்னக் கூடிய மனைவியின் மேனியை கணவனைத் தவிர வேறு எவரும் பாரத்துவிடக் கூடாது என்பதில் இஸ்லாம் கடுமை காட்டுகிறது. இதனால்தான் இன்று உலகத்தில் மலிந்து காணப்படுகின்ற ஆபாசங்கள், விபச்சாரங்களில் முஸ்லிம் அல்லாதவர்களே முன்னனியில் இருக்கின்றனர். இந்த உண்மையை ஜாதி மத வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று நடு நிலையோடு சிந்திப்பீர்களாயின் நான் கூறுவதில் நியாயம் இருக்கிறது என்பதை இலகுவில் புரிந்து கொள்வீர்கள்.

எனது அன்பிற்கினிய முஸ்லிம் அல்லாத அன்பர்களே! தாங்கள் இவ்வாறான மானக்கேடான காரியங்களைப் பார்த்து கொந்தளிப்பது பாராட்டத்தக்கது, வரவேற்கத்தக்கது. நான் தவறு என்று சொல்ல வரவில்லை. ஆனால் அடிப்படையில் தவறு செய்திருக்கின்றோம் என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டிய விடயமாகும். அஸ்திவாரத்தில் கோட்டைவிட்டுவிட்டு நாம் அழுது புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது?

முக்கால்வாசி அதைவிட மேலான உடல்பகுதிகளை அந்நிய ஆண்களுக்கு காட்டுவதை நவீன கலாச்சாரம் என்கிறோம். முழு உடலையும் காட்டினால் தவறு என்கிறோம். ஆட்டுப்பண்னையில் வேலிபோட்டதன் பின் ஆடுகள் தவறினால் கவலைப்படுவதில் நியாயம் இருக்கிறது. எந்த வேலியும் போடாமல் துரந்து வைத்துவிட்டு அதையே கலாச்சாரமாக ஆக்கிவிட்டு தவறிப்போனதும் கவலைப்படுவதில் என்ன நியாயம் இருக்கிறது என்பது எனக்கு புரியவில்லை. சுருக்கமாகச் சொல்லப்போனால், வேரை விட்டு விட்டு கிளையைப் பிடுங்குவதால் எந்த அர்த்தமும் இல்லை. பச்சிளம் பாலகனையே சீர்கெடுத்திருக்கின்ற இந்த சினிமா (கலக்கப்போவது யார் என்ற நிகழ்ச்சியைப் பார்த்தால் பட்டென புரிந்து கொள்வீர்கள்) இள வயதினரை பாழ்படுத்தாமலா விடும்?

நடிகை ரஞ்சிதாவை நேற்று வரை ஆடை அணிந்த நிர்வாணியாக சினிமா உலகம் பாரத்தது. இன்று ஆடை இல்லா நிர்வாணியாக பார்த்திருக்கிறது. சிறிய வித்தியாசம்தான் பதட்டப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் வேடிக்கை என்னவென்றால் பாதி ஆடை அணிந்த நிர்வாணியாக இருக்கும் போது கை தட்டி ஊக்குவித்த சினிமா உலகம் பாதி ஆடை இல்லாத நிர்வாணியாக இருந்தமையினால் தூற்றுகின்றமைதான். விபச்சாரம் வரைக்குமுள்ள அனைத்தையும் படம் போட்டுக்காட்டிவிட்டு விபச்சாரத்தில் மாத்திரம் ஈடுபடவேண்டாம் என்று சட்டம்போடுவதில் வேடிக்கையும் வினோதத்தையும் தவிர வேறு என்னதான் இருக்கிறது.

இதனால்தான் முஸ்லிம்களின் வேதமாகிய அருள்மறை அல்குர்ஆன் கூறுகிறது.

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது. (அத்தியாயம் :17 வசன எண்:32)

அல்குர்ஆன் விபச்சாரத்தில் ஈடுபடாதீர்கள் என்று கூறவில்லை. மாறாக நெருங்கவே வேண்டாம் என்று கூறுகிறது. நுழைவதைத் தடுப்பதற்கு முன்னால் வாயிலையே அடைக்கின்றது இஸ்லாமிய மார்க்கம். மீண்டும் அல்குர்ஆன் கூறுகிறது.
வெளிப்டையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள். (அத்தியாயம்:06 வசன எண்:151)

இவ்வசனத்திலும் நெருங்காதீர்கள் என்ற வார்த்தையைத்தான் இறைவன் பயன்படுத்துகின்றான். இதனால்தான் இஸ்லாமியர்களாகிய நாங்கள் ஒட்டுமொத்த சினிமாக்களையும் தடுக்கப்பட்டவை என்று கருதுகிறோம். ஏனென்றால் எம்மைப் படைத்து பரிபாலிக்கின்ற இரட்சகன் விபாச்சாரம், மாணக்கேடான காரியங்களை நெருங்க வேண்டாம் என்று கூறுகிறான். சினிமாக்கள் அவற்றை நெருங்குவதற்கான நுழைவாயில்கள் அல்லாமல் வேறு என்னவாகத்தான் இருக்க முடியும்? அறிவுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்.

இந்த இடத்தில் தஸ்லீமா நஸ்ரின், ஏ.ஆர் ரகுமான் (இசையமைப்பாளர்), ரகுமான் (நடிகர்) அப்பாஸ், ரியாஸ்கான் போன்ற இஸ்லாமிய பெயர்தாங்கிகளை வதிவிளக்களிக்கின்றேன். இவர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று அழைத்துக்கொண்டாலும் உண்மையில் இவர்கள் இஸ்லாத்தின் துரோகிகள் என்றே கருதுகிறோம். இந்து மத அன்பர்கள் நடிகை ரஞ்சிதா மீது எவ்வளவ வெறுப்புணர்வு காட்டுகின்றார்களோ அதே அளவுக்கான வெறுப்புணர்வை இவர்கள் மீது நாம் காட்டுகின்றோம். ஸ்டீவன்சன் என்ற உலகப்புகழ்பெற்ற பாடகன் யூஸுப் இஸ்லாமாக, கமலாதாஸ் என்ற பெரும் எழுத்தாளரும், ஒழுக்கக்கேடுகளை ஆதரித்தவருமான பெண்மனி கமலா சுரய்யாவாக மாறி, இஸ்லாத்தின் புனிதத்துவத்தை கலங்கம் இல்லாமல் பாதுகாத்து கொண்டிருக்கின்ற அதே நேரம் நான் மேலே குறிப்பிட்டவர்கள் போன்று இஸ்லாமிய பெயர்தாங்கிகள் இஸ்லாத்தை கலங்கப்படுத்திக்கொண்டு இருக்கின்றார்கள் என்பதுதான் உண்மையாகும்.

எம்மைப் பொருத்தவரை ரஞ்சிதா மாத்திரமல்ல. தமிழ் உலக சினிமாவின் தாக்கத்தால் நடைபெருகின்ற எந்த விபச்சாரத்திற்கும் மேலே சொன்ன முஸ்லிம் பெயர்தாங்கிகளும் இறைவனிடதத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஏ.ஆர் ரகுமானுக்கு திரையுலகங்கள், ஆட்சிபீடங்கள் வேண்டுமானால் பரிசில்கள், விருதுகள் கொடுத்து கௌரவிக்கலாம். அவரைப் படைத்த இறைவன் நாளை மறுமையில் என்ன கொடுக்க இருக்கிறான் என்பதை மனச்சாட்சியின் அடிப்படையில் சிந்திப்பீராயின் நாளை உண்மையான முஸ்லிமாக மாறக்கூடும்.

இஸ்லாமியர்கள் அனைவராலும் இறை தண்டனைக்குரிய செயல் என்று அறியப்பட்ட இசையை தனது தொழிளாகக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஏ.ஆர் ரகுமானுக்கு இஸ்லாமிய கடவுள் கோட்பாடு பற்றிக்கூட எதுவும் தெரியாது என்பதுதான் உண்மையாகும். அவர் பிறப்பால் முஸ்லிமல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். உண்மையில் இஸ்லாத்திற்கு வருபவர்கள் அதிகப்படியாக இஸ்லாத்தின் தெய்வீகக்கோட்பாட்டினால் ஈர்க்கப்படுபவர்களே அதிகம். ஆனால் ஏ.ஆர் ரகுமான் அவர்களோ இஸ்லாம் எதனை வண்மையாக கண்டிக்கிறதோ அத்தகைய தர்கா வழிபாட்டில் தனனை இனைத்துக்கொண்டிருப்பதிலிருந்தே அவர் இஸ்லாம் என்றால் என்னவென்று தெரியாத ஒருவராக இருக்கின்றார் என்பது உள்ளங்காய் நௌளிக்கனியாகும். எனவேஇ ஏ.ஆர் ரகுமானுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை இந்து மத அன்பர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.)

ஓட்டுமொத்த சினிமா நடிகர் நடிகைகளை நோக்கிச் சொல்கின்றேன். ரஞ்சிதாவின் இந்த செயலுக்கு சினிமா நடிகையாக இருந்ததைத் தவிர அவர் செய்த பாவம்தான் என்ன? இளைய தலைமுறையினரின் கலாச்சார சீரழிவுக்கும், கல்வி வீழ்ச்சிக்கும், ஆத்மீக நெறிபிறழ்தலுக்கும் பின்னால் நீங்கள்தான் இருக்கிறீர்கள் என்பதை மனசாட்சியிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள்.

முஸ்லிம் பாடகர், நடிக, நடிகைகளே! அற்ப சொற்ப சுகத்துக்காகவும் உலக ஆதாயங்களுக்காகவும் நிரந்தர மறுமையையும் அதன் இன்பங்களையும் மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற உங்களுக்கு எமது வேதமாகிய அல்குர்ஆனை நோக்கி அழைப்புவிடுக்கின்றேன்.

குறிப்பு : நான் குறிப்பிட்ட கருத்தில் ஜாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பால் தாங்கள் தவறுகளைக் கண்டால் சுட்டிக்காட்டுங்கள். நியாயம் இருந்தால் மணமுவந்து ஏற்றுக்கொள்வேன். அடுத்து, எத்தனையோ இணையதளங்கள் தாங்கள் சொல்வது மட்டும்தான் சரி, மற்றவை எல்லாம் தவறு என்று கருதி நேர்களின் கருத்துக்களுக்க இடம் கொடுக்காமல் இருக்கும் போது எக்கருத்தாயினும் ஒளிவு மறைவு இல்லாமல் சாதகமோ பாதகமோ அவற்றை உலகுக்கு அப்படியே கொண்டுபோய்ச்சேர்க்கின்ற இந்நேரம்.காம் தளத்துக்கும் அதன் ஆசிரியருக்கும் என் மனமுவந்த நன்றியைத்தெரிவித்துக் கொள்கின்றேன்.

இணைவைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழலாமா...???


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு!!

இணைவைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழலாமா...???

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றி தொழுவது பற்றி நேரடியாக ஹதீஸ் ஏதும் இல்லை. ஆயினும் அது பற்றி எந்த முடிவுக்கு வரலாம் என்பதற்கான அடிப்படை குர்ஆனிலும்
ஹதீஸிலும் காணப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் மக்களுக்கு தொழுகை நடத்தி வந்தார். அவர் ஒரு நாள் கிப்லாவை நோக்கி எச்சில் துப்பினார். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் தொழுது முடித்தவுடன் இனி மேல் அவர் உங்களுக்கு தொழுகை நடத்தக் கூடாது என்று மக்களிடம் கூறினார்கள். அவர் மற்றொறு தடவை தொழுவிக்க முயன்ற போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை அவரிடம் தெரிவித்தனர். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்ட போது நீ அல்லாஹ்வையும் அவனது துதரையும் துன்புறுத்தி விட்டாய் எனக் கூறினார்கள்.

அறிப்பவர் : அஹ்மத் (ர)
நுற்கள் : அபூதாவூத்(407). அஹ்மத்(15966)





நபிகள் நாயகம் பார்த்துக் கொண்டிருக்கும் போது கிப்லாவின்பால் எச்சில் துப்பியவர் இமாமத் செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளனர்.



வெளிப்படையாக பகிரங்கமாக பாவம் செய்பவர் தொழுகை நடத்தும் தகுதியை இழந்து விடுகிறார் என்பதை இதிருந்து அறியலாம்.



ஆனால் தொழுத தொழுகையை திருப்பித் தொழுமாறு மக்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லையே என்று சிலர் வாதிடலாம். சட்டம் இயற்றப்படாத நேரத்தில் சட்ட மீறல் கிடையாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கட்டளையிட்ட பிறகு தான் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருகிறது. அதற்கு முன் செய்த செயலை திரும்பச் செய்ய வேண்டியதில்லை.



கிப்லாவை நோக்கி எச்சில் துப்புவதை விட அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல் கடுமையானது என்பதில் சந்தேகம் இல்லை.



மேலும் இது குறித்து திருக்குர்ஆன் வசனங்களும் கடும் போக்கை காட்டுங்கின்றன. அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போர் பள்ளி வாசல்களை நிர்வகிக்க் கூடாது. அந்த உரிமையும் தகுதியும் அவர்களுக்கு இல்லை என்று திருக்குர்ஆன் கூறுகிறது.



இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.



(திருக்குர்ஆன் 9 : 17



தொழுகைக்கு தலைமை தாங்குவது தான் நிர்வகிப்பதில் முக்கியமானதாகும்.. தாங்கள் இணை கற்பிப்பதை பகிரங்கமாக அறிவித்துக் கொண்டுள்ளவர்களை இமாமாக ஏற்கக் கூடாது என்பதை இதிருந்து அறியலாம்.







மேலும் இணை கற்பிப்பவருக்கு பாவ மன்னிப்பு கேட்கக் கூடாது என திருக்குர்ஆன் கூறுகிறது.



இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.



(திருக்குர்ஆன் 9 : 113)



இணை கற்பிக்கும் இமாமை பின்பற்றும் போது தொழுகையில் நாம் கேட்கும் பாவமன்னிப்பு அவருக்கும் உரியதாகிறது. இந்தக் காரணத்திற்காகவும் இணை கற்பிப்போரை பின்பற்றக் கூடாது.



மேலும் இணை கற்பிப்போரை பொறுப்பாளராக ஆக்கக் கூடாது என்று பின் வரும் வசனங்கள் கூறுகின்றன.



நம்பிக்கை கொண்டோர், நம்பிக்கை கொண்டோரை விட்டு விட்டு (ஏக இறை வனை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஆக்கக் கூடாது. இவ்வாறு செய்பவருக்கு அல்லாஹ்விடமிருந்து (பாதுகாப்பு) எதுவுமில்லை. அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தவிர. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். திரும்புதல் அல்லாஹ்விடமே உள்ளது.



(திருக்குர்ஆன் 3 : 28)



(இறை) மறுப்பை விரும்புவார்களானால் அவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்! உங்களில் அவர்களை உற்ற நண்பர்களாக்குவோரே அநீதி இழைத்தவர்கள்.



(திருக்குர்ஆன் 9 : 23)



அவர்கள் நம்பிக்கை கொண்டோரை விடுத்து (ஏக இறைவனை) மறுப்போரை உற்ற நண்பர்களாக்கிக் கொண்டனர்.அவர்களிடம் கண்ணியத்தைத் தேடுகிறார்களா? கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது.



(திருக்குர்ஆன்4 : 139)


நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்டோரை விடுத்து (ஏக இறைவனை) மறுப்போரை உற்ற நண்பர் களாக்கிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்கு எதிரான சான்றை அல்லாஹ்வுக்கு ஏற்படுத்திக் கொடுக்க விரும்புகிறீர்களா?



(திருக்குர்ஆன் 4 : 144)


தொழுகை என்பது அமல்களிலேயே மிக சிறந்த அமலாகும். ஒரு முஸ்லிம் அதை சிறந்த முறையில் கடைபிடிக்கும் பட்சத்தில் அது அவருக்கு சிறந்ததாக அமைந்து விடும். ஜமாஅத்தாக தொழும் தொழுகையின் சிறப்புப் பற்றி பல ஹதீஸ்கள் வந்துள்ளன. அந்த ஹதீஸ்களையெல்லம் படித்து நிறைய நன்மையை பெறுவோம் என்ற எண்ணத்தில் பள்ளிக்கு செல்லும் தவ்ஹீத் வாதிகளில் பலருக்கு சட்டென்று ஒரு ஊசலாட்டம் மனதில் எழுகிறது. இந்த பள்ளி இமாம் நம் கொள்கையை சார்ந்தவர் அல்லவே! எனவே இவர் பின்னால் நின்று தொழுதால் நம் தொழுகை கூடுமா...? என்று. சிலர் ஊசலாட்டத்தை புறக்கணித்து விட்டு ஜமாஅத்தில் சேர்ந்து விடுகிறார்கள். மற்ற சிலர் ஊசலாட்டத்தை மேலும் வளர்த்துக் கொண்டு ஒதுங்கி - தனித்து விடுகிறார்கள் அல்லது தன் கொள்கைக் உட்பட்டவரையாக தேடி தனி ஜமாஅத் அமைத்துக் கொள்கிறார்கள்.

எந்த முன்னோக்கமும் இன்றி திறந்த மனதுடன் குர்ஆன் சுன்னாவை அணுகும் போது இணைவைப்பு உட்பட எந்த தீய காரியத்தை செய்பவராக இருந்தாலும் அவரை பின்பற்றி தொழக் கூடாது என்பதற்கு எந்த ஒரு இடத்திலும் தடை வரவில்லை. நாம் ஏற்படுத்திக் கொண்ட ஊசலாட்டம்தான் நமக்கு தடையாக இருக்கிறது.

முஸ்லிம் என்ற தன்னை அறிவித்துக் கொண்டு தொழுகைக்கு இமாமத் செய்யும் எவரையும் பின்பற்றி நாம் தொழலாம்.

ஒருவர் ஷிர்க் - வட்டி போன்ற கடும் குற்றங்களை செய்கிறார். முஸ்லிம் என்ற நிலையில் இமாமத்திற்காக நிற்கிறார் என்றால் அவருடைய பாவம் அவரை பாதிக்கும் நிலையில் அவரை பின்பற்றி தொழுவதால் நம்முடைய தொழுகைக்கு எத்தகைய பாதிப்பும் வரப்போவதில்லை.

பாவம் செய்யும் எந்த ஒரு ஆத்மாவும் தனக்கே கெடுதியை தேடிக் கொள்கிறது ஒரு ஆத்மாவின் பாவ சுமையை மற்ற ஆத்மா சுமக்காது. (அல் குர்ஆன் 6:164)

நம் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய இந்த ஒரு அறை வசனம் போதும். ஒருவர் சுமையை அடுத்தவர் சுமக்க மாட்டார் என்பது இஸ்லாத்தின் மிக முக்கிய கோட்பாடுகளில் ஒரு கோட்பாடாகும். எனவே இமாமத் செய்பவர் எத்தகைய பாவத்தில் மூழ்கி இருந்தாலும் அவரது பாவம் நம்முடைய அமல்களை ஒரு போதும் பாதிக்காது என்பதால் அத்தகையோரை பின்பற்றி தொழுவதற்கு தடை எதுவும் இல்லை.

எவர் நம் தொழுகையை தொழுது - நம் கிப்லாவை முன்னோக்கி - நாம் அறுத்ததை சாப்பிடுகிறாரோ அவர் முஸ்லிம். அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பிலும் அவன் தூதரின் பாதுகாப்பிலும் இருக்கிறார். மற்ற முஸ்லிம்களுக்கு இருக்கும் உரிமைகளும் கடமைகளும் இவருக்கும் உண்டு என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அனஸ்(ரலி) புகாரி - திர்மிதி)

ஒருவரை முஸ்லிம் என்று தெரிந்துக் கொள்வதற்கு வெளிப்படையான பல அடையாளங்களை இஸ்லாம் காட்டுகிறது. அந்த அடையாளங்களில் சிலது இந்த ஹதீஸில் வந்துள்ளது.

நம் - அதாவது முஸ்லிம்களின் தொழுகையை தொழுதல்

நம் - முஸ்லிம்களின் கிப்லாவை முன்னோக்குதல்

நம் - முஸ்லிம்களின் குர்பானியில் பங்குபெறுதல்.

ஒருவர் முஸ்லிம்களின் தொழுகையை தொழுவதற்காக நின்று - முஸ்லிம்களின் கிப்லாவை முன்னோக்குகிறார் இந்நிலையில் அவரை பின்பற்றி தொழ மனம் இடங் கொடுக்காமல் ஊசலாட்டம் ஏற்பட்டால் ஊசலாட்டத்தைதான் புறக்கணிக்க வேண்டும் ஏனெனில் ஊசலாட்டம் ஷெய்த்தானின் ஆயுதமாகும்.

அதே ஹதீஸில் மற்ற முஸ்லிம்களுக்கு உள்ள உரிமையும் கடமையும் இவருக்கும் உண்டு என்ற வாசகத்தையும் கவனிக்க வேண்டும்.

இமாமத் - ஜமாஅத் தொழுகை என்பது கொள்கையின் அடிப்படையில் இஸ்லாத்தில் நிர்ணயம் செய்யப்படவில்லை. தேவையான சந்தர்பங்களில் முஸ்லிம்கள் ஒருங்கிணைந்து வணங்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடேயாகும்.

தெளிவான வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் இமாமத் செய்பவரின் கொள்கையும் பின்பற்றி தொழுபவரின் கொள்கையும் பின்னி பிணைந்திருக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம் எதுவுமில்லை. இமாமுக்கும் மஃமூம்களுக்கும் உள்ள தொடர்பு முதல் தக்பீரிலிருந்து ஸலாம் கொடுக்கும் வரைதான். அதன் பின் அவர் யாரோ, நாம் யாரோ அவ்வளவுதான். அது ஒரு தற்காலிக கூட்டமைப்பிற்குரிய தலைமைதான் என்பதை விளங்கிக் கொண்டால் ஊசலாட்டம் அகன்றுவிடும்.

எனவே எந்த இமாமையும் பின்பற்றி தொழலாம். நம்முடைய அமல்கள் நம் எண்ண அடிப்படையில் சரியாக இருக்கும் வரை மற்றவர்களால் நம் அமல்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்பதே உண்மையாகும்..!!

மனித உடல் பற்றிய தகவல்கள்.


  • ஆண்களின் கண் இமை துடிப்பினை விடவும் இரட்டிமடங்கு வேகத்தில் (தடவை) பெண்களின் கண் இமை துடிக்கின்றது.
  • பெண்களின் தலைமுடி ஆண்களின் முடியை விடவும் மெல்லியனவாம்.
  • அறிவாற்றல் கூடியவர் தலைமுடியில் அதிக செம்பு, நாகம் உலோகங்கள் அதிகமாக இருப்பது அறியப்பட்டுள்ளது.
  • சாதாரண மனிதனின் உயரம் காலையில் இருந்ததை விடவும் மாலையில் 1 cm குறைவாக இருக்குமாம்.(இது மூட்டு பகுதிகளில் காணப்படும் இடைவெளி அமுக்கம் காரணமாக இல்லாது போவது இதற்கு காரணமா சொல்லப்படுகின்றது.)
  • மனிதனின் கண் இமையில் அண்ணளவாக 550 முடிகள் (மயிர்கள்) உள்ளன.
  • மனித உடம்பில் நாக்கிலுள்ள தசைகள் தான் தசைகளில் மிகவும் பலம் வாய்ந்தவை.
  • எமது நாக்கில் உள்ள சுவை உணரிகள் 10 நாட்களுக்கு ஒரு தடவை புதுப்பிக்கிறன.
  • வீடுகளில் காணப்படும் தூசியின் பெரும் பகுதி மனித உடலில் இருந்து புறப்பட்ட இறந்த தோல்களாகும்.
  • எமது உடம்பில் ஒரு செக்கன் காலத்தில் 15 மில்லியன் இரத்த சிவப்பு கலங்கள் அழிக்கப்பட்டும் உருவாக்கப்பட்டும் வருகின்றது.
  • ஒரு சாதாரண மனிதனின் உடலில் வாழ் நாளில் 10,000 கலன் உமிள்நீர் உற்பத்தியாகின்றது.
  • அதிக கரற் (Carrots) உண்டதன் பின்னர் மனித தோலின் நிறம் வெழுப்பாக (கரற் நிறத்தினை ஒத்ததாக) மாறுகின்றதாம்.
  • சராசரி மனிதர் ஒரு வருடத்தில் 10 மில்லியன் தடவை சுவாசிக்கின்றனர்.
  • மனித கையின் நடுவிரலின் நகங்கள் மிக வேகமாக வழர்கின்றன. சுட்டு விரல் தான் விரல்களிலேயெ உணர்சிகளை அதிகம் உணரவல்லது.
  • மனித உடலின் மொத்த எடை மனித மூலையை விட 40 மடங்கு பெரியது.
  • மனித எலும்புகளில் மிகவும் பலம் மிக்கது தாடை (முகப்பகுதி) எலும்புகளாகும்.
  • உடல் உறுப்புகளிலேயே கண் மட்டும் தான் பிறந்தவுடன் உள்ள அதே அளவில் எப்போதும் உள்ளது , மற்றய எல்லா உறுப்புகளும் வளர்ச்சியுடன் தொடர்ந்து மாறுபடுகின்றன.
  • ஆரோக்கியமான மனிதனின் உடல் வெப்பநிலை (படத்தில்) 37 பாகை செல்சியஸ் (C) அல்லது 98.6 பாகை பரணைற் (F) வெப்பநிலையில் எப்போதும் நியமமாக இருக்கின்றது.
  • புத்திசாலிகளின் முடி(ரோமம்,மயிர்)இல் அதிக அளவில் நாகம்,செம்பு மூலகங்கள் உள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • சராசரி தினமும் ஆண்கள் 40 முடிகளையும் பெண்கள் 70 முடிகளையும் இழக்கின்றனர்.
  • மணிக்கட்டுக்கும் முழங்கை மடிபுக்குமான தூரம் கால் பாதத்தின் அளவுக்கு சமமானது.
  • மினித் இரை பைகள் ஒவ்வொரு 3 நாட்களுக்கு ஒரு தடைவை புதிய உட் சுவர் ஒன்றை பெறுகின்றது.
  • ஒரு நாளைக்கு மனித இதயம் சராசரி 101,000 தடைவை துடிக்கின்றது.
  • ஒரு மனிதன் வாழ்நாளில் சராசரி 3 பில்லியன் தடைவை துடிப்பதன் மூலம் 400 மில்லியன் லீற்றர் இரத்தத்தை உடலில் பாச்சுகிறது.
  • ஒரு நாளில் உங்கள் வாய் உள் சுரக்கப்படும் உமிழ் நீர் ஒரு லீற்றர்.
  • நீங்கள் ஒரு நாளில் சராசரி 23,000 தடைவை சுவாசிகின்றீர்கள்.
  • மனிதன் வாழ்நாளில் 75,000 லீற்றர் தண்ணீர் குடிக்கின்றான்.

நொச்சி இலையின் மருத்துவ குணம்..


சாலை ஓரங்களிலும் வேலிகளிலும் காணப்படும் நொச்சி இந்தியா முழுவதும் வளரும் தாவரமாகும். புதர்செடியாகவும், சிறிய மரமாகவும் வளரும் இந்த தாவரத்தின் இலைகள் கூட்டிலை வகையினால் ஆனது. இலைகள், வேர், பட்டை, மலர்கள், கனி, விதை மற்றும் முழுத்தாவரமும் பயன்படுபவை. கிராமப்புறங்களில் தானியங்களை சேமிக்கும் பொழுது நொச்சித்தழைகளை உடன் வைத்து விடுவர். இது பூச்சிகள் தோன்றுவதை தடுக்கும்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

இத்தாவரத்தில் லைனோலியிக், ஒலியிக், பால்மிடிக் போன்ற கரிம அமிலங்கள், கரோட்டின், வைட்டமின் சி ஈரிடாய்டு குளுகோசைடு, குக்குபின், நெகுண்டோசைடு, நிசிண்டாசைடு

காசநோய் புண்களை குணப்படுத்தும்

இலைகள் உடல் உறுப்புகளின் செயலியல் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தி சரி செய்ய வல்லது. பால்வினை நோய்களை குணப்படுத்துகிறது. நோய்க்கிருமிகளை ஒழிக்க வல்லது. மேல்பூச்சாக பெரிதும் பயன்படுகிறது. வீக்கம் மற்றும் மூட்டுவலி போக்க உதவும். மூட்டுவலி உள்ளவர்கள் நொச்சி இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளித்தால் பயன் அடைவர். காய்ந்த இலைகளின் புகை தலைவலி மற்றும் சளி அடைப்பினை நீக்கும். நாள்பட்ட புண்களில் இருந்து ஒழுகும் துர்நாற்றமுள்ள சீழ் மற்றும் பூச்சிகளை ஒழிக்க இலையின் சாறு மேல் பூச்சாக பயன்படுத்தப்படுகிறது. இலைச்சாறு கொண்டு தயாரிக்கப்பட்ட தைலம் காசநோய் புண்களை ஆற்ற வல்லது.

மூட்டுவலிக்கு மருந்து

முழுத்தாவரமும், சிறந்த மருத்துவ பயன் கொண்டது. வயிற்றுவலி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலற்சி, கண்நோய், வீக்கங்கள், வெண்குஷ்டம், கணைய வீக்கம் ஆகியவற்றினைப் போக்கக் கூடியது. தலைமுடி வளர்தலை ஊக்குவிக்கும். மூட்டுவலிக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

குடல்பூச்சிகளுக்கு எதிரானது

வேர் சிறுநீர் போக்கு தூண்டுவி, சளி அகற்றும்.காய்ச்சல் போக்குவி, வலுவேற்றும். கட்டிகள் மற்றும் குடல்வலி, பசியின்மை, பெருவியாதி ஆகியவற்றில் மருந்தாக உதவுகிறது. குடல் பூச்சிகளுக்கு எதிரான செயல்திறன் கொண்டது. வேர்பட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட சாராயத் தயாரிப்பு மூட்டுவலி மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சலை போக்க வல்லது.

கல்லீரல் நோய்களுக்கு மருந்து

மலர்கள் குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது. காலரா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றன. விதைகளும் குளிர்ச்சி தருபவை, தோல்வியாதி மற்றும் பெருவியாதிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

கனிகள் நரம்புகளுக்கு வலுவேற்றியாக உதவுகின்றன. காய்ந்தவை கிருமி நாசினியாகச் செயல்படுகின்றன. நீர் கோர்வை போக்கக் கூடியவை. மாதவிடாய் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.

எலுமிச்சை..உயிர் காக்கும்.


தலைப்பை படித்த உடன் நம்ப முடியவில்லை அல்லவா?
இது உண்மைதான்; நம்புங்கள்.

ஆம்! கேன்சர் என்னும் புற்றுநோய் அரக்கனுக்கு மருந்தாகிறது எலுமிச்சை.
உலகம் முழுவதும் கேன்சருக்கு பலியாவோர் எண்ணிக்கை கொஞ்ச நஞ்சமல்ல. இந்த கொடிய வியாதியை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போதுள்ள மருத்துவ முறைகளில் ஆரம்ப கட்டத்தில் நோயை கண்டுபிடித்துவிட்டால் மட்டுமே குணப்படுத்த முடியும். மற்றபடி நோய் பாதிப்பை தடுத்து வாழ்நாளை அதிகரிக்க மட்டுமே முடியும் என்ற நிலை உள்ளது.
உலக மருத்துவ விஞ்ஞானிகள் புற்று நோயை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த செய்தியின் துவக்கத்தில் சொல்லப்பட்ட தகவல்.
அமெரிக்காவின் பால்டிமோரில் செயல்பட்டு வரும் ஒரு சுகாதார அமைப்பு தான் இந்த பெருமைக்குரிய கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர்கள். தற்போது இந்த வியாதிக்கு உள்ள சிகிச்சைகளில் முக்கியமானது கீமோ தெரபி.
இந்த கீமோ தெரப்பியின் பக்க விளைவுகளையும் தாங்க முடியாத வேதனைகளையும் சொல்ல வேண்டியதில்லை. இதற்கொரு வரப்பிரசாதமாக வந்துள்ளது தான் எலுமிச்சை.
உடலில் நல்ல செல்களுக்கு எந்த விதமான ஆபத்தையும் ஏற்படுத்தாமல், ஆபத்தான செல்கள் மற்றும் கேன்சராக மாறிவிடக்கூடிய கட்டிகளை மட்டுமே அழிக்கும் அபரிமிதமான ஆற்றல் பெற்றது எலுமிச்சை என்கிறது இந்த ஆராய்ச்சி.
கீமோ தெரப்பியைவிட 10 ஆயிரம் மடங்கு ஆற்றல் கொண்டது இந்த எலுமிச்சை என்பது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள ஆச்சரியமான உண்மை.
அதுமட்டுமா?
ஆபத்தான பாக்டீரியாக்கள், கிருமிகள் மற்றும் காளான்களையும் ஒரு கை பார்க்காமல் விடுவதில்லையாம் இந்த எலுமிச்சை.
இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துவது, மன அழுத்தங்களை கட்டுப்படுத்துவது, நரம்பு கோளாறுகளை சரி செய்வது என்று எலுமிச்சையின் மகிமை.... பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
மார்பகம், ப்ராஸ்டேட், கல்லீரல் மற்றும் கணையம் என்று கேன்சர் எங்கிருந்தாலும் அவற்றை அழிக்கும் பணியை சிறப்பாக செய்ய முடியுமாம் எலுமிச்சையால். இத்தகைய சிறப்பு வாய்ந்த எலுமிச்சையின் மருத்துவ குணத்தை பயன்படுத்தி புற்று நோயை அழிக்கும் மருந்துகளை உருவாக்கும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த அரிய கண்டுபிடிப்பு மருத்துவ ரீதியாக வெளி வந்தால் புற்று நோய்க்கு சிக்கனமான, முற்றிலுமான தீர்வாக இருக்கும். எனவே, தற்போது இதற்கான மருந்துகளை தயார் செய்து கொள்ளை லாபம் ஈட்டி வரும் வர்த்தக நிறுவனங்களின் வயிற்றில் புளியை கரைத்து வருகிறது எலுமிச்சை.