Wednesday 18 May 2011

மனிதனின் தோற்றமும்..வளர்ச்சியும்...


உயிரினங்களின் தோற்றம் (On the Origin of Species) ஆங்கில உயிரியலாளர் சார்ல்ஸ் டார்வின் அவர்களால் 1859 ம் ஆண்டு படிவளர்ச்சிக் கொள்கையை விபரித்து வெளியிடப்பட்ட நூல் ஆகும். உலகின் அறிவியல் நூல்களில் மிக முக்கிய வெளியீடுகளில் ஒன்றாக இது மதிக்கப்படுகிறது. இந்த நூல் படிவளர்ச்சிக் கொள்கையை ஆதாரங்களுடன் விளக்குகிறது. அன்றுவரை உயிர்களின் தோற்றதைப் பற்றி சமயத் தொன்மங்களே கருத்துக் கூறின. இந்த நூலின் இயற்கையான விளக்கம் உயிரியல் மரபியல் புரட்சிக்கு வித்திட்டு, உலகை மாற்றியமைத்தது. 

இழைமணியப் பழையோள் அல்லது இழைமணிய முதற்றாய் என்பது வாழும் மாந்தரின் தாய்வழி மூதாதையர்கள் அனைவருக்கும் பொதுவாக இருந்ததாகக் கருத இடம் தரும் ஒரு பெண் தொன்முது தாயைக் (மூதாயைக்) குறிக்கும் சொற்றொடர். இப்பெண்ணின் இழைமணி மரபுப்பொருளின் (மைட்டோக்கோன்றிய டி.என்.ஏ யின்) ஒரு படியுருதான் வழிவழியாக ஒவ்வொறு தாயிடமிருந்தும் குழந்தைகளுக்குச் சென்று இன்று வாழும் மனிதர்களின் கண்ணறைகளின் உள்ளுறுப்புகளானன இழைமணிகளுக்குள் இருக்கின்றன. பைபிள் கதையில் வரும் ஏவாளின் பெயரைக் கொண்டு இம்மூதாதையப் பெண்ணை Mitochondrial Eve (இழைமணி ஏவாள்) என்றும் ஆங்கிலத்தில் அழைப்பர். இருந்தாலும் இப்பெண் மாந்தரினத்தின் முதற்பெண்ணல்ல, மாறாக தொடர்ச்சியாக வந்த மரபுவழியில் இன்றும் தாய்வழி வழித்தோன்றல்களைக் கொண்ட கடைசிப் பெண் மட்டுமே. இப்பெண் வாழ்ந்த நாட்களில் இருந்த மற்ற பெண்களின் வழித்தோன்றல்கள் ஆண் வழியில் வந்து இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். அதேபோல் இப்பெண்ணின் தாயும் பிற மூதாதையர்களும் வாழ்ந்துள்ளனர். இந்த இழைமணி முதல்தாய் படியுரு ஆணின் ஒய்-நிறப்புரிக்கு (ஒய்-குரோமோசோம்)க்கு இணையான பெண் படிவம். ஆனால் தந்தை வழி வரும் பொது ஆண் படியுரு வேறு காலத்தது (பிற்காலத்தது).இந்தத் தொன்முது தாய் ஏறத்தாழ 170,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, அல்லது ஏறத்தாழ 8,000 தலைமுறைக்கு முன்பு வாழ்ந்த ஒரு பெண்மணி. இக் காலப்பகுதியானது, ஆப்பிரிக்காவை விட்டு மாந்தர்கள் புலம் பெயர்ந்து சென்றதாக கருதப்படும் 60,000 ஆண்டுகள் என்னும் காலக்கணக்குக்கும் முற்பட்ட காலம்.
தொல்லுயிர் எச்சம் (Fossil) அல்லது புதைபடிவம் என்பது தாதுப்படுத்தப்பட்ட அல்லது தாதுப்பொருளால் நிரப்பப்பட்ட தாவரங்கள், விலங்குகள் மற்றும் அவற்றின் கால்தடங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். அவை, மூலக்கூறு உயிரியலாளர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்களை அளிக்கின்றன. சில சமயங்களில் மரப்பிசினில் சிக்கும் சிறு பூச்சிகள் எச்சங்களாகின்றன ( அம்பர்). வாழும் உயிரில பழைய தொல்லுயிர் எச்சங்களை ஒத்து இருப்பின் அவற்றை வாழும் தொல்லுயிர் எச்சங்கள் எனக் குறிப்பிடுவர். 
வாழும் தொல்லுயிர் எச்சம் வாழும் உயிரினங்களில் சில பழைய தொல்லுயிர் எச்சங்களை ஒத்து இருப்பின் அவற்றை வாழும் தொல்லுயிர் எச்சங்கள் எனக் குறிப்பிடுவர். இலங்கையில் கண்டி வாவி, தம்பலகாமம் போன்ற பிரதேசங்களில் தொல்லுயிர் எச்சங்களை காணலாம் .
தொல்லுயிரியல் என்பது பாறைகளில் பதிவாகியுள்ள பண்டைய தாவரங்கள் மற்றும் விலங்குகளின் தொல்லுயிர்ப் படிவங்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றின் விருத்தி பற்றி ஆராயும் துறையாகும். இது உடற் படிவங்கள், வழித்தடங்கள் (tracks), வளைகள் (burrows), cast off parts, கழிவுப் படிவங்கள் (fossilized feces) மற்றும் வேதியியல் எச்சங்கள் போன்றவற்றின் ஆய்வுகளையும் உள்ளடக்கும். புவியியலிலும், காலநிலையிலும் ஏற்பட்ட நீண்ட கால இயல்பியல் மாற்றங்கள் எவ்வாறு உயிரினங்களின் படிமலர்ச்சியைப் பாதித்தன, எவ்வாறு வாழ்சூழலியல் முறைமைகள் (ecosystems)இம்மாற்றங்களுக்கு ஏற்றவாறு செயற்பட்டு புவிச் சூழலில் மாற்றங்களை ஏற்படுத்தின, இந்தப் பரஸ்பர மாற்றங்கள் தற்கால உயிரினப்பல்வகைமையில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தின என்பன பற்றி ஆராய்வதன் மூலம், பண்டைக்கால உயிர்வாழ்க்கையை நவீன தொல்லுயிரியல் உரிய சூழலில் அமைத்துக்காட்டுகிறது. 
தொல்பொருளியல் (Archaeology) என்பது, கட்டிடக்கலை, தொல்பொருட்கள் (artifacts), தொல்லுயிர் எச்சம், மனித மிச்சங்கள், மற்றும் நிலத் தோற்றங்கள் என்பன உள்ளிட்ட எஞ்சிய பொருட்களைக் வெளிக்கொணர்ந்து, ஆவணப்படுத்தி, பகுப்பாய்வு செய்வதன் மூலம் செய்யப்படும் மனிதப் பண்பாடு பற்றிய படிப்பாகும். தொல்பொருளியலின் இலக்குகள் வேறுபடுவதுடன், இதன் நோக்கங்கள், பொறுப்புக்கள் தொடர்பான வாதங்களும் இருந்துவருகின்றன. சில இலக்குகள், வரலாற்றுக்கு முந்திய மற்றும் வரலாற்றுக் கால மனிதப் பண்பாட்டின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் ஆவணப்படுத்தல், அவற்றை விளக்குதல்; பண்பாட்டு வரலாற்றைப் புரிந்து கொள்ளுதல்; பண்பாட்டுப் படிமுறை வளர்ச்சியைக் கால வரிசைப்படுத்தல்; மனித நடத்தைகள் பற்றி ஆய்வு செய்தல் என்பவற்றை உள்ளடக்குகின்றன. தொல்லியலாளர்கள், தங்கள் துறையில் பயன்படுத்தப்படும் முறைகள் பற்றி ஆய்வு செய்வதிலும் கவனம் செலுத்துகின்றனர். அத்துடன், கடந்தகாலம் பற்றிய அவர்களது கேள்விகளில் தொக்கி நிற்கும் கோட்பாட்டு மற்றும் தத்துவம் சார்ந்த அடிப்படைகள் தொடர்பான ஆய்வுகளிலும் அவர்களுக்கு ஆர்வம் உண்டு. புதிய தொல்லியற் களங்களைக் கண்டுபிடித்தல், அவற்றில் அகழ்வாய்வு செய்தல், வகைப்படுத்தல், பகுப்பாய்தல் பேணிக்காத்தல் என்பனவெல்லாம், தொல்லியல் சார்ந்த வழிமுறைகளின் பல்வேறு முக்கியமான கட்டங்கள் ஆகும். இவை ஒருபுறம் இருக்கத் தொல்லியலில் பெருமளவு பல்துறைசார் ஆய்வுகளும் நடைபெறுகின்றன. இதற்காக இது, வரலாறு, கலை வரலாறு, செந்நெறி இலக்கியம், புவியியல், நிலவியல், இயற்பியல், தகவல் அறிவியல், வேதியியல், புள்ளியியல், தொல்பழங்காலச்சூழலியல், தொல்விலங்கியல், தொல்தாவரவியல் போன்ற துறைகளில் தங்கியுள்ளது.
பீக்கிங் மனிதன் 250,000 ஆண்டுகளின் முன் வாழ்ந்த மனிதன். இவன் முழுவளர்ச்சியடையாத மனிதக்குரங்கு மனிதன். 1929 இல் பீக்கிங் மனிதனின் மண்டையோட்டுப் புதையுருவம் சீனாவின் பீக்கிங் நகரருகில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனாலேயே இம்மனிதனுக்கு இப்பெயர் வழங்கப்பட்டது.பீக்கிங் மனிதர்கள் கல்லாயுதங்களைப் பயன்படுத்தினர். நெருப்பின் பயனை அறந்திருந்தனர்.
நியண்டர்தால் (Neanderthal, Homo neanderthalensis), ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் வாழ்ந்திருந்த ஹோமோ வகை இனமாகும். முன்-நியாண்டர்தால் குணங்கள் 3,50,000 ஆண்டுகளுக்கு முன்னமே ஐரோப்பாவில் காணப்பட்டது.முழுமையான நியண்டர்தால் குணங்கள் 1,30,000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகிவிட்டிருந்தது.24, 000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் இவ்வினம் அழிந்துபோனது. நியண்டர்தால் மனித எச்சங்கள் ஜெர்மனியின் நியண்டர்தால் என்னும் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறான். இவன் நெருப்பை பயன்படுத்தினான்; குகையில் வாழ்ந்தான்; தோலாடை அணிந்தான்.“நியான்டர்தால் மனிதன், ஆஸ்ட்ராஸோ பித்தேகஸ் போன்றவைகளும் இந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள் தானே”
ஜாவா மனிதன்என்பது 1981 ஆம் ஆண்டில் இந்தோனீசியாவின், கிழக்கு ஜாவாவில் உள்ள பெங்காவன் சோலோ (Bengawan Solo) ஆற்றங்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவம் ஒன்றுக்குரிய மனித மூதாதை ஒருவனுக்கு வழங்கப்பட்ட பெயர் ஆகும். ஹோமோ இரெக்ட்டஸ் (Homo erectus) என்னும் உயிரியல் பெயரால் அழைக்கப்படும் இம் மனித மூதாதை தொடர்பில் கிடைத்த மிகப் பழைய தடயங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆதி மனிதன் 500,000 ஆண்டுகளின் முன் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. இதனைக் கண்டு பிடித்த இயுஜீன் டுபாய்ஸ் (Eugène Dubois) என்பவர் இவ்வகை மனிதனுக்கு பித்தெகாந்திராப்பஸ் இரெக்ட்டஸ் (Pithecanthropus erectus) என்னும் அறிவியற் பெயரை வழங்கினார். இப்பெயர், நிமிர்ந்த மனிதக் குரங்கு மனிதன் என்னும் பொருள்படக்கூடிய கிரேக்க, இலத்தீன் மொழி வேர்ச் சொற்களில் இருந்து உருவாக்கப்பட்டது. டுபாய்ஸின் கண்டுபிடிப்பு ஒரு முழுமையான மாதிரி அல்ல. இது, ஒரு மண்டையோட்டு மூடி, ஒரு தொடை எலும்பு, சில பற்கள் என்பன அடங்கியது ஆகும். இவை அனைத்துமே ஒரே இனத்துக்கு உரியவைதானா என்பதில் சில ஐயங்களும் எழுப்பப்பட்டு உள்ளன. இது போன்ற ஆனால் இதைவிட முழுமையான இரண்டாவது மாதிரி மத்திய ஜாவாவில் உள்ள சங்கிரான் என்னும் ஊரில் கண்டுபிடிக்கப்பட்டது. 1936 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இம் மாதிரியைத் தொடர்ந்து மேலும் பல இது போன்ற மாதிரிகள் இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன.

13.7 பில்லியன் ஆமு - உலகின் தோற்றம் 
3.2 மில்லியன் ஆமு - லூசி - en:Lucy (Australopithecus) 
1.9 மில்லியன் ஆமு - en:KNM ER 1813 
பழைய கற்காலம் - (2.5 மில்லியன் - 10,000 ஆமு)
இடைக் கற்காலம் - (11,500 - 10,000 ஆமு) 
கருவிகளை செய்து பயன்படுத்தல்: வில், படகு 
புதிய கற்காலம் - (10,000 கிமு - )
வேளாண்மைசெப்புக் காலம் - (3,300 கிமு - )
பண்டை நாகரிகங்கள் 
கிமு 3500 - மெசொப்பொத்தேமியா
கிமு 3150 - பண்டைய எகிப்து
கிமு 2600 - சிந்துவெளி நாகரிகம்
கிமு 2100 - en:Xia Dynasty
கிமு 1000 - பண்டைக் கிரேக்கம்
கிமு 27 - கிபி 476 : ரோமப் பேரரசு
கிபி 150 - கிபி 900 : மாயா நாகரிகம் 
634 - 1453 : முஸ்லீம் படையெடுப்புகள் - en:Muslim conquests 
1206 – 1368 - மொங்கோலியப் பேரரசு
1450 - அச்சிடல்1543 - அறிவியல் புரட்சி1583 - 1950 : பிரித்தானியப் பேரரசு1750 - தொழிற்புரட்சி 
1750 - இந்திய விடுதலை இயக்கம் - en:Indian independence movement 
1775 - 1783 - அமெரிக்க புரட்சி
1789 - 1899 - பிரெஞ்சுப் புரட்சி
1880 - 1914 : en:Scramble for Africa
1858 - படிவளர்ச்சிக் கொள்கை
1870 - en:Germ theory of disease
1879 - மின் விளக்கு
1879 - தானுந்து
1898 - அமெரிக்கப் பேரரசு
1914 - 1918 : முதல் உலகப் போர்
1917 - ரஷ்யப் புரட்சி
1929 - 1939 : பெரும் பொருளியல் வீழ்ச்சி
1940 - தகவல்புரட்சி
1939 - 1945 : இரண்டாம் உலகப் போர்
1945 - சீனப் பொதுவுடமைக் கட்சி வெற்றி
1945 - ஐக்கிய நாடுகள்
1945 - அரபு நாடுகள் கூட்டமைப்பு
1951 - ஐரோப்பிய ஒன்றியம்
1953 - டி.என்.எ அமைப்பு
1960 - பசுமைப் புரட்சி1966 - en:Moon landing
1990 - உலகளாவிய வலை
2000 - மனித மரபகராதித் திட்டம்
2001 - செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்
2002 - ஆபிரிக்க ஒன்றியம்
2004 - தென் அமெரிக்க நாடுகள் ஒன்றியம்
பிரபஞ்சம்-தமிழும்,தமிழரும் 
பிரபஞ்ச வரலாறில்,தமிழ் தோன்றியது எப்போது தமிழர் நாகரிகமும்,சீன நாகரிகமும் உலகின் மிகப் பழமையான இரு நாகரிகங்கள் என்பது வெள்ளிடை மலை. இந்தியாவும் சீனமும் எவ்வாறு உலகின் செல்வந்த நாடுகளாக விளங்கின. 
கி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. 
கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். 
கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம்.முதன் முதலில் தமிழ் நாட்டில் தோன்றியது.தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது. 
கி.மு. 470000 இக்கால இந்தியாவின் தமிழ் நாடு,பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது. 
கி.மு. 360000 முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 
கி.மு. 300000 யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர். 
கி.மு. 100000 நியாண்டெர்தல் மனிதன் கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர். கி.மு. 75000 கடைகி பனிக்காலம். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன். 
கி.மு. 50000 தமிழ்மொழியின் தோற்றம். 
கி.மு. 50000 - 35000 தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு. 
கி.மு. 35000 - 20000 ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம். 
கி-மு. 20000 - 10000 ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் ) 
கி-மு. 10527 முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன. 
கி.மு. 10527 - 6100 பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன். 
கி.மு. 10000 கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது.உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000. 
கி.மு. 6087 கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது. 
கி.மு 6000 - 3000 கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண ல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம். 
கி.மு. 5000 உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, அரப்பா. 
கி.மு. 4000 சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன். 
கி.மு - 4000 கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம்.சுமேரியாவில் புதைபொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது. 
கி.மு - 3200 சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின்முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர். கி.மு - 3113 அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம். 
கி.மு - 3102 சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது. மண்டையோட்டு வடிவங்களின் வகைகள் இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம். 
கி.மு - 3100 - 3000 ஆரியர்சுள் சித்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்துசமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன. 
கி.மு - 2600 எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம். 
கி.மு - 2387 இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது. 
கி.மு - 2000 - 1000 காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ்மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி. 
கி.மு - 1915 திருப்புரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது. 
கி.மு. - 1900 வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது. 
கி.மு. 1500 முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்குஏற்றுமதி செய்யப்பட்டது. 
கி.மு. - 1450 உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன. 
கி.மு. - 1316 மகாபாரத கதை வியாசரால் அமைக்கப் பட்டது. 
கி. மு. 1250 மோசசு 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினர்.
கி. மு . 1200 ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை. 
கி. மு. 1000 உலக மக்கள் தொகை 50 மில்லியன். 
கி. மு. 1000-600 வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது. 
கி. மு. 950 அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை. 
கி. மு. 950 வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம். 
கி. மு. 925 யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான். 
கி. மு. 900 இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம். 
கி. மு. 850பின் இபபோதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநாணூறு, புறநாணூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நாணூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின. 
கி. மு. 776 கிரேக்கத்தில் (கிரிசு) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி. குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி. பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்தது) சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு: கெராஸிமவ்) 
கி. மு. 750 பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது. 
கி. மு. 700 சொரோசுடிரேணியிசம் பெர்சியாவில் சொரோசுடரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா. 
கி. மு. 623- 543 கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார். 
கி. மு. 600 லாவோ - துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது. 
கி. மு. 600 கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, 
கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமசுகிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமசுகிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது. 
கி. மு. 599 - 527 மகவீரர் காலம். செயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து. 
கி. மு. 560 பித்தகோரசு கிரேகத்தில் (கீரிசு) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன. 
கி. மு. 551-478 கன்பூசியசு காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும். 
கி. மு. 500 கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன். 
கி. மு. 478 இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல். கி. மு. 450 ஏதேன்சில் சாக்கரடீசு புகழோடு இருந்த காலம். 
கி. மு. 428 - 348 சாக்கரடீசு மாணவர் புளுட்டோவின் காலம். 
கி. மு. 400 கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார். 
கி. மு. 350 - 328 உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்) 
கி. மு. 328 - 270 மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்) 
கி. மு. 326 அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை. 
கி. மு. 305 சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர். 
கி. மு. 302 சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல். 
கி. மு. 300 சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல். 
கி. மு. 300 கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. 
கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன. 
கி.மு. 273-232 மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது. 
கி.மு. 270-245 சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம். 
கி.மு. 251 புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார் 
கி.மு. 245-220 சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம். 
கி.மு. 221 புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது. 
கி.மு. 220 - 200 கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர். 
கி.மு. 220-180 குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம். 
கி.மு. 200 முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார். 
கி.மு. 200 தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார். 
கி.மு. 125-87 ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம். 
கி.மு. 87-62 செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி 
கி.மு. 62-42 யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்) 
கி.மு. 42-25 பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என ஒளவை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள். 
கி.மு. 31 உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு. 
கி.மு. 25-9 இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம். 
கி.மு. 9-1 கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம். 
கி.மு. 4 ஏசுநாதர் - கிருத்துவர் மதம் கண்டவர் பெத்தலயேமில் பிறந்தார். எனவேதான் கல்தோண்றி மண்தோண்றாக் காலத்தே தோண்றிய மூத்தகுடி தமிழ்க்குடி என்ற சொல்லடை வழக்கத்தில் வந்திருக்க வேண்டும்.


3 comments:

  1. சீனாவின் பழமையோடு ஒப்பிடும்போது இந்தியா என்ற ஒன்றே கிடையாது... பின்னர் எப்படி இந்தியா பழமையான நாடாக முடியும்...

    ReplyDelete
  2. நீங்கள் பதிந்துள்ள கருத்துகள் மிகுவம் அருமையான கருத்துகள்.... வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. அருமையான தகவல்கள் ..வாழ்த்துக்கள்

    ReplyDelete