Monday, 10 October 2011

நம் உள்ளே இத்தனை அழகா..? எண்ணி வியந்து போகும் அற்புத அழகு.

மனித உடம்பின் உள்ளுறுப்புக்களின் துல்லிய படங்கள் இவை. அதி துல்லிய உருப்பெருக்கு காட்டியின் துணைகொண்டு பிடிக்கப்பட்ட படங்கள்.உள்ளுக்குள் இவ்வளவு அழகாக இருக்கும் மனிதா! வெளியில் ஆயிரம் பேதங்கள் சொல்லி, நீ அழிந்து போவது ஏன்..?
Human Egg with Coronal Cells மனிதமுட்டையின் குறுக்குச் செல்கள்.

 Red Blood Cells குருதிச் செவ்வணுக்கள்.
Purkinje Neurons மூளையிலுள்ள நியூரான்கள்.
Human Embryo and Sperm மனித விந்தணுவின் மூலவுரு.
Alveoli in the Lung நுரையீரல் உட்புறம்.
Blood Clot குருதியுறை.
Blood Vessels Emerging from the Optic Nerve பார்வை நரம்பின் இரத்த நாளங்கள்.
Villi of Small Intestine சிறுகுடல்.
Split End of Human Hair தலைமுடியின் பிரி.
Colored Imge of a 6 day old Human Embryo Implanting  ஆறுநாட்களான மனித மூலவுரு.

Tuesday, 4 October 2011

குழந்தைகளின் பாலியல் வன்முறைகளை தடுப்பது எப்படி?


குழந்தைகளுக்கு அவர்கள் நான்கு வயதாக இருக்கும் போதே பாலியல் வன்முறைகளின் சில கூறுகளை அவர்களுக்கு விளக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

மிக முக்கியமாக எது “நல்ல தொடுதல்”, எது “மோசமான தொடுதல்” எது “பாலியல் தொடுதல்” என்பதை குழந்தைகளுக்கு புரிய வைப்பது அன்னையின் கடமையாகும்.

நல்ல தொடுதல் அன்னையின் அரவணைப்பைப் போல ஆனந்தமாய், பாதுகாப்பாய், உற்காசமூட்டுவதாய் இருக்கும். இவை இன்னும் மிச்சமிருக்கும் மனித நேயத்தின் வெளிப்பாடுகள்.

மோசமான தொடுதல் என்பதை அடித்தல், உதைத்தல், காயப்படுத்துதல் போன்ற வலி ஏற்படுத்தும் நிகழ்வுகளாகச் சொல்லிக் கொடுங்கள்.

மூன்றாவதாக மிக முக்கியமான “பாலியல் தொந்தரவுத்” தொடுதல் பற்றி விளக்குங்கள். இந்தியாவில் 72.1 % குழந்தைகள் தங்களுக்கு நேரும் பாலியல் தொந்தரவுகளைப் பற்றி வெளியே யாரிடமும் சொல்வதில்லை என்கிறது அரசு ஆய்வு. எனவே பாலியல் தொடுதல் பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளிடம் தெளிவாக விளக்கி விடுதல் மிகவும் அவசியமாகிறது.

தினமும் குழந்தைகளிடம் அன்றைய தினம் நடந்த செயல்கள், சந்தித்த மனிதர்கள் போன்ற அனைத்தையும் விரிவாக கேட்டு அறியுங்கள். ஏதேனும் பிழை நடந்திருப்பதாக உணர்ந்தால் பதட்டப்படாதீர்கள். முழுமையாய் கேளுங்கள்.

குழந்தை எதைச் சொன்னாலும் முழுமையாய் நம்புங்கள். பாலியல் தொந்தரவுகளை குழந்தைகள் ஒரு போதும் உருவாக்கிச் சொல்வதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஏதேனும் “விளையாட்டு” எனும் பெயரில் குழந்தைகள் பெரும்பாலும் ஏமாற்றப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதுண்டு என்பதை அன்னையர் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம்.

தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான வெளிப்படையான, நட்புறவும் நம்பிக்கையும் கூடிய உரையாடல் மிக மிக முக்கியம். இல்லையேல் குழந்தைகள் தங்கள் பிரச்சனைகளை வெளிப்படுத்தாமலேயே போய்விடும் அபாயம் உண்டு.

சில சூழல் அல்லது சில நபர்களுடைய அருகாமை சந்தேகத்தைத் தருவதாக இருந்தால் அந்த சூழலைத் தவிருங்கள். குறிப்பாக குழந்தை யாருடனாவது நெருங்குவதை விரும்பவில்லையெனில் சுதாரித்துக் கொள்ளுங்கள். அங்கே ஏதேனும் பிழை இருக்கலாம் !

உங்கள் குழந்தைகளை மூன்றாவது நபரிடம், நீங்கள் கூடவே இல்லாதபோது, ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கும் அதிகமாக செலவிட அனுமதிக்காதீர்கள்.

உங்கள் குழந்தையின் உடல் குழந்தைக்கு மட்டுமே சொந்தமானது. அதை வேறு யாரும் தொடும் உரிமை இல்லை என்பதை வெகு தெளிவாக, அழுத்தமாகவே குழந்தைகளிடம் சொல்லுங்கள். அதை மீறி யாரேனும் தொந்தரவு கொடுத்தால் கண்டிப்பான “நோ” சொல்ல குழந்தைகளைப் பழக்குங்கள்.

குழந்தைகளுடைய நடவடிக்கையில் பதட்டம், கோபம், மன அழுத்தம், சோகம் போன்ற உணர்வுகள் மேலோங்கியிருப்பதைக் கண்டாலோ, உடலில் ஏதேனும் அடையாளங்களைக் கண்டாலோ உஷாராகிவிடுங்கள்.

குழந்தைகளிடம் ஏதேனும் விரும்பத் தகாத நிகழ்வு நடந்தால் யாரைச் சந்திக்க வேண்டும், யாரிடம் பேசவேண்டும் என்பதைச் சொல்லி வையுங்கள்.

குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளருங்கள். வீட்டில் பெற்றோர் முன்மாதிரிகையாக இருப்பதும், குழந்தைகளிடம் நேரத்தைச் செலவிட்டு அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை வழங்குவதும் மிக மிக முக்கியம்.

குழந்தைகள் தவறு செய்தால் பக்குவமாய் திருத்துங்கள். பிழை செய்வது மனித இயல்பு, அதைத் திருத்துவதில் தான் மனித மாண்பு இருக்கிறது என்பதை உணர்த்துங்கள். இல்லையேல் பிழைகளை உங்களிடமிருந்து மறைக்கும் வழியையே குழந்தைகள் யோசிக்கும்.

திரையரங்கு, பேருந்து, பள்ளிக்கூடம், விளையாட்டுப் பூங்கா போன்ற இடங்களில் கவனமாக இருக்கவேண்டிய வழிமுறைகளை விளக்குங்கள். எதையும் பயமுறுத்தும் விதமாகச் சொல்லாமல் இருப்பது மிகவும் முக்கியம்.

“அம்மா, அப்பாவிடம் சொல்லாதே” என யாராவது ஏதாவது சொன்னார்களா, செய்தார்களா என்பதை குழந்தைகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். பாலியல் விஷயத்தில் வாக்குறுதிகளை உடைப்பதில் எந்தத் தவறும் இல்லை என்பதை குழந்தைகளுக்கு புரியவையுங்கள்.

அம்மாவிடம் சொல்லுவேன், அப்பாவிடம் சொல்லுவேன் “என பயமுறுத்தி யாராவது தொந்தரவு செய்தார்களா என்பதையும் கேட்டறியுங்கள். இத்தகைய “பிளாக் மெயில்” கள் பெரும்பாலும் தொடர்ச்சியான பாலியல் தொந்தரவுக்குள் குழந்தைகளை இட்டுச் செல்லும்.

யாராவது ஏதாவது அன்பளிப்புகள், இனிப்புகள் தந்தார்களா ? அல்லது தருவதாக வாக்களித்திருக்கிறார்களா என்பதை கேளுங்கள். அப்படியெனில் யார் எதற்காக போன்ற செய்திகளையும் கவனமாய் கேட்டறியுங்கள். அவை பாலியல் தொந்தரவுக்கான முன்னுரையாய் இருக்கலாம்.

படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர் என எந்த விதத்திலும் இருக்கலாம் குழந்தைகளைத் தொந்தரவு செய்யும் நபர். எனவே ஒரு பொதுவான எச்சரிக்கை உணர்வை குழந்தைகளுக்கு ஊட்டுதல் அவசியம்.

குழந்தைகளிடம் திடீர் பாசம் பொழியும் உறவினர்கள் யாராவது இருந்தால் அவர்கள் மீது ஒரு கண் வைப்பது அவசியம். குழந்தைகளை கடைக்கு அழைத்துப் போகிறேன், திரையரங்கு அழைத்துச் செல்கிறேன் என முன்வந்தால் நாகரீகமாக தவிர்த்து விடுங்கள்.

ஆபாசப் புத்தகங்கள், படங்கள் போன்றவற்றை குழந்தைகளுக்கு காண்பித்து அவர்களை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்குவதும், பின்பு அதை வைத்தே அவர்களை மிரட்டி, பயமுறுத்தி தொடர் தொந்தரவுகளை கொடுப்பதும் பரவலாக நிகழும் செயல் என்பதால் எச்சரிக்கையுடன் கவனித்தல் அவசியம்.

நம்பிக்கைக்குரியவர் அல்லாத நபர், புகைப்படம் வீடியோ போன்றவற்றை எடுத்தால் “வேண்டாம்” என கண்டிப்புடன் மறுக்க குழந்தைகளைப் பழக்குங்கள். தனியே குழந்தைகளை வைத்து தகாத படங்கள் எடுக்கும் நிலையிலிருந்து தப்பிக்கலாம்.

90 விழுக்காடு பாலியல் தொந்தரவுகளும் குழந்தைகளுக்கு நன்கு தெரிந்த நபர்களாலேயே வருகின்றன. எனவே குழந்தைகள் உண்மையை விரைவில் பெற்றோரிடம் தெரிவிப்பது மிகவும் அவசியம். தாயும், மகளுமான மிகவும் தனிமையான சூழலில் நிகழும் உரையாடலே உண்மையை முழுமையாய் வெளிக்கொணரும்.

தன் சிறகின் கீழ் குஞ்சுகளைப் பாதுகாப்பது போல தனது குழந்தைகளைப் பாதுகாக்கும் கடமை அன்னையர்க்கு உண்டு. அதை சரிவரச் செயல்படுத்த குடும்பம் எனும் கட்டமைப்பிற்கு உள்ளேயும் வெளியேயும் அன்னையர் வழிகாட்டிகளாய் இருக்கவேண்டியது அவசியம்.

நல்ல தொடுதல் – தீய தொடுதல் விளக்க  ஒளிப்படம் கீழே இருக்கிறது.

முதுமையை எதிர்கொள்ள பத்து அம்சத்திட்டம்.

1. முதுமையில் பணம் மிகவும் அவசியம். வாழ்நாளில் சேமித்தது எல்லாவற்றையும் மக்களுக்காக செலவழித்த பிறகு, மக்கள் பெற்றோரை புறக்கணிக்கும் சம்பவங்கள் ஏராளம்.

2. உங்கள் வருமானத்தில் பாதி தொகையில் உங்கள் அன்றாட வாழ்க்கைச் செலவுகளை முடித்துக் கொள்ளவேண்டும். மீதி பாதியைச் சேமித்தால், அதில் பாதி எதிர்பாராத செலவுகளுக்காகத் தேவைப்படும். மீதிப்பாதிதான் உண்மையான சேமிப்பாக அமையும்.

3. முதியவர்கள் தங்கள் சுய சம்பாத்தியத்தில் சேர்த்தவை, பரம்பரையாக வந்த சொத்துக்கள் இவற்றை தமக்குப் பிறகு யார் யாருக்கு எவ்வளவு என்று பிரித்து தெளிவாக உயில் எழுதி, சாட்சிகள் கையொப்பமிட்டு, ரிஜிஸ்டர் செய்து வைத்துக்கொள்வது மிகவும் நல்லது. உயிலில் என்ன எழுதியிருக்கிறோம் என்பது சம்பந்தப் பட்டவர்களுக்குத் தெரிந்திருப்பது நல்லது.

4. வங்கியிலிருந்து அதிகத் தொகை எடுத்து வரவேண்டியிருந்தால் நம்பகமான ஒருவரைத் துணைக்கு அழைத்துச் செல்லவும்.

5. தடுமாற்றமுள்ளவர்கள் கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவர்களிடம் பரிசோதித்துக் கொள்வது நல்லது. காலையில் படுக்கையிலிருந்து வேகமாக எழுந்திருக்காமல், முதலில் அரை நிமிட நேரமாவது படுக்கையில் உட்கார்ந்த பிறகு மெதுவாக எழுந்து நடக்க வேண்டும்.

6. வழவழப்பான தரை, பாத்ரூமில் ஈரமான தரை, மார்பிள் தளம் போன்றவற்றால் நிலை தடுமாறி விழும் நிலை தோன்றலாம். டெலிபோன் அழைப்புக்குக் கூட வேகமாகச் செல்லாமல் நிதானம் கடைப்பிடிப்பது நல்லது.

7. உடற்பயிற்சி மேற்கொள்வதால் உடலில் இரத்த அழுத்தம் குறையும், எலும்புகள் வலுப்பெறும், மலச்சிக்கல் தோன்றாது. நல்ல தூக்கம் வரும்.

8. சிலர் மரணபயத்தால் நிலை குலைந்து தவிப்பார்கள். இவர்கள் மனநல மருத்துவரைக் கலந்து தகுந்த ஆலோசனைகள் பெறுவது நல்லது. மன உறுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

9. உணவு முறைகளில் வயதுக்கேற்ப மாற்றம் தேவை. வயது கூடும்போது ருசி மாறும், பசி குறையும், உண்ணும் உணவின் அளவும் மாறுபடும். காலையில் அதிகமாகவும், பகலில் மிதமாகவும், இரவில் குறைவாகவும் உணவு உண்ணவேண்டும்.

10. பற்றற்ற வாழ்க்கை வாழப்பழகிக் கொள்ளவேண்டும். தியானம் மூலம் மன அமைதி பெறலாம். சகிப்புத்தன்மை கூடும், உடல் நலம் பாதுகாக்கப்படும்.

கண்களில் அழுத்தம் "குளூகோமா"


குளூகோமா என்பது, கண்களில் அழுத்தம் காரணமாக, "ஆப்டிக் நரம்பு' பாதிக்கப்படுவதாகும். இதில், நரம்பு விரிவடைவதுடன், கண் பார்வை திறனும் குறையும். குளூகோமாவில் கண்களின் அழுத்தம் அதிகமாக இருக்கும். சாதாரணமாக இருக்கும் கண்களில் அழுத்தம் 11 முதல் 21 ட்ட்ஏஞ் வரை இருக்கும். ஆனால், குளூகோமா வந்துவிட்டால், கண் அழுத்தம் அதிகம் ஏறும்.

கண் பார்வை குறைவதால் கண் வலி, ஒரு பகுதியில் பார்வை மங்குதல் ஆகிய பிரச்னைகள் வரும். கண் வலியுடன் சிவப்பாக மாறுதலும் வரலாம். சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய், இதய நோய் ஆகிய உடல் பிரச்னைகள் உடையோருக்கு, குளூகோமா வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பெரும்பாலும் 50 வயது மேல் உள்ளவர்களுக்கு வரும்.

கண்களில் ஏற்படும் பிரச்னைக்கு, "ஸ்டிராய்டு' மருந்து அதிகமாக பயன்படுத்தினாலும், குளூகோமா வரலாம். பெற்றோருக்கோ அல்லது சகோதரர்களுக்கோ குளூகோமா இருந்தால், பரம்பரை நோயாகவும் இது வரும். முதலில் கண் பார்வை குறைபாடு இருக்காமல், கண்களில் அழுத்தம் மட்டும் அதிகம் இருக்கலாம். மேலும், நரம்பின் சில பகுதிகள் செயல்பாட்டை இழக்கும். இதன் காரணமாக, பார்வை மெதுவாக குறைய துவங்கும்.

நரம்பின் எல்லா பகுதியும் செயல்பாட்டை இழக்கும் நிலையில், கண் பார்வை முழுவதுமாக குறையும். எனவே, இதை முதலிலேயே கண்டுபிடித்து, தகுந்த சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். இப்பிரச்னைகள் யாருக்கு இருந்தாலும், அவர்கள் கண் பார்வை, கண் அழுத்தம், நரம்பு பகுதி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும், கண்களின், "ஆப்டிக்' நரம்பின் நிலையை மருத்துவர்கள் பரிசோதித்து குளூகோமா இருக்கிறதா என்று தீர்மானிப்பர்.

கண் அழுத்தம் இருந்தால், சொட்டு மருந்துகள் மூலம் முதல் நிலையிலேயே சரி செய்யலாம். சொட்டு மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த முடியாத நிலையில், அறுவை சிகிச்சை செய்யப்படும். குளூகோமாவின் ஒரு வகையில், லேசர் சிகிச்சையும் தரப்படும்.

குளூகோமா நோயை முதலிலேயே கண்டறிந்து, சிகிச்சை பெற வேண்டும். முற்றிய நிலையில் சிகிச்சை செய்தாலும் பலன் முழுவதுமாக கிடைப்பதில்லை. இதற்கு, "ஆப்டிக்' நரம்பின் தன்மையே காரணம். ஒருமுறை, "ஆப்டிக்' நரம்பின் பகுதி செயல் இழந்து விட்டால், அது மீண்டும் சரி செய்யப்பட முடிவதில்லை. எனவே, முதல் நிலை குளூகோமா சிகிச்சை பெரிதும் உதவும். குளூகோமா அறுவை சிகிச்சை, 15 முதல் 20 நிமிடங்களில் முடிந்து விடும். மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. இருப்பினும், சொட்டு மருந்துகளும், மாத்திரையும் சரியாக பின்பற்ற வேண்டும். நோயின் தன்மையை பொறுத்து, ஒரு மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை குளூகோமா நிபுணர்களிடம் கண்களை பரிசோதித்து கொள்ள வேண்டும். பிறந்த குழந்தைக்கும் குளூகோமா நோய் வரலாம். இதை, "கன்ஜெனிடல் குளூகோமா' என்பர். கண்களின் கருவிழி பெரிதாக இருக்கும். கண்களும் பெரிதாக இருக்கும். கருவிழியில் வெள்ளை நிறம் படிதல், நீர் வடிதல் ஆகிய மாற்றங்கள் ஏற்படும்.

இவ்வாறு இருந்தால், குழந்தையை அருகில் உள்ள கண் மருத்துவமனையில் உடனே காண்பிக்க வேண்டும். சிறுவயதில் குளூகோமா பிரச்னை வந்தால், அது பார்வையை அதிவேகத்தில் பாதிக்கும். சரியான கண் அழுத்தம் உள்ளவர்களுக்கும், குளூகோமா வரலாம். இதை, "நார்மல் டென்ஷன் குளூகோமா' என்பர். இதற்கும் சிகிச்சைப் பெற வேண்டும்.

இப்போதுள்ள நவீன ஓ.சி.டி., - ஸ்வாப், பில்டி டெஸ்ட் போன்ற பரிசோதனைகள் மூலம் கண்களின், "ஆப்டிக் நரம்பு' எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்று விரிவாக தெரிந்து கொள்ளலாம். இந்த பரிசோதனைகள் ஓ.பி.டி., முறையில் செய்யப்படும். அறுவை சிகிச்சைக்கு முன்னும், பின்னும் சிகிச்சை வேலை செய்கிறதா, இல்லையா என்பதை கண்டறியவும் இதை பயன்படுத்தலாம். குளூகோமா நோய் முதலிலேயே அறியவும், இந்த வகை பரிசோதனைகள் பயன்படும். குளூகோமா நோய் முழுமையாக வருமுன், பரிசோதனை செய்து சிகிச்சையை துவங்க, இந்த வகை பரிசோதனை முறைகள் உறுதுணையாக இருக்கின்றன.

Saturday, 1 October 2011

13 Dogs Jump Rope Together


Click Here To Join

If there is one thing we've learned from Guinness World Records, it's that there is a record for everything. No really, everything. Uchida Geinousha can attest to that. She just made it into the books as the handler of the most jump roping dogs. She is now a world record holder, and this video needs to be seen to be believed.

Per the video description: "Uchida Geinousha's 'Super Wan Wan Circus' based in Tsukuba City, Ibaraki Prefecture, Japan, offers a unique act for its audience; the incredible sight of 13 dogs skipping on a rope."

That's a lot of jump roping dogs. We were impressed back when we only saw one dog jumping back in May.