Sunday 29 May 2011

எச்சில் துப்ப தடை ! !


எச்சில் துப்ப தடை ! !

‎405. அனஸ்(ரலி) அறிவித்தார்.
கிப்லாத் திசையில் (உள்ள சுவற்றில்) நபி(ஸல்) அவர்கள் ...See More
‎405. அனஸ்(ரலி) அறிவித்தார். கிப்லாத் திசையில் (உள்ள சுவற்றில்) நபி(ஸல்) அவர்கள் சளியைக் கண்டார்கள். இது அவர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. அதன் பிரதிபலிப்பு அவர்களின் முகத்திலும் காணப்பட்டது. அவர்கள் எழுந்து தம் கையால் அதைச் சுரண்டினார்கள். 'நிச்சயமாக உங்களில் ஒருவர் தொழுகையில் நிற்கும்போது அவர் தம் இறைவனிடம் அந்தரங்கமாக உரையாடுகிறார். அவருக்கும் கிப்லாவுக்கும் இடையே அவரின் இறைவன் இருக்கிறான். எனவே எவரும் கிப்லாத் திசை நோக்கி உமிழக் கூடாது! தங்களின் இடப்புறமோ, தம் பாதங்களுக்கு அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும்!" என்று நபி(ஸல்) கூறிவிட்டுத் தம் மேலங்கியின் ஒரு பகுதியைப் பிடித்து அதில் உமிழ்ந்து அதன் ஒரு பகுதியை மறுபகுதியுடன் கசக்கிவிட்டு 'அல்லது இவ்வாறு அவர் செய்து கொள்ளட்டும்" என்று கூறினார்கள். Volume :1 Book :8 411. ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் சுவற்றில் (உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டு சிறு கல்லை எடுத்து அதைச் சுரண்டினார்கள். பின்னர் 'உங்களில் எவருக்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தம் முகத்துககு நேராகவோ தம் வலப் புறமாகவோ உமிழலாகாது; தம் இடப்புறமோ தம் இடது பாதத்தின் அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும்!" என்று கூறினார்கள். Volume :1 Book :8 415. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பள்ளிவசாலில் உமிழ்வது குற்றமாகும். அதை மண்ணுக்கடியில் மறைப்பது அதற்கரிய பரிகாரமாகும்." என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். Volume :1 Book :8

No comments:

Post a Comment