Sunday 29 May 2011

2010 இன் - கேவலமான டாப்-5 இந்தியர்கள்


ஒருகாலத்தில் புகழின் உச்சியில் இருந்து, இப்போது அதல பாதாளத்தில் தமது இமேஜை கெடுத்திருப்பவர்கள். நம் தேசத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தி , ஒவ்வொரு இந்தியப் பிரஜையின் அதிருப்திக்கும், கோபத்திற்கும், ( பொறாமை?) ஆளான, ஹீரோவிலிருந்து ஜீரோவுக்கு சறுக்கிய - கேவலமான டாப்-5 இந்தியர்கள். இது ஒரு தொடர் பதிவு தான். வாசகர்கள் தங்கள் கணிப்பை / விமர்சனத்தை அனுப்பி வைத்தால் நலம்.

1 ) முதல் இடம் பிடிப்பது - முன்னாள் மத்திய அமைச்சர் - ஆ. ராசா. இவர் செய்திருக்கும் ஊழல் என்று நம்பப்படுவது - சுமார் 1.76 லட்சம் கோடிகள். ஒன்னு போட்டு பக்கத்திலே 12 ஜீரோ போடணும். நம்ம தமிழ் நாடு மக்கள்தொகை 2010 கணக்குப்படி 6 .64 கோடி. நம்ம வீட்டுலே இருக்கிற குஞ்சு, குளுவான்களையும் சேர்த்து. அப்படிப் பார்த்தா, தலைக்கு 27 ,000 ரூபாய் இலவசமா தரலாம். இவங்க இலவசம் னு தர்றது - வீட்டுக்கு தான். அதுலேயும் கட்சி ஆளுங்களுக்கு, அதிலேயும் ஏழை , பாழைகளுக்கு ...
பங்கு போட்டது வரைக்கும் போதும்னு, அவங்களே திருப்தி ஆகி , அதுக்கு அப்புறம் வெளிலே வர்ற பணம். எச்ச கையாலே .. காகம் ஓட்டுவம்லே.. தி.மு.க. வாலையே நம்ப முடியலை. இம்புட்டு திறமைசாலியா நீ னு - பெருமை தாங்க முடியலை... இவ்வளவு நல்லது செஞ்சவரை கட்சி விட்டுக்கொடுக்குமா..? அதனாலே மாநாடு, மீட்டிங் எல்லாம் போட்டு - அவருக்கு சப்போர்ட் பண்றாங்களாம்... வாழ்க தமிழ்நாடு...
இத்தனை அமைச்சர் எங்க கட்சிக்கு னு Quota சொன்னா , மக்களுக்கு திறமையா நல்லது செய்யணும னு நினைச்சா ... ஐயோ பாவம்... எங்களுக்கு தேவை கட்சி நிதி, குடும்ப மேம்பாடு ...

2 ) சுரேஷ் கல்மாடி - காமன் வெல்த் புகழ்

ஒரு காலத்திலே , மகாராஷ்டிரா தூக்கிவைச்சு கொண்டாடிய தலைவர். இன்னைக்கு..? காமன் வெல்த் - விளையாட்டு நடக்குமாங்கிற அளவுக்கு மிரள வைத்த பெருமைக்குரியவர். உலக அளவில் இந்தியாவுக்கு தலை குனிவை ஏற்படுத்தியவர்.

நாட்டுலே நடக்குற விஷயங்களை எல்லாம் பார்க்குறப்போ - நிஜமாவே நம்ம பிரதமர் பொம்மை தானோ?

3) லலித் மோடி - IPL

திறமையான IPL நிர்வாகம் மூலம் - கோடி கோடியாக பணத்தை குவித்தவர். இனி வாழ்வின் மீதியை கோர்ட்டுக்கு மட்டும் செலவழிப்பார் போல..

4 ) பரமஹம்ச நித்யானந்தா

Google search engine இன் செல்லப் பிள்ளை. இவரைப் பற்றி சொல்ல என்ன இருக்கு ? போன வருஷம் இந்நேரத்திலே புகழின் உச்சி. இப்போ நிலைமை ... பாவம்.

5 ) நீரா ராடியா

மீடியாவின் சமீபத்திய செல்லம் . இவரால் சிக்கியது எல்லாமே பெரிய பெரிய திமிங்கிலங்கள். இவர் இல்லாமல் இப்போது எந்த செய்திகளும் இல்லை.

ஆகக் கூடி, ஆனா இந்த 5 பேரும், அசருவது மாதிரி தெரியலை. சட்ட ரீதியா சந்திக்கிறாங்க ...

1 comment: