பேஸ் புக் மூலம் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ். யுவதி! (ஆதாரம் இணைப்பு)
[ 2011-07-04 07:45:23 | வாசித்தோர் : 2770 ]வெளிநாடுகளில் குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் வாழ்ந்து வருகின்ற இலங்கைத் தமிழர்களை ஏமாற்றி தாயகத்தைச் சேர்ந்த தமிழ் யுவதி ஒருவரால் பேஸ் புக் சமூக இணைப்பு இணையத் தளம் மூலமாக குறைந்தது ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது.
ஏமாற்றுப் பேர்வழியின் உண்மையான பெயர் கந்தையா தர்ஷனா. சொந்த இடம் யாழ். சாவகச்சேரியில் கல்வயல் கிராமம். 1986 ஆம் ஆண்டு செப்டெம்பர் 25 ஆம் திகதி பிறந்தவர். தற்போது கொழும்பில் இருக்கின்றார்.
இவர் பல பெயர்களிலும் பேஸ் புக்கில் நடமாடுகின்றார். யது கார்த்தி என்கிற பெயரிலும் பேஸ் புக் கணக்கு வைத்து இருக்கின்றார்.
பேஸ் புக் பாவனையாளர்களான புலம்பெயர் தமிழர்களில் பல வயதுக்காரர்களையும் கைக்குள் போட்டுக் கொள்வார்.
இவர் அழகான தோற்றம் உடையவர். குழைந்து பேசுவார்.
அனுதாபத்தை பெறுதல், கவர்ச்சி காட்டுதல் ஆகிய உத்திகளைக் கையாண்டு பணம் பறிக்கின்றமை இவரின் வாடிக்கை.
பெற்றோர் இறந்து விட்டனர் என்பார், வெளிநாட்டில் படிக்க பெருந்தொகை நிதி தேவை என்பார், மன பாதிப்பு உடையவர் போல கைகளை சவர அலகால் அறுத்துக் காண்பிப்பார். - இவையெல்லாம் அனுதாபம் பெறுகின்றமைக்காக.
காதலிக்கின்றமை போல் நடிப்பார், செக்ஸியான தோற்றத்தில் தோன்றுவார். கிளுகிளுப்பு ஊட்டுகின்ற வார்த்தைகள் பேசுவார். - இவையெல்லாம் கவர்ச்சி காட்டுதல் என்கிற உத்தியின் கீழ்.
ஸ்கைப், தொலைபேசி ஆகியவற்றின் மூலமாக தொடர்புகளை நெருக்கமாக்கிக் கொள்வார்.
பணம் கிடைத்தமையுடன் அனுப்பியவருடனான தொடர்பை அறுத்துக் கொள்வார்.
சாவகச்சேரியின் கொமர்ஷல் வங்கியில் உள்ள இவரின் கணக்கு ஒன்றுக்கு மாத்திரம் ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றது.
மகளின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டு இருக்கின்ற பணத் தொகையை பார்த்தபோது வங்கியிலேயே தாய் மயங்கி விழுந்த சம்பவமும் இடம்பெற்று உள்ளது.
யுவதியின் மோசடி நடவடிக்கைகளுக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒருவர்தான் சூத்திரதாரி . இந்நபரின் பெயர் ஜெய்சன்.
யுவதியின் கணக்குக்கு வருகின்ற பணத்தை சொந்தக் கணக்குக்கு இவர் மாற்றிக் கொள்வார்.
தற்போது யுவதியின் கையடக்கத் தொலைபேசி இவரின் பாவனையில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தொலைபேசி அழைப்பு விடுக்கின்றபோது இவர் படுகொலை அச்சுறுத்தல் விடுத்து வருகின்றார்.
இம்மோசடிகள் குறித்து இலங்கைப் பொலிஸாருக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று உள்ளன. இம்மோசடிகள் குறித்த பூரண தகவல்களை பொலிஸார் திரட்டி வருகின்றனர். அத்துடன் ஏமாற்றுப் பேர்வழிகளான யுவதி, ஊடகவியலாளர் ஆகியோரின் நடவடிக்கைகளை மிகவும் நெருக்கமாக கண்காணித்து வருகின்றார்கள்.
இதே நேரம் பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர் நாடுகளில் வழக்கு நடவடிக்கைகளை முடுக்கி விட்டு உள்ளார்கள். வெளிநாட்டு நீதிமன்றங்களின் பிடியாணை உத்தரவுகள் மூலம் சர்வதேச பொலிஸாரைக் கொண்டு யுவதி, ஊடகவியலாளர் ஆகியோரைக் கைது செய்கின்றமை குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருகின்றார்கள்.
பேஸ் புக் பாவனையாளர்களான புலம்பெயர் தமிழர்களை மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். அத்துடன் இந்த யுவதியால் ஏமாற்றப்பட்டவர்கள் வேறு யாராவது இருக்கின்ற பட்சத்தில் எம்முடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று கோரப்படுகின்றார்கள்.
மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் :- 0094778200114, 0094772398030
மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கைப் கணக்கு பெயர்கள் :- madhu, karthika
No comments:
Post a Comment